புதிய தசாப்தம் பிறக்கிறது! தமிழர் உரிமைப்போர் புதிய வடிவம் எடுக்கிறது!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது!!!


புதிய தசாப்தம் பிறக்கிறது! தமிழர் உரிமைப்போர் புதிய வடிவம் எடுக்கிறது!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது!!!

புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றனகடந்த தசாப்தங்களில் சிறிலங்கா அரசின்இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்துஉலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர்.

2000 ஆம் ஆண்டில் கடந்த தசாப்தம் ஆரம்பித்த போது தமிழ் மக்கள் அதை
சமாதானம் குறித்த நம்பிக்கையுடன் தான்எதிர்கொண்டனர்தமிழ் மக்களின்
நியாயத்துடன்கூடிய சமாதானம் குறித்த நம்பிக்கை அடுத்த சில ஆண்டுகளிலேயேகருகிப் போனது. 2009 ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் வரலாற்றில் ஒருபோதும்எதிர்கொள்ளாத அளவு கொடுரங்களை சிங்கள அரசின் கொடிய கரங்களால் நாம்எதிர்கொண்டோம்.  தற்போது புதிய தசாப்தத்தில் காலடி வைக்கும் இவ்வேளையில்இனிவரப்போகும்
ஆண்டுகளை புதிய நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்வோம்.
2010 இல் ஆரம்பமாகும் இப்புதிய தசாப்தத்தின்போது தமிழ் மக்கள் தமக்குரித்தான
உரிமைகளை அனைத்து வகையான சனநாயக வழிமுறைகளூடாகவும்
வென்றெடுக்கவென மீளவும் உயிர்த்தெழுவார்களென்பதில் ஐயமெதுவுமில்லை.
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை உருவாக்கும் தமிழ்
மக்களின் அரசியல் அபிலாசையின்பின் நாமெல்லாம் ஒருமித்து நிற்கின்றோம்.
இதேவேளையில் இவ் அரசியல் அபிலாசைக்காக குரல் கொடுப்பதற்கோ அல்லது
செயற்படுவதற்கோ தற்போது சிறீலங்காவில் எவ்வித அரசியல் வெளிகளுமேயில்லை என்பதை நாமறிவோம்.அதனாற் தான்நாம் இவ் வருடம் அமைக்கத் திட்டமிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை நிறுவவும் தமக்கேயுரித்தான இறைமையை நிலைநாட்டுவதற்குமான அரசியல்வெளியை இலங்கைத்தீவில் உருவாக்க உழைக்குமென்பதையும் நாம் திடமாக நம்புகிறோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில்
குறிப்பிட்டவாறு – நமது தேசத்தை மீள்நிர்மாணம் செய்யும் முயற்சியில் நமது
தேசத்தின் அறிவு பொருள் மற்றும் நிதிசார் அனைத்து வளங்களையும் தேசத்தின்
சேவைக்காக ஒருங்கிணைக்கும் வகையில் நம்முடன் அணிதிரளுமாறும் புதிய
தசாப்தத்தில் நமது விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த எம்முடன்
கைகோர்த்து நிற்;குமாறும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாம்
அறைகூவல் விடுக்கின்றோம்உங்கள் அனைவரிதும் ஆதரவுடனும் பங்களிப்புடனும்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழரினது அதிகார மையமாக வலுப்பெறும்.
அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுடன் உரிய முறையில் தொடர்புகளைப்
பேணி யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட நமது மக்களது வாழ்வை மீள்
நிர்மாணம் செய்ய உழைப்பதே நமது உடனடி இலக்காகும்யுத்தத்தின்போது
நமது மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மனிதத்திற்கு எதிரான
குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு போன்றவைக்கெதிராக நீதி வழங்கும்
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம.;
வகைகூறும்நிலையென்பது நிலையான சமாதானத்தின் இன்றியமையாத ஒரு
அம்சமாகும்அதுபோலவே அனைத்துலக சமூகத்தின் செயலறுநிலை பன்னாட்டு
அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதோடு
சட்டங்களுக்கமைந்த ஆட்சி என்ற கோட்பாட்டினையும் கேலிக்குரியதாக்கிவிடும்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்தினை அமைப்பதற்கான மதியுரைக்குழுவின் அறிக்கையினை வெளியிட
இருக்கிறோமென்பதனை இத் தருணத்தில் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
வெளியீட்டினைத் தொடர்ந்து ஒரு குறுகிய காலத்துக்கு இவ்வறிக்கை மக்கள்
மத்தியிலான கருத்துப்பரிமாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.
2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் இந்தப்
பிரபஞ்சம் மானிட முயற்சிகள்அனைத்துலக உறவுகள் எல்லாமே தர்மத்தின்
சக்கரத்தில் சுழலும் காலம் என்றோ வரும் எனக் கூறியிருந்தார்கலாநிதி
மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளில் இதனைக் கூறுவதாயின்
தர்மத்தின் அடிப்படையிலமைந்த பிரபஞ்சத்தின் அச்சு நீளமானதென்றாலும் அது
நீதியின் பக்கமே வளையும்”.
தெற்காசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலையும்கவனத்திற்கொண்டு
தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைத்திட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக சமூகத்தின் மத்தியில் முனைப்புடன் செயற்படும்புதிய ஆண்டிலும்
அதற்கப்பாலும் நாம் நமது விடுதலைப் பயணத்தில் முன்னேறிச் சென்றிடுவோம்
என்ற நம்பிக்கையோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்க முயற்சியின் இணைப்பாளர்
என்றவகையில் தமிழரனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
மேலதிக விபரங்களுக்குinfo@govtamileelam.org
இவண்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்கு
thanks
http://www.nerudal.com/nerudal.13152.html/ru-eelam

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails