மகிந்தவினை, தமிழ் பா.உ தொடர்ந்து இந்தி பாடகியும் இலங்கை சென்று பாட்டு பாடி மகிழ்விப்பு


நம்ம வேட்டை காரனும் அடுத்து இலங்கை சென்று மகிழ்விக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதான் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதன் மூலம் சோனியாவின் அன்பை பெற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகும் திட்டம் உள்ளதாம், அதனால்தான் வேட்டைகாரனுக்கு தமிழர்கள் எதிர்த்து எந்த மன்னிப்பும் கேட்காமல் இருக்கிறாராம் நம்ம தூங்கு மூஞ்சி இளைய தமிழின துரோகி.

இது குறித்து அதிர்வு செய்திகள் இதோ தொடருங்கள்

பிரபல இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே பாட மகிந்த கேட்டு ரசித்தார்
16 December, 2009 by admin
இலங்கை ஜனாதிபதியின் பாரியார் (முதல் பெண்மணி) பிரபல இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பை விடுத்திருந்தாராம். அதற்கமைவாக அவர் நேற்றைய தினம் இலங்கை சென்றிருந்தபோது அலரிமாளிகை சென்று தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்து, அவருக்காக தனிப்பட்ட சில பழைய பாடல்களை பாடிக்காட்டியுள்ளார் என விடயம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்தனர். கடந்த காலத்தில் மகிந்த பல சாதனைகளைப் புரிந்துள்ளதால் அரசவை வந்து இந்தப் பாடகி மகிந்த மதிமயங்க பாடியுள்ளார்.

பெரும் இசைப் பிரியரான மகிந்த, ஆஷாவின் பாட்டில் மயங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பாட்டில் மயங்கி மகிந்த எதனை ஆஷா பேரில் எழுதிவைக்கப் போகிறாரோ தெரியவில்லை. அலரி மாளிகையில் பின்னர், முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்ட்டு மகிந்தவுடன் அவர் திரும்பவும் சில பாடல்களைப் பாடியுள்ளார். சுராலியாகெ என்ற பிரபல ஹிந்திப் பாடலைக் கேட்கவே மகிந்தவின் மனைவி ஆஷா போன்ஸ்லேயை இலங்கைக்கு அழைத்திருக்கிறார்.

லட்சக் கணக்கான தமிழர்கள் வதை முகாமில் அடைபட்டு, வாழ்விழந்து தவிக்கின்றனர். இறுதிப் போரில் 20,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை நடத்தி முடித்துவிட்டு சர்வ சாதாரணமாக ஆஷா போன்ஸ்லே பாட்டை ரசித்துக்கொண்டிருக்கிறார் இவர். இவர் தான் பிறவியிலேயே ஒரு சிங்கள அரக்கன் என்றால் இங்கு வந்து பாட்டுப் பாட வேண்டிய அவசியம் ஆஷாவுக்கு ஏன் வந்தது?.

இசைக் குயில் எனப் பெயர் பெற்றவர் ஆஷா போன்ஸ்லே. பரம்பரையாக சிங்கள காடையர் இனத்தில் வந்தவர் மகிந்த, இந்தக் குயிலை அடித்து குழம்புவைத்தாலும் வைத்துவிடுவார்.

நன்றி அதிர்வு

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails