சிங்கள பல்லக்கு தூக்கும் சன் குழுமம் !!!இது ஏற்க்கனவே தெரிந்த விஷயம் தான் ... அதன் மற்றோர் உதாரணம் இன்றைய தினகரனில் வெளியான ஒரு செய்தி ...
========================
மலையாளப் படமான 'பம்பாய் மிட்டாய்'ல் கதாநாயகியாக நடித்திருப்பவர் நீலாம்பரி பெருமாள். பரதநாட்டியமும், கதகளியும் பயின்றிருக்கும் இவர், தில்லியில் சட்டம் படித்தவர். நாடகங்களில் நடித்தபடியே மாடலிங் செய்து கொண்டிருந்த இவரை, சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். நீலாம்பரியின் அப்பா, நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் வேறு யாருமல்ல, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் முக்கியத் தலைவரிகளில் ஒருவரும், இலங்கை வடகிழக்கு மாகனத்தின் முன்னாள் முதல்வருமான வரதராஜ பெருமாள்
கமெண்ட்ஸ்: (தமிழ்க்கு எப்ப வர்றிங்க ??)
========================
இது குறித்து ஒரு சில கருத்துக்கள்:
1) தமன்னா, விஜய் ஆண்ட்டனி , கருணாஸ், நகுல் என்று ஒரு குறுப்பிட்டவர்களை மட்டும், (அதிக) வெளிச்சம் போட்டு , மற்றவர்களை இருட்டடிப்பு செய்யும் சன் குழுமம் , சரிந்து விழும் வெளி நாட்டு வியாபாரத்தை தூக்கி நிறுத்த இந்த நீளம்பரியையும், அவர் நடிக்கப் போகும் படங்களையும் அதிக முக்கியத்துவம் வரும்காலங்களில் கொடுக்கலாம். இவரையும் புறக்கணிக்க தயாராகுவோம்.


2) "நன்கு அறிமுகமான" என்று வரதராஜ பெருமாளை குறிப்பிடுகிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை மீண்டும் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தப் பார்க்கிறார்களா ? என் இந்த திடீர் பாசம் ? ஏதேனும் உள்குத்து உள்ளதா ?


பொறுத்திருந்து பார்ப்போம்.


--
ம.பொன்ராஜ்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails