ராஜபக்சே..ஆயிரம் மடங்கு ஹிட்லர்!- நெடுமாறன்



ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார். இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்ககளை விடுவிக்கக் கோரி நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஈரோடு வந்தது.
அங்கு வீரப்பன்சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக் கூட்டத்தில் நெடுமாறன் பேசுகையில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3.5 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சரியான உணவு, குடிநீர், மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் பலர் இறக்கிறார்கள். ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். ஆனால் இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனித நேய உணர்வுகூட இல்லை. இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி ராஜபக்சே கேட்ட ரூ.5,000 கோடி கடனை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. ஆனால் இந்திய அரசு ரூ.5,000 கோடி கடன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 50,000 பேர் விடுவிக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாக சென்று சேர்ந்தார்களா என்று யாரும் உறுதி செய்யவில்லை. தமிழர்களின் பிரச்சனையை வெளிபடுத்த மக்களின் ஆதரவு திரட்ட இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்களின் உரிமை பாதுகாக்கபடவும்இ இலங்கை தமிழ் மக்கள் விடுதலை பெற்று சொந்த இடம் செல்லும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails