ராஜபக்சே போர்க் குற்றவாளி, மக்கள் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:குமுதம்




'லநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’’ என்ற பழமொழி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே விஷயத்தில் பலித்தே விட்டது.  புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே தற்போது போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்ப ட்டிருக்கிறார். ‘யார் இந்தப் பூனைக்கு மணி கட்டியது?’ அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் உள்ள மக்களின் நிலையான நீதிம ன்றம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ள து.

கடந்த 14 மற்றும் 15-ம் தேதியில் நடந்த இலங்கை அரசுக்கு எதிரான அந்த விசாரணையில், ஐ.நா. குழுவின் பேராசிரியர் பிரான் சுவா ஹுராட், இந்தியப் பிரதிநிதியான உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார், எகிப்திய எழுத்தாளரான ஐ.நா.வின்  ஆலோசகர் நவல் அல் சடாவி மற்றும் மூன்று பெண்கள் உள்பட பதினொரு பேர் நீதிபதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதில் இலங்கை அரசு மீதான போர்க் குற்றங்கள்,  தமிழினப் படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், மனித  உரிமை மீறல்கள், சரணடைந்த மக்கள் மீதான வன்முறைகள், தடை செய்யப்பட்ட நச்சு வாயு மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளைப்  பயன்படுத்தியது, மருத்துவமனை மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த போர்க் குற்றங்களை நிரூபிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், தமிழ் மக்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்ளும்  காணொளிக் காட்சிகள், மக்களின் நேரடி சாட்சியங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. போர் நிறுத்த கண்காணிப்புப்  படைத் தலைவரான எரிக்சன் அளித்த சாட்சியங்களின்படியும் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அந்த  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 இந்தச் செய்தி, தமிழுணர்வாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அந்நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த் தவரான லண்டனில் உள்ள உலக சமாதான ஆதரவுக் குழுத் தலைவர் குணபாலசிங்கத்திடம் பேசினோம். ‘‘தமிழீழ விடுதலைப்  புலிகள் இயக்கத்துக்கு முதன்முதலில¢ இந்திய அரசு தடை விதித்த நிலையில், அதைத் தொடர்ந்து  மேற்குலக நாடுகள்  புலிகளுக்குத் தடை விதித்தன.   அதனாலேயே அந்தப் போரில் புலிகள் சரிவைச் சந்தித்தனர். இன்றைக்குத் தீவிரவாதிகள் என்று  கூறப்படுபவர்கள்தான் நாட்டின் விடுதலைக்குப்பின் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள். இதுதான் உலக நியதி.

 டப்ளின் நகரில் நடந்த விசாரணையின் போது, ‘அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசுக்கு இந்தியா,  பாகிஸ்தான், ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி வழங்கியது குறித்தும் அலசப்பட்டது.  இலங்கைக்கு உதவிய இந்த  நாடுகள் மீதும் ஐ.நா. சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் டப்ளின் நீதிமன்ற விசாரணையில்  கருத்துத்  தெரிவிக்கப்பட்டது’’ என்றார் அவர்.

இலங்கைத் தமிழ் பிரமுகரான மறவன்புலவு க.சச்சிதானந்தத்திடம் பேசினோம்.

‘‘ஈழப்போரில் தமிழர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும் உலக அரங்கில் சிங்கள அரசுதான் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆள £கியுள்ளது. அதற்கு டப்ளின் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பே முக்கியக் காரணம். இந்தத் தீர்ப்பு பன்னாட்டு மன்றத்தின்  (ஐ.நா.சபையின்) மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை மூலம் அந்தச் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூனிடம்  சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்  அவர்.
    
- ஆர்.எம்

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails