நீண்ட நாட்களுக்கு பின் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி
Posted On Thursday, 15 October 2009 at at 11:59 by Mikeஇப்போது தமிழ்மணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனநிறைவு அளிப்பதாக உள்ளது. முகப்பில் தமிழர்களை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்ற உணர்வு தமிழ் மணத்தில் வந்துள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
கண்டிப்பாக இன்று தமிழர்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்ச்சிகள் ரொம்ப அவமானமாக இருக்கிறது. இனி நானும் எனது பங்கினை அளிக்க மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.
தமிழ்குழு இலங்கை விஜயம் பெருத்த ஏமாற்றத்தினையே அளிக்கிறது. தமிழனத்தினை கருவோடு வேரறுத்தவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வந்திருக்கும் இந்த சிங்கங்களை என்னவென்று சொல்வது. கன்னி வெடி இருக்குதாம் அதனால அவரு அனுப்ப மாட்டாராம். அதையே இந்த குழுவும் சொல்றது. ஏம்பா அப்படியே கன்னி வெடி இருந்தாலும் அது இந்த முகாமினை விட பாதுகாப்பானதே. உலகமே அதிரும் இந்த முட்கம்பி இவர்கள் ஏதோ மாமனார் வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி பேசிகிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழ் மணத்திற்காக உங்கள் செயற்பாடுகளை நிறுத்தியது ஏமாற்றமே
இருப்பினும் உங்கள் வரவு நல்வரவாகுக
நன்றி எல்லாளன் அவர்களே, நான் இங்கு பதிவிட முடியாவிடினும் என்னால் முடிந்த அனைத்து அர்ப்பணிப்புகளையும் தமிழர்களுக்கு அளித்து கொண்டுதான் இருந்தேன்.
திரு மைக் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் மறுவருகைக்காக காத்திருந்த பல பேரில் நானும் ஒருவன்
மீண்டும் உங்கள் பங்களிப்பு இனிதே தொடரட்டும்.
மற்றும் தமிழ்மணத்தின் மாற்றத்தை தந்த அவர்களுக்கும் நன்றிகள்.
நன்றி சிவா,
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.
நமது எண்ணங்களும், சிந்தனைகளும் நல்லவையாக இருக்கும் போது கண்டிப்பாக அது நடந்தே தீரும்.
என்னுடைய தமிழர்களுக்கான உழைப்பு என்றுமே இருந்து கொண்டிருந்துதான் இருந்தது இந்த சிறிய இடைவெளியிலும்.