கருணாநிதி சொல்வது பொய், இலங்கை அரசாங்கம்

"58 ஆயிரம் பேர் 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றப்படுவர்":- கருணாநிதி தெரிவித்தமை குறித்து எதுவும் தெரியாது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கு பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்கிறது அரசாங்கம்.

இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதற்கட்டமாக 58 ஆயிரம் பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று கருணாநிதியின் அறிக்கை மூலம் வெளியான தகவல் குறித்து எதுவும் தெரியாது என்று அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா இவ்வாறு தெவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள், தமிழக எம்.பிக்கள் இலங்கையில் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேரை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக தல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கத்தின் அபிப்பிராயம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்; எனக்கு எதுவும் கூறடியாது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் கௌரவத்துடன் பொறுப்பான முறையில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

இதேவேளை ஏலவே அமைச்சரவை முடிவுகளை அறிவித்து விட்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தமிழக எம்.பிக்கள் வவுனியா நலன்புரி முகாம்களுக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் தொடர்பில் கண்டறிந்துள்ளனர்.

இலங்கையில் மூவின மக்களும் இணைந்து வாழுகின்ற அபிலாசையை நாம் காண்பித்துள்ளோம். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கு பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்.

தமிழக எம்.பி.க்கள் இலங்கைக்கு விஜயம் செய்தமையினால் இங்குள்ள சில எம்.பி.க்களின் இதயம் வலிக்கின்றது. அகதி முகாம்கள் தொடர்பில் இந்தியர்களுக்கு தெரியாது, இங்கிலாந்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும் என்று அதிலொரு எம்.பி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாழ்பவர்கள் அனைவரும் சுகபோக வாழ்க்கையை வாழவில்லை வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களும் அங்கிருக்கின்றனர். அகதி முகாம்களின் நிலைமையானது ஏனைய நாடுகளை விடவும் இங்கு நன்றாக இருக்கின்றது என்று ஐக்கிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது அதேபோல இன்று இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் நலன்புரி முகாம்களின் நிலைமைகள் தொடர்பில் இந்தியர்களுக்கு தெரியாது இங்கிலாந்தை சேர்ந்தவர்களுக்கே தெயும் என்று மனோ கணேசன் எம்.பி தெவித்துள்ளார். இவர் பிரச்சினையை பெரிதாக்கி அதன் மூலமாக அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதன் மூலமாக மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க விடாமல் தடுப்பதற்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

ஆனால் மக்களுக்கு ஜனநாயக உமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் அதனை செய்யவேண்டும் என்றார்.

Posted in Labels: |

1 comments:

  1. Mike Says:

    test

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails