ஒட்டு பொறுக்கி'களுக்கு பல்லக்கு தூக்கும் நக்கீரன். தேர்தல் ஜால்ரா: இருட்டடிப்பு செய்யப்படும் சீமான் மற்றும் 'நாம் தமிழர் இயக்கம்'
Posted On Friday, 27 November 2009 at at 09:45 by Mikeவரப் போகும் தேர்தலுக்கு இப்போது இருந்தே மக்களை மூளை சலவை செய்யும் வேலையை நக்கீரன் தொடங்கி விட்டது. அதான் "சீமான் பெயர் உள்ளதே ?"என்று வாதிடலாம். நமது கேள்வி, நக்கீரன் எப்படி 'சீமானை'யும் , இதர 'ஸ்டாலின்' உள்ளிட்ட ஓட்டுபொறுக்கிகளையும் ஒரு சேரக் கருதலாம் என்பதே? 'பெயரை' வெளியிடாமல் செய்யும் மோசடியை விட, பெயரை ஒரு ஓரமாக வெளியிட்டு ஓரம் கட்டும் நக்கீரனின் இந்த மோசடி வன்மையாக கண்டிக்க தக்கது.
-- ம.பொன்ராஜ்

மொத்த வாக்காளர்களில் சுமார் மூன்று கோடிக்கு மேல் இளைஞர்கள் என்பதால் அரசியல் கட்சிகளும் இளைய தமிழகத்தின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த 8-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 5,060 இளைஞர்களிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 57.90 சதவீதம் பேர் 18-25 வயதுக்குட்பட்டவர்கள். எஞ்சியுள்ளவர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள். இளைஞர்களில் பள்ளிக்கல்வி வரை படித்தவர்கள் 52.76 சதவிகிதத்தினர். 47.23 சதவீத இளைஞர்கள் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருந்தனர்.

""எல்லா கட்சியும் ஒரே மாதிரிதான் இருக்கு. தலைமைக்கு நெருக்கமா இருக்கிறவங்க தயவு இருந்தால் உடனே பதவிக்கு வந்துடலாம். புதியவர்களுக்கு பதவி கொடுக்கிறது இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் கட்சியில் சேரணும்னு நினைக்கிறோம். ஆனால் ஓட்டு போடறது வேற...'' என்று இந்த தலைமுறையின் எண்ணத்தை பிரதிபலிக்கிறார் திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர் ஜான்.
இன்றைய இளைஞர்கள் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வதில் ஓரளவு ஆர்வம் காண்பிக்கிறார்கள் என்பதும் சர்வேயில் தெரிய வந்த முக்கிய செய்தி. பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாளிதழ்கள், வார இதழ்கள், டி.வி., இண்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் அரசியல் நடப்புகளை தெரிந்து கொள்வதாக கூறுகின்றனர்.
இளம் தலைவர்கள் பற்றி சர்வேயில் வெளிப்பட்ட கருத்துக்கள் :

* மதுரை திருமங்கலத் தைச் சேர்ந்த செங்கிஸ்கானும் ஸ்டாலினைக் கொண்டாடு கிறார். இவர் அ.தி.மு.க.வில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ஹக்கீமின் மகன். ""அ.தி.மு.க.வில் எங்களைப் போன்ற இளைஞர் களைக் கவரும் விதமான தலைவர்கள் இல்லை. ஜெய லலிதாவைத் தவிர இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லை. ஸ்டாலினுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. அவர் பெயரிலோ, அவரது ஆதரவாளர்கள் பெயரிலோ பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் வராமல் பார்த்துக்கொள்கிறார். அதனால் இளைஞர்கள் மத்தியில் ஸ்டாலின் இமேஜ் உயர்ந்திருக்கிறது'''என்கிறார் கல்லூரி மாணவ ரான செங்கிஸ்கான்.
* ""மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக எங்க பகுதியில் நிறைய பெண்கள் கலைஞர் மகனுக்கு ஆதரவாக மாறியிருக்காங்க. நான் வேலை பார்க்கும் ஐ.டி.கம்பெனியிலும் கூட நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க'' என்கிறார் சென்னை லாவண்யா.
* ""சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்ப யணம் வந்த ராகுல்காந்தியின் எளிமை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கவுன்சிலரையோ, எம்.எல்.ஏ.வையோ பார்க்கணும்னா கூட ஓவர் பந்தா காமிப்பாங்க. நேரு குடும்பத்து வாரிசுங்கிற எந்த பந்தாவும் இல்லாமல் எல்லார்கிட்டயும் பழகினார். ராகுல் ஒரு நம்பிக்கையான தலைவரா உரு வாகிறார்'''என உருகினார் கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த அனிமேஷன் நிபுணர் சுப்ரமணியன்.

* ""ராகுல் இந்தியா முழுக்க கலக்குகிறார். அவரைப்போன்ற இளைய தலைவர்கள் இந்தியாவுக்கு தேவை. நிறைய விஷயங்களில் வெளிப்படையாக பேசுகிறார். காங்கிரஸ் கட்சியில் நியமன பதவிகளை ஒழித்து தேர்தல் மூலம் புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவாங்கன்ற நிலைமையை உருவாக்கியிருக்கிறார்'''என்கிறார்கள் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த விஜி, திருவேங்கடம், லட்சுமி போன்றவர்கள்.
* ""இந்திய அளவில் எல்லா தலைவர்களுமே வயது முதிர்ந்த வர்களாக இருக்காங்க. இளைய தலைமுறையின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள ராகுல் மாதிரி இளை ஞரால்தான் முடியும். இந்தியாவை வழிநடத்த பாரம்பரியமான குடும் பத்தைச் சேர்ந்த ராகுல்தான் பெஸ்ட். போன முறை நான் விஜயகாந்துக்கு ஓட்டு போட்டேன். வருகிற தேர் தலில் ராகுல் சொல்றவருக்குதான்'''' என அழுத்தமாக சொல்கிறார் மதுரை கண்ணன்.

* ""ஜெயலலிதா தனி மனுஷின்னா லும் இரும்பு மனுஷி. அவங்க ஆட்சியில் அதிகாரிகள் பயப்படுவாங்க. ரவுடிகள் அலறி அடிச்சு ஓடுவாங்க. இப்ப அப்படி இல்லையே. அவங்க கட்சியில் வெங்க டேஷ் இப்பதான் வளர்ந்து வருகிறார். அதனால் ஜெயலலிதாதான் ஒரே சாய்ஸ் '' என்கிறார் பாளையங்கோட்டை விஜயா.
* ""எங்க அப்பா, அம்மா இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி, மாறி ஓட்டு போட்டாங்க. என்ன வளர்ச்சியைக் கண்டோம். 40 வருஷத்தில் லஞ்சம்தான் அதிகமாயிருக்கு. லஞ்சத்தை ஒழிப்பேன்னு சொல்ற விஜயகாந்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கணும். அவர்தான் தைரியமான தலைவர்'' என்பது தேவங் குளம் லட்சுமணன், திருவல்லிக்கேணி சுதாகர் போன்றவர்களின் கருத்து.
சர்வே சொல்லும் செய்தி
1. இன்றைய இளம் தலைமுறையின் நாயகன் என்கிற தகுதியை மு.க.ஸ்டா லினுக்கு வழங்கியிருக்கிறார்கள் சர்வேயில் கலந்துகொண்ட இளைஞர்கள். 23.32 சதவீத இளைஞர்களின் ஆதரவை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். ஸ்டாலினுக்கு, மற்ற மண்டலங்களை விட திருச்சி மண்டலத்தில் அதிக அளவாக 34.31 சதவீத இளைஞர்கள் ஆதரவு காணப்படுகிறது. சென்னை மண்டலத்தில் தான் ஸ்டாலினுக்கான ஆதரவு குறைவாக காணப்படுகிறது. சென்னை மண்டலத்தில் ஜெயலலிதா (15.45%), விஜயகாந்த் (13.63%), ராகுல் காந்தி (12.72%) ஆகியோரை விட குறைவான 7.27% சதவீத ஆதரவு மட்டுமே பெற்றிருக்கிறார்.

3. தமிழக அளவில் இளைஞர்களை கவர்ந்த இளம் தலைவர்கள் வரிசையில் மூன்றாவது இடம் விஜயகாந்துக்கு கிடைத் திருக்கிறது. 16.79% இளைஞர்கள் ஆதரவு இவருக்கு இருக்கிறது. விஜயகாந்துக்கு அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 19.25% ஆதரவும், கோவை மண்டலத்தில் 18.47% ஆதரவும் காணப்படுகிறது.
4. எங்களைக் கவர்ந்த இளம் தலைவர் களே இல்லை என்கிற பதில்தான் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது (15.61%).
5. இந்த வயதிலும் சுறு சுறுப்பாக ஒரு இளைஞரைப் போல செயல்படும் கலைஞர்தான் எங்களுக்கு பிடித்த இளம் தலைவர் என்று பிடிவாதமாக அவர் பெயரைக் குறிப்பிட்டவர்கள் 4.15 சதவீதம் பேர்.
6. அ.தி.மு.க.வை விரும்புகிறவர்கள், அங்கே இளம் தலைவர் என எவரையும் தனியாக குறிப்பிட முடியாது என விட்டு விட்டனர். அதனால் ஜெ. பெய ரையே குறிப்பிட்டவர்கள் 6.52% பேர்.
7. இதுதவிர பிற தலைவர்கள்(அன்புமணி ராமதாஸ், டாக்டர்.வெங்கடேஷ், ரஜினி, விஜய், சீமான், சுதீஷ், ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள்) என 9.09% இளைஞர்கள் குறிப்பிட்டனர்.
8. தமிழக அளவில் 3.55 சதவீத இளைஞர் கள் ஆதரவைப் பெற்றுள்ள வைகோ, கோவை மண்டலத்தில் 9.78 சதவீத இளைஞர்களை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

9. திருமாவளவனுக்கு 2.76 சதவீத இளைஞர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய் திருந்தனர்.
* இளைய தமிழகத்தின் ஆதரவைப் பெற்ற
கட்சித்தலைவர் யார்?
* வரும் தேர்தலில் இளைஞர்கள்
வாக்களிக்கப்போவது யாருக்கு?
-நக்கீரன் சர்வே முடிவுகள்
வரும் இதழ்களில்...