நாம் தமிழர் இயக்கம் போராட்டம் எதிரொலி-சிங்கள கைக்கூலி சுற்றுப்பயணம் ரத்து-கொழும்பு ஓட்டம்


சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா இருவரும் தமிழின அழிவுக்குக் காரணமான ராஜபக்‌ஷே வின் பாவத்திற்குப் பரிகாரம் தேடி தமிழகத்தின் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர்.

தன்மானமுள்ள நாம் தமிழர்இயக்கத் தோழர்கள் அவர்களுக்கு எதிராக செல்லும் இடம் எல்லாம் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் ராமேசுவரம்,மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு இன்று செல்வதற்குத் திட்டமிட்டிருந்த சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா ஆகியோர் இன்று காலை திருச்சி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர்.அவர்களைக் கண்டித்து திருச்சி நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் ஜெயதேவன்,சுப்பிரமணிய்ன் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் அவன் வருகையைக் கண்டித்து மத்திய பேருந்து நிலையம் அருகே கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகினர்.

மேலும் அவர்கள் தமிழகத்தில் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறினர்.இந்த நிலையில் தமிழகத்தில் தனக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எதிர்ப்பு வலுப்படுவதைக் கண்ட திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் தங்கள் பரிகார சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டனர்.திட்டமிட்ட படி பொதுமக்கள் விமானத்தில் இன்று மாலை பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த அவர்கள் இன்று மதியமே கொலைகாரன் ராஜபக்‌ஷே ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் கொழும்பு சென்று விட்டனர்.

இது குறித்து திருச்சி பகுதி நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயதேவன் கூறுகையில் இப்பொழுதும் சரி இனி எப்பொழுதும் சரி சிங்களவனானாலும் சரி சிங்களக் கைக்கூலி யாரானாலும் சரி திருச்சிக்குள் நுழைந்தால் நாம் தமிழர் இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் எங்கள் தலைவர் சீமான் கட்டளை ஏற்று எத்தகைய போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம் என்று உறுதிபடக் கூறினார்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails