பதிவர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டார் திருமா

சமீபத்தில் ஒரு இடுகை திருமாவின் இணையத்திலிருந்து


திருமாவை விமர்சிக்கும் முண்டங்களுக்கு.....


தமிழின உணர்வாளர்கள் என்றும், எப்பொழுதும் நடுநிலை தவறுவதில்லை, நீங்கள் பண்ணுவதெல்லாம் சரி என்று சொல்ல உங்கள் கட்சி ஆட்களால் வேண்டுமானால் முடியும் அது தமிழின உணர்வாளர்களால் முடியாது. தமிழர்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும் எந்த வித பாகுபாடும் பார்க்காது தமிழனின் துயர் துடைப்பதே தமிழின உணர்வாளர்களுக்கு முக்கியம்.

உங்களின் மேல் எந்தவித தனிப்பட்ட விருப்பு, வெறுப்பும் கிடையாது. உங்களின் நடவடிக்கைகள்தான் எங்களுக்கு பிடிக்கவில்லை. இப்போது நீங்கள் மாறியிருப்பது மிகுந்த சந்தோசமே. தமிழனுக்கு குரல் கொடுங்கள் வருகிறோம் உங்கள் பின்னால்.

உங்களின் அந்த குரல்தான் நாம் உங்களிடம் எதிர்பார்ப்பது, தமிழனுக்கு குரல் கொடுக்க வேண்டிய நீங்களே பேதம் பார்த்த போது எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.

தவறு நடக்கும் போது தட்டி கேட்பது எங்கள் கடமையே. அது யாராயிருந்தாலும் ஒன்னுதான் எங்களுக்கு. பழைய இடுகைகளை பாருங்கள் உங்களை வாழ்த்தி எத்தனை முறை எழுதி இருக்கிறோம் என்று.

Posted in Labels: |

7 comments:

 1. Mike Says:

  மன்னிக்கவும்

  பதிவர்களை என்று தலைப்பிலிருப்பதினை தமிழின உணர்வுள்ள பதிவர்களை என மாற்றி படிக்கவும்.

 2. Ramanan N Says: This comment has been removed by the author.
 3. Ramanan N Says:

  இது பதிவர்களை குறிப்பிட்டு சொல்லவில்லை

 4. kalai Says:

  மைக் அவர்களுக்கு ,
  தமிழின உணர்வாளர்கள் என்றும், எப்பொழுதும் நடுநிலை தவறுவதில்லை,

  நீங்கள் சொல்வதை போல நடு நிலையில் உள்ளவர்கள் அனைத்து நிலைகளிலும் நடு நிலையாக இருந்தால் பரவில்லை சமிபகாலமாக திருமா வை பற்றி மற்றும் கால்புனர்ச்சியோடும், எதோ ஒரு உள்நோக்கதொடும் விமர்சங்கள் வருவது ஏற்புடையதாக இல்லை ..... ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் எழுந்த எழுச்சிக்கு திருமாவே காரணமாய் இருந்தார்.... அதையெல்லாம் பதிவு செய்யவில்லை இந்த பதிவர்கள் , ஈழ பிரச்சனையில் இவர் மட்டும் தான் இப்படி நடந்து கொண்டார் என்று சொல்லுவதற்கு பதிவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை?,,,,, தாவி தாவி குதிக்கும் ராமதாஸ் அவர்களை ஏன் இவர்கள் விமர்சிக்கவில்லை?,, அம்மா கால் அடியில் அமிழ்ந்து கிடக்கும் வை கோவை ஏன் விமாசிக்கவில்லை?..., பொம்மை மாதிரி செயல் படும் அய்யா பழ . நெடுமாறன் அவர்களை ஏன் விமர்சிக்க வில்லை? ....

  நாம் தமிழர் என்றும் தமிழனாய் இணைவோம் என்றும் நான் பெரியாரின் பேரன் என்றும் கூக்குரல் இடும் போலி பேரன் சீமான்- இவர் இந்த இயக்கம் ஆரம்பித்து இதுவரை என்ன கிழித்தார் ? இப்படி பட்டவர்களை இந்த நடு நிலை பதிவர்கள் என்றாவது விமர்சனம் செய்ததுண்டா ?

 5. Mike Says:

  அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி.

  கலை நீங்க சொல்ற மாதிரி கண்ணை மூடிட்டு எல்லாரையும் விமர்சிக்க முடியாது அது சரியும் கிடையாது.

  யாரால் எது முடியும் அவர்களால் அது ஏன் பண்ணப்படுவதில்லை.

  வை.கோ வோ, சீமானோ, நானோ

  திருமா சூழ்நிலையில் இப்படி ஒரு தமிழின துரோகிட்ட கை கொடுத்து, போர்த்தி விட்டு பல்லை காட்டிட்டு வந்திருந்தால் இதேதான் நடந்திருக்கும். தவறுகளை திருத்தி கொள்வதுதான் அழகு.

  இவர்கள் என்ன பன்னி கிழிச்சார்கள் என்று கேள்வி கேட்பது உங்கள் அறியாமையினை காட்டுகிறது.

  நான் என்ன பண்ண முடியும் அந்த அளவுதான் என்னால் பண்ண முடியும். அதை விட்டுட்டு நான் என்னத்தை கிழிச்சேன் அப்படின்னா உங்களுக்கு என்ன சொல்ல முடியும்.

 6. kalai Says:

  //இவர்கள் என்ன பன்னி கிழிச்சார்கள் என்று கேள்வி கேட்பது உங்கள் அறியாமையினை காட்டுகிறது.//

  திருமாவை மட்டும் விமர்சிப்பது தான் உங்களின் அறிவோ??

  மீண்டும் ஒருமுறை நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள வீடியோவை பாருங்கள்.

 7. Mike Says:

  நண்பரே இவர் எம்.பி ராச பக்சே வை பார்க்க சென்றவர்.

  மற்றவர்க்ள் எம்.பி அல்ல. ராசபக்சேவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

  அந்த வீடியோ ஏற்கனவே பார்த்து விட்டேன். ரொம்ப அருமையாக குரல் கொடுத்துள்ளார். நானே ஒரு இடுகை இடலாம் என்றுதான் இருக்கிறேன்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails