குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கருணாநிதியை விசாரிப்பேன் : வைகோ பேச்சு
Posted On Saturday, 19 December 2009 at at 15:13 by Mikeஉசிலம்பட்டி : முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் கருணாநிதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரிப்பேன் என்று வைகோ கூறினார்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்டக்கூடாது என வழியுறுத்தி டிச.29ல் நடக்கவுள்ள மறியல் போராட்டம் குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உசிலம் பட்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
கருமாத்தூரில் அவர் பேசுகையில்,""கேரள அரசு புதிய அணை கட்டினால் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும். புதிய அணைக்காக 1.20 லட்சம் டன் பாறைகளை உடைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வெடிபொருட்களும் தயார் நிலையில் உள்ளன. இதனால் முல்லைபெரியாறு அணை யின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. புதிய அணை அமைத்ததும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரள அரசு மறுக்கும். வரும்முன் காப்போம் திட்டமாக புதிய அணை அமைக்க விடாமல் வரும் டிச.29ல் கேரள பகுதிக்கு தமிழகத்தில் இருந்து எந்த பொருளும் செல்ல விடாமல் மறியல் நடத்தப்படுகிறது. ஐந்து மாவட்ட மக்களும் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தென் மாவட்ட மக்கள் விழித்தெழுந்தால் அவர்களின் பேராட்டத்தை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை'' என்றார்.
*செல்லம்பட்டியில் பேசுகையில், ""அச்சுதானந்தன் தரப்பினர் நமது உரிமைகளை தடுக்கின்றனர். கருணாநிதியை நான் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரணை நடத்துவேன். சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப்பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு 32 முறை வாய்தா வாங்கியது. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்க கூடாது. 5 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று கேரள வக்கீல் கோரியபோது கருணாநிதி தமிழக வக்கீல் மூலம் பெஞ்ச் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து விட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது என்று நாடகமாடுகிறார். இது போன்று ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறமுடியும். கருணாநிதியும், மத்திய அரசும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டனர். இந்தபோராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்,'' என்றார்
நன்றி http://naamtamilar.org/tamil5-19-12-09.php