நேரு-எட்வினா காதல்: விலகாத மர்மங்கள்!
Posted On Friday, 27 November 2009 at at 00:41 by Mikeஇந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டன் பிரபுவின் மனைவி
எட்வினாவுக்கும் அன்றைய பாரதப் பிரதமர் ஐவஹர்லால் நேருவுக்கும் இடையே
இருந்த காதல் குறித்து, ஏற்கெனவே பலரும் குறிப்பிட்டுள்ளனர். அது வெறும்
மானசீகக் காதலா (றிறீணீtஷீஸீவீநீ றீஷீஸ்மீ) அல்லது அதையும் தாண்டியதா
என்ற சர்ச்சை நீண்டநாட்களாக நடந்து வருகிறது.
1993-ல் இந்த அரசல் புரசலான அபூர்வக் காதலை காத்ரீன் கிளெமென்ட் என்ற
பிரெஞ்சு நாட்டுப்பெண் எழுத்தாளர் 'எட்வினா - நேரு' என்ற புத்தகத்தின்
மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தினார். அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு
இருந்தது.
அதைத் தொடர்ந்து, அலெக்ஸ் வான் டங்ஜெல்மேன் என்பவர் எழுதிய நேரு-எட்வினா
காதல் குறித்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, 'இந்தியன்
சம்மர்' (மிஸீபீவீணீஸீ ண்தனீனீமீக்ஷீ) என்ற திரைப்படத்தை ஹாலிவுட்டின்
யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் எடுக்க முடிவுசெய்து, செயலில்
இறங்கியபோது, பிரச்னை பூதாகரமாக வெடித்தது! நேருவும் எட்வினாவும் இறந்து
பல ஆண்டுகள் ஆகிய பின்பும், அவர்களின் காதல் மட்டும் இன்றைக்கும்
பேசப்படுவது ஏன்? காரணங்களை ஓரளவு ஊகிக்க முடியும். அவை பலவாகவும் இருக்க
வாய்ப்புள்ளது. 1. இருவரும் இந்திய சுதந்திரத்தின் முன்பும் பின்பும்
நிலவிய ஓர் அசாதாரணமான நெருக்கடிச் சூழலில் முன்னணி பாத்திரம்
வகித்தவர்கள். 2. இவர்களின் காதல் மானசீக எல்லைகளைக் கடந்து நெருக்கமான
உறவு என்ற அளவுக்குச் சென்றதா என்பது இன்றைக்கும் அவிழ்க்கப்படாத ஒரு
புதிராகவே இருப்பதால், அதன் மீது மக்கள் இயற்கையாகவே ஆர்வம்
கொண்டுள்ளனர். அந்த ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ள அக் காதல் தொடர்பான
புத்தகங்களும் விவாதங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது
இன்றைக்கு ஒரு திரைப்படமாக உருவாகும் அளவிற்கு வந்துள்ளது. கிளிண்டன் -
மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் எல்லா நடவடிக்கைகளும் வெட்டவெளிச்சமாகி
இருதரப்-பினரும் ஒப்புக் கொண்டபோது, அது ஆர்வத்தைத்
தணித்துவிட்டதைப்போல், நேரு-எட்வினா காதல் விவகாரம் முழுமையாக
இதுவரைக்கும் தீர்க்கப்படாததால், அதன் மீதான ஆர்வம் இன்றைக்கும்
குறையவில்லை.
மேலும், இக்காதல் குறித்து எட்வினா தனது கணவர் மவுன்ட் பேட்டனுக்கு
எழுதிய கடிதத்தில், 'அது பெரும்பாலும் ஒரு மானசீகக் காதலாகத்தான்
இருந்தது' என்று கூறியதில் இருந்து, "அப்படியென்றால் சிறிய அளவில் அதில்
'நெருக்கமான உறவு' கலந்திருந்ததா?" என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இது
இன்றைக்கும் பலரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
இக்காதல் குறித்து நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷேகல் இவ்வாறு
கூறியுள்ளார்- "அது காதலும் நட்பும் கலந்த, இரு மனங்கள் ஒன்று கலந்து
உறவாடிய ஓர் அபூர்வக் காதல். அதில் பாலியல் இருந்ததாக யூகிக்க மட்டுமே
முடியும்" ஷேகலின் இக்கருத்தும் இந்தக் காதல் விவகாரத்தில் தொக்கி
நிற்கும் மையப்பிரச்னையைத் தீர்க்க உதவவில்லை.
3. நேருவை தங்கள் வசப்படுத்த, ஆங்கில ஆட்சியாளர்கள் எட்வினாவைப்
பயன்படுத்தினார்கள் என்ற அபத்தமான வாதத்தை சிலர் முன்வைத்து வருகின்றனர்.
நேருவும் எட்வினாவும் லண்டனில் ஒன்றாய் படித்தபோது, நெருக்கமாகப்
பழகியவர்கள். இதைத் தெரிந்து கொண்ட பிரிட்டன், சுதந்திரத்திற்குப்பின்பு
தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கச் செய்ய நேரு-எட்வினா காதலை
பயன்படுத்திக் கொண்டனர் - என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சில
அமைப்பினர் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நேரு அவ்வாறு செய்தாரா? என்ற
கேள்வி இக்காதலின் மீது கூடுதல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
ஆனால், தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை, அக்காதல் குறித்த
திரைப்படம் தயாரிப்பது குறித்தது. 'அத்திரைப்படம் எடுக்கவேண்டிய தேவை
உள்ளதா? அவ்வாறு எடுக்கப்பட்டால், அது வெறும் கற்பனைக் கதையாக மட்டும்
இருக்குமா? நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமா? என்ற விவாதம்
எழுந்துள்ளது. "உண்மையும் கற்பனையும் கலந்த கலவையாக அது இருக்கும்" என்று
அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். மீடியாவின் ஒரு வடிவமான எழுத்தில்
அக்காதல் விவரிக்கப்பட்டுள்ளபோது, இன்னொரு வடிவமான திரைப்படத்தில்
அதைச் சொல்வதற்கு என்ன எதிர்ப்பு இருக்கமுடியும்? தன்னுடைய
புத்தகத்திற்கு சோனியா காந்தி அங்கீகாரம் வழங்கியதாக, காத்ரீன்
கிளெமென்ட் கூறியுள்ளார். மேலும் அக்காதல் குறித்து வெளிவந்த
புத்தகங்களையும் இந்திய அரசு இதுவரை தடைசெய்யவில்லை. ஆனால், திரைப்படமாக
எடுப்பதற்கு மட்டும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிப்பது ஏன்? அப்படத்தின்
திரைக்கதை, வசனம் இந்திய அரசின் அனுமதிக்காக ஒப்படைக்கப்பட்டு, அதில்
இந்திய அரசு செய்த திருத்தங்களை ஏற்றுக்கொண்ட பின்பும், படம்
எடுக்கப்படும்போது ஓர் அரசு அதிகாரி கூடவே இருந்து அதைக் கண்காணிப்பார்
என்றும், படத்தில் நேரு-எட்வினா குறித்த நெருக்கமான காட்சிகள் இடம் பெறக்
கூடாது என்றும், இறுதியாக அப்படத்தை இந்திய அரசு பார்த்து அனுமதி
வழங்கும் என்றும் அடுக்கடுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், அப்படம்
எடுப்பது சாத்தியமில்லை என்று தயாரிப்பாளர்கள் அதனைக் கைவிடும் நிலை
ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசின் இந்தக் கெடுபிடிகள் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும்
செயலாகாதா? ஏன் இத்தனை கெடுபிடிகள்? 'நேருவுக்கும் எட்வினாவுக்கும்
மானசீகமான காதல் இருந்ததாகச் சொல்லலாம். ஆனால், அவர்களிடையே நெருக்கமான
உறவு இருந்தது என்று சொல்வது நேருவின் பெயருக்குக் களங்கத்தை
ஏற்படுத்தும். அது அவரது வாரிசுகளின் செல்வாக்கைப் பாதிக்கும்' என்கிற
பயமா?
அப்படியென்றால், மனங்கள் ஒன்றுபடலாம், ஆனால் உடல்கள் ஒன்றுபடக் கூடாது
என்பதுதானே இதன் உட்பொருள். இது எவ்வளவு அபத்தமானது. இதற்கு எதிராக
'உடல்கள் ஒன்றுபடலாம், ஆனால் மனங்கள் ஒன்றுபடுவது மிகவும் ஆபத்தானது
என்று சிலர் எதிர்வாதம் செய்யலாமே!
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்டார் என்று சித்திரிப்பதால்,
நேருவை யாரும் சிறுமைப்படுத்திவிட முடியாது. எல்லா மனிதர்களுக்கும் இரு
பக்கங்கள் உள்ளன. காசநோய்க்கு மனைவியை பலி கொடுத்து தனிமையில் வாடிய
நேருவுக்குக் காதலும் கலவியும் தேவைப்பட்டிருக்கலாம் என்பது இயற்கையானதே.
உலக அரசியல் களத்தில் மாமனிதராய்த் திகழ்ந்த நேருவும், அகவாழ்க்கையில்
ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
முற்போக்குச் சிந்தனையாளரான அவர், அன்றைய சமூக மதிப்பீடுகளையும்
கட்டுப்பாடுகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டவர் அல்ல என்பதை அவர் பல
கட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கடவுள் நம்பிக்கையில் தீவிர ஈடுபாடு
கொண்ட காந்தியின் சீடராக இருந்தாலும், தன்னை ஒரு நாத்திகராக
வெளிப்படுத்திக்கொள்ள அவர் தயங்கியதில்லை.
'கண்டுணர்ந்த இந்தியா' (ஜிலீமீ ஞிவீண்நீஷீஸ்மீக்ஷீஹ் ஷீயீ மிஸீபீவீணீ)
என்ற தனது புத்தகத்தில் நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார்- "ஒரு மனிதனின்
தனிவாழ்க்கைக்கும் சமுதாய வாழ்க்கைக்கும் இடையே உள்ள பிரச்னைகள்
உள்மனதின் உணர்வுகளுக்கும் வெளிப்புற நிலைகளுக்கும் உள்ள பாகுபாடு ஆகியவை
என் மனதைப் பெரிதும் அலைக்கழித்தன. இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள்
எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்கலானேன். அதற்கு அறிவியல் ரீதியான
வழிமுறைகளுடன், உள்ளுணர்வின்பாற்பட்ட வழிமுறைகளும் தேவைப்படும் என்பதில்
ஐயமில்லை"
நேரு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது எட்வினாவுடன் தனக்கு இருந்த காதல்
குறித்துதானா?- என்பது விளங்கவில்லை.
மக்களுக்காக உழைக்கும் சாதனை-யாளர்களை அவதார புருஷர்களாகப் பார்க்கும்
நமது மரபு வழிச் சிந்தனையில்தான் கோளாறு உள்ளது. தனி மனிதர்களின்
சரித்திரம்தான் நமக்கு உலக சரித்திரமாக கற்பிக்கப்-படுகிறது. அதனால்தான்,
"காந்தித் தாத்தா சுதந்திரம் வாங்கித் தந்தார்"- என்று இன்றைக்கும்
சொல்லிக் கொண்டிருக்கிறோம். தனி மனிதர்களின் சாதனைகளைக் கடந்து,
பரந்து பட்ட மக்கள்தான் மனிதகுல வரலாற்றை நகர்த்துகின்றனர் என்ற உண்மை
நமக்கு மறைக்கப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு இதில் எந்தப்பங்கும்
இல்லை என விதிக்கப்படுகிறது. அதனால்தான் நம்மில் பலர் தலைவர்களை கடவுளின்
அவதாரங்களாகக் கருதி, எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என
ஒதுங்கிவிடுகிறோம். அவர்கள் சாதாரண மனிதர்கள்போல் நடந்துகொள்ளும்போது
அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.
பலதார மணம், திருமணத்திற்கு முன்பும் பின்பும் பாலியலில் ஈடுபடுவது
போன்றவற்றில் நம்மில் பலரும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால், அது வெளியில் தெரியாதவரை தவறில்லை என்று கருதுகிறோம். பாலியல்
குறித்து வெளிப்படையாகப் பேசுவதே பாவம் என்று கருதுகிறோம். இது எவ்வளவு
போலித்தனமானது.
அந்நியச் சுரண்டலிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்க, நம்நாடு அறிவியல்
தொழில் நுட்பத்தில் முன்னேறும் வகையில், வலுவான பொதுத்துறையை நேரு
உருவாக்கினார். மூன்றாம் உலக நாடுகளின் நலன் காக்க, அணிசேரா இயக்கத்தைக்
கட்டிக் காப்பதில் முன்னணி பங்கு வகித்தார். அவரின் இக்கொள்கைகளை
குழிதோண்டி புதைத்துவிட்ட காங்கிரஸ் அரசு, நேருவின் கற்பைப்
பாதுகாப்பதில் இவ்வளவு முனைப்பு காட்டுவதேன்? நேரு-எட்வினா காதலை விட
இதுதான் புரியாத புதிராக உள்ளது.
தமிழக அரசியல் வார இதழிலிருந்து........
சரியாகச் சொன்னீர்கள்...