கருணாநிதியின் ஈழத்தமிழர்களை காக்க ஊர், ஊராக பேரணி வெற்றியடையும், எப்போது தெரியுமா?

உணமையாக சொல்ல வேண்டுமானால், இந்த மாதிரி ஒரு ஊர், ஊராக பேரணியை ஒரு எதிர்கட்சிகள் கருணாநிதிக்கு எதிராக நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழனின் அழிவினில் சந்தோசமடையும் ஜெ இதெல்லாம் எங்கே பண்ணுவார். ஆனால் நம்ம கலையோ(கலைஞரோ) தனக்கு எதிராக தானாகவே ஊர், ஊராக பேரணியை நடத்தி கொண்டிருக்கிறார். யாருக்கு இவரு ஈழத்தமிழர் அவலத்தை எடுத்து சொல்ல கிளம்பறாரு தெரியல. முதல்ல உனக்கும்,உன் கட்சிக்கும் தாம்பா எடுத்து சொல்லனும்.

திருடனே திருடனை பிடிக்க கிளம்பற மாதிரி இருக்குது. திருடன் அவனோட திருட்டை இதன் மூலம் மறைக்க முடியாது. டேய் நீ திருடன்டா உன்னைதான் மற்றவர்கள் பிடிக்கனும், நீ யாரையிம் பிடிக்க செல்ல குடாது. சொன்னா கேளுடா அப்படின்னு காமெடி பண்ண குட இந்த சமயத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நம் இனம் அங்கே அழிகிறது. இவரோ கழைகூத்தாடி மாதிரி காமெடி பண்ணிட்டு இருக்கார்.

இப்படியே பேரணி நடத்திட்டே இருங்க, அங்கே உங்கள் நண்பனின்(காங்கிரஸ்), நண்பன்(மகிந்த) எல்லா தமிழரையும் கொன்னுடுவான். அப்புறம் உங்க பேரணி வெற்றிதான்.

கலக்குங்க தலைவரே.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails