"கருணாநிதியின்" இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது: கவிஞர் புலமைப்பித்தன்
Posted On Tuesday, 19 January 2010 at at 13:05 by Mikeதமிழக முதல்வர் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பின்னடைவு வந்திருக்காது என்று கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான நேற்று கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றவரும், தமிழீழ விடுதலைக்கு உந்து சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதி அறிமுகாம் ஆகினோன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று இல்லாமல் போனது தமிழினத்திற்கு எவ்வளவோ பெரிய பேரிழப்பு மனிதநேயத்தினுடைய மிக உயர்ந்த உன்னதத்தை பெற்றவர்.
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுடன் நெருக்கமான உறவினைக்கொண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்க தமிழ்மக்களுக்காக செயற்பட்டார். இப்படிப்பட்டவரை இழந்து இன்று தவிக்கின்றோம். இன்நிலையில் சிறீலங்காவின் வெற்றி என்பது ஆறுநாடுகள் கூட்டாக சேர்ந்து நிகழந்துபோன நிகழ்வு.
இந்தியாவின் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் கடற்படையின் முழுமையான பங்களிப்புக்கள் எல்லாம் இதில் உண்டு தமிழக முதல்வர் கருணாநிதி தன்னுடைய ஆட்சியினை காப்பாற்றுவதற்காக இந்திய அரசினை தாங்கிப்பிடிக்கவேண்டிய நிலைக்கு உள்ளானார்.
இந்தியஅரசு சிறீலங்காவிற்கு பல்லாயிரம் கோடி பணத்தினை கொடுத்தது, ரேடர் கொடுத்தது என்ன உதவிகள் செய்யவேண்டுமோ அனைத்தையும் கொடுத்து தமிழீழ மக்களை கொன்று குவிப்பதற்கு பெரும் காரணமாக இருந்தது.
கருணாநிதியின் இடத்தில் புரட்சித்தலைவர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது. தமிழ் மக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்காது, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்அவர்களின் மறைவானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தாக்கத்தனை ஏற்படுத்தியுள்ளது என்று கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
--
தோழமையுடன்......
Muthuraja.I
--
தோழமையுடன்......
Muthuraja.I
கேப்பைல நெய் வழியுதுன்னா கேட்பாருக்கு எங்கே போனது?
கருணாநிதியின் இடத்தில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தான் ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கைச்சாத்தானது. பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியப் படை அனுப்பப்பட்டது. புலிகள்-இந்திய ராணுவம் யுத்தம் நடந்தது.