தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்?

தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்?

fr

அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்..
எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில்
1.கருத்து எதிராளிகள்
2.அடிக்குடல் எதிராளிகள்

அதை சற்று விரிவாக பார்ப்போம்..
கருத்து எதிராளிகள்
ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சரியாக அமையும் பட்சத்தில் நீங்கள் எதிரியாக நினைத்த மாற்று கருத்தாளர் உங்கள் உற்ற நண்பனாக கூட மாற முடியும்.

பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏன் தீர்க்கபடமாலே போகின்றன?

நம்பிக்கையை வளர்ப்பது..தீர்க்கவேண்டிய பிரச்சனையை கவனம் செலுத்துவது ஆகியவற்றை பெரும்பான்மையோர் மதிப்பதில்லை..பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இழுத்தடிப்புக்ள் கடினமான தங்களின் முடிவையே பிறர் மீது திணித்தல் ..ஏற்று கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தல் என இரு அணிகளும் தங்களுக்குள் எதிரியாக மாறி விடுகிறார்கள் ..அங்கு தீர்க்க பட வேண்டிய பிரச்சனையின் கருத்து குவியம் மாற்ற படுகிறது.. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மையே உண்டாகிறது.. இவ்வறான நிலைமையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று கூடி கூடி பேசி ஏதோ நாங்களும் பேசுகிறோம் என்று பாசாங்கு மட்டுமே உலகத்திற்காக செய்ய முடியும்..ஆனால் தீர்வு என்பது கடைசிவரை எட்டபட முடியாது!!( காசுமீரு.திபெத், காசா)

2.அடிக்குடல் எதிராளிகள்

கருத்து எதிராளிகளை நீங்கள் ஒரளவுக்கு உங்களுக்கு எதிராக செயல்படாமல் சில காலமாவது உங்கள் அறிவு ரீதியாக தடுக்கலாம்..ஆனால் அடிக்குடல் எதிராளிகள் உணர்ச்சி பூர்வமாக எதிர்ப்பவர்கள் உங்கள் தரப்பு கருத்து கள் நியாங்கள் சாதகங்கள் ஆகியவற்றை இவர்கள் மதிப்பதில்லை அடிப்படையில் சக மனிதன் என்ற வகையில் கூட ஏற்பதில்லை..நீங்கள் எடுக்கும் நிலைகளுக்கு தீமையானா கற்பிதங்களை ஏற்படுத்த முற்படுவார்.. நீங்கள் கூக்குரலிடும் எந்த பிரச்ச்னையும் இவர்கள் காதில் விழாது.. இப்படி அடிக்குடல் எதிராளிகள் உருவாகிவிட்டால் அவரை நீங்கள் எப்போதும் மாற்ற முடியாது!

அடிக்குடல் எதிராளிகள் எப்படி உருவாகிறார்கள்?

என்னுடைய முகம் இரண்டு உண்டு ஒன்று உலகிற்கான பொதுமுகம்.. இரண்டு சுய முகம்.. என்னுடைய பொது முகம் இப்படித்தான் உலகிற்கு தெரிய வேண்டும் என விருப்பம் வைத்திருப்போம்.. அதை உலகிற்காக ஓரளவிற்கேணும் அதை நம்பும் படி கட்டி எழுப்பி இருப்போம்..
இரண்டாவது எனக்கான சுய முகம்..

என்னை பற்றி நானே அறிந்து வைத்திருப்பது..என்னுடைய திறமைகள்… அறிவு .. மற்றும் ஆளுமை ஆகியன.. இந்த இரண்டு பிம்பங்களும் ஒன்றுகொன்று சம்பந்தபட்டவை.. மிக நுண்ணியமாக இணைக்கபட்டவை..
இவ்வாறான் இரு பிம்பம்களும் முக்கிய பிரச்சனைகளில் சரிந்து விழ இருக்கும் போது எந்த ஒரு தனி மனிதனும் அவ்வாறு இலகுவில் விடுவதில்லை.. தனக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களில் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக அந்த பிம்பத்தை நிலை நிறுத்த முற்படுவான் .. உலகதிற்கே தனக்கு எதிரானவன் கோமாளி என்றும் தனக்கு கீழே தான் அவன் என்றும் காட்ட முற்படுவான்.. எது எவ்வாறாகினும் ஆதிக்க சக்தியின் மனபாங்கின் ஒரு பகுதியே இது..

அடிக்குடல் எதிரிகளை எப்படி சமாளிப்பது?
அடிக்குடல் எதிராளிகள் நீங்கள் அடிப்படையில் மனிதன் என்கிற ரீதியில் எதிர்பவர் ஆதலால் கீழ் கண்ட இரண்டு வழிமுறைகளே உள்ளன
1.சமமான வலிமையை கொண்டிருத்தல்
2. எதிரியின் முக்கியத்துவத்தை குறைத்தல்

அடிக்குடல் எதிரியாக அறியப்பட்ட நபரோடு குறைந்த பட்சம் நாம் சமமான வலிமையோடு இருக்க வேண்டும்..சம வலிமையோடு கூடிய நீண்ட மவுனமும் அடிக்குடல் எதிராளிக்கு பயத்தினை உருவாக்கும். அடிக்குடல் எதிராளியின் சிறிய விடயங்களிலும் மூக்கை நிழைத்து ஆராய முற்படுவீர்களானால் அது அடிக்குடல் எதிராளியின் உங்களை பற்றிய மதிப்பீடு தவறாக போகும் வாய்ப்பும் உள்ளது.. உங்கள் இலக்கு எது என்று அவர் சுலபமாக ஊகித்து உணர்வார்..

இரண்டாவதான எதிரியின் முக்கியத்துவதை குறைத்தல்.

ஒருவரின் முக்கியத்துவத்தை நாமே தான் தீர்மானம் செய்கிறோம்.. ஒரு வேலைக்காக நாம் ஒருவரை ஒன்றுக்கு மூன்று முறை சந்திப்போமானால் அவரின் முக்கியத்துவம் அதிக மாகிறது.. அமெரிக்க அறிஞர் தாமஸ் ஜெபர்சன் அவரின் கருத்துபடி ஒருவர் உங்கள் இதயத்தில் உங்கள் அனுமதி இன்றி நுழைய முடியாது. அந்த வகையில் அடிக்குடல் எதிராளிகள் இவரால் முடியும் என்று உங்கள் இதயத்தில் நுழைந்துவிட்டல் அதைவிட ஆபத்து வேறு இல்லை.. கூடுமானவரை பிரச்சனைகளை நீங்களே எதிர் கொள்ள பழக வேண்டும்..

மேற்கூறியவை அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகளாகும் இதில நாம் கூறவருவது என்னவென்றால் இந்தி அரசு தமிழர்களுக்கான அடிக்குடல் எதிரி என்பதாகும் .. அவ்வப்போது பேச்சு வார்த்தை கலந்து பேசுங்கள் என்று கூறினாலும் தமிழர்களான நாம் ஆரிய சக்திகளுக்கு அடிக்குடல் எதிரிகளே!

இந்தி அரசின் சுய முகம் பொது முகம் என்பது தெற்காசியவில் தன்னை ஒரு பேட்டை ரவுடியாக நிலை நிறுத்துவதாகும்.. இங்கு நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து கொண்டு தன்னுடைய அதிகாரத்தினை நிலை நிறுத்துவதாகும் .. உலகின் அருகருகில் பல வல்லரசு நாடுகள் முளைத்து கொண்டு நிற்க இந்த நாட்டை சுற்றி ஏன் எவரும் வல்லரசு ஆக முடியவில்லை? ஏன் சிங்கபூர் ஆசியாவில் தனக்கான இடத்த்தினை பெறும்போது அருகாமையில் இருக்கும் மாலத்தீவால் முடியாதா? இங்கு இந்த ரவுடியிடம் மீறி பிரச்சனை வேறு ஒருவரிடம் செல்லும் போது இவர்களுடைய முக்கியத்துவம் குறைகிறது.. அகி இம்சை அன்னகாவடி என்று ஊரை ஏமாற்ற போட்ட வேடம் கலைகிறது..அதாவது சுய பிம்பம் பொது பிம்பமும் கழண்டு விழுகிறது.. அதற்கு காரணமான ஈழ தமிழர்களை இப்போது காவு வாங்கியாகிவிட்டது.. இந்த ரவுடி வேடத்தினை நிலை நிறுத்த தினமும் நமது மீனவ சகோதரர்களை இழக்கவேண்டி உள்ளது..

இதை மாற்ற என்ன வழி? அதே அறிஞர் கூறியது போல சம வலிமையை தக்க வைக்க வேண்டும்.. தமிழனுக்கென்று வலிமை மிக்க ராணுவம் இருந்திருந்தால் இந்த இழி நிலை நமக்கு வந்திருக்குமா? என்பதை தமிழக தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.. நாம் ஏன் தமிழ் தேசிய ராணுவத்தை இங்கு கட்டியமைக்க கூடாது?இன்று நம் மீனவர்களை ஓரினச்சேர்கை செய்து அனுப்பி இருக்கிறான் சிங்களவன் இதை விட கேவலமான நிலை உண்டா? இங்கு இந்த இந்தி யாவில் பொது முகம் சுய பிம்பம் என்பது ஆரியமே உயர்ந்தது என்று கட்டமைக்க பட்டுள்ளது..அவர்கள் அடிக்குடல் எதிராளிகளாக கருதுவது அவர்களுக்கு போட்டியாக இருக்கும் தமிழினமே என்பது உறுதியாகிறது.. இதை மாற்ற நாம் சம வலிமையை தக்க வைக்க வேண்டாமா?

அறிஞர் அவர்களின் கூற்றுபடி இரண்டாவதான அடிக்குடல் எதிராளிகளை சமாளிக்க அவர்களின் முக்கியத்துவதை குறைக்கவேண்டும்.. இங்கு என்ன நடந்தாலும் பஞ்சாயத்து டெல்லிக்கு செல்வதை தடுக்கவேண்டும். அது தந்தியடிப்பது.. உண்ணாவிரதம் இருப்பது. நாமே சுயமாக எதுவும் செய்ய முடியாதா? தமிழ் நாட்டை டில்லிக்காரனிடம் கையேந்த வைக்காமல் சுய தேவைகளுக்காக நம் சொந்த காலில் நிற்க முடியாதா? அவர்கள் அவர்களே நாம் நாமே! நமக்கான தேசியம் சாதி சமய மற்ற சமத்துவ தமிழ்தேசியமே அன்றி ஆரிய தேசியம் அல்ல.. மேற்கண்ட புரிதல் தமிழக தோழர்களுக்கு மிக மிக அவசியம்.. தமிழக விடுதலை குறித்து உலகமெங்கும் பரவி வாழும் ஈழ உறவுகளின் ஆதரவும் இங்கு அவசியமாகிறது.. நாமும் இங்கு அடிமைகளே! சுதந்திரம் நமக்கும் வேண்டும் என புரியவைத்தவர்கள் அவர்களே!

(இங்கு மாற்று கருத்து மாணிக்கங்கள் சாதியை உள் நுழைப்பார்கள் என்று தெரியும்..அவ்வாறனவர்கள் தமிழ் தேசியத்தில் சாதியை ஒழிக்க பலமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.. அதை விடுத்து அந்த சாதிக்காரன் அப்போது இதை எங்களுக்கு செய்தான்.. இவர்கள் இப்போது செய்கிறார்கள்.. என ஓலமிடுவதை விடவேண்டும்.. ஏன் ஆரிய சக்திகளுக்குள் உள் முரண்பாடு இல்லையா? ஆனால் பொது எதிரி தமிழன் தான் என்று ஒன்றாக கூடி கொக்கரிக்கிறார்களே! நம்மால் ஏன் பொது எதிரி ஆரிய சக்திகள் தான் என்று கொக்கரிக்க முடியாதா? தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடுகிற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது இங்கு போராடும் ஒருவரை அவர்கள் தலைவனாக ஏற்று கொண்டுள்ளர்களா? இந்த இந்திய தேசத்தில் இருந்து கொண்டு சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி யாரும் முழுமையாக ஒழித்துவிட முடியாது.. இவர்கள் பிழைப்பு ஓடுவதே.. இத்து போன வருணாசிரம கொள்கைகளை கொண்டுதான்.. தமிழகத்தின் தன்னுரிமைக்கான போராட்டங்கள் எழும் போதெல்லாம் அங்கு ரோக்காரனின் சாதிய விளையாட்டுகள் ஆரம்பிக்கும் .. இதை சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்)

அதை தோழர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்..

அதற்கான செயல்திட்டதினை வகுத்து செயல்பட தயாராவோம்!

(இங்கு ஆய்வு செய்யபட்டது தமிழின எதிரிகள் தொடர்பாக .. துரோகிகள் குறித்து தனிபதிவு வெளிவரும்


நன்றி


http://siruthai.wordpress.com/2009/11/20/தமிழின-எதிரிகள்-எந்த-வகை/

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails