தினமலர் காமெடி, தமிழனாக பிறந்ததில் சந்தோஷம் : ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் .ரகுமான்

ஆமாங்க இதை தினமலர்தான் எழுதியுள்ளது. தமிழனை கொல்வதில முக்கிய பங்கு வகிக்கும் தினமலருக்கு இப்படி எழுதும் போது மனசில கொஞ்சம் கூட எந்த நெருடலும் இருந்திருக்காதுன்னு நினைக்கிறீங்களா. அயோக்கிய பயல். தமிழர்கள் எழுச்சி எந்த கேணயனாலும் தடுக்க முடியாது.

சென்னை : தமிழனாக பிறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள சேரிப்பகுதியான தாராவி பகுதியை மையமாக வைத்து ஸ்லம்டாக் மில்லியனர் படம் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர் .ரகுமான் பணியாற்றினார். படத்தின் சவுண்ட் இஞ்ஜினியராக கேரளாவைச் சேர்ந்த ரெசூல் பூக்குட்டி பணியாற்றினார். படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கு உரிய பட்டியலில் சிறந்த இயக்குனர், இசை, பாடல் ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட 10 பிரிவுகளில் படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞசலஸ் நகரில் நடைபெற்ற 81வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஸ்லம்டாக் மில்லியனர் படம் 8 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த இசை மற்றும் பாடலுக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றார். சவுண்ட் மிக்சிங்கிற்காக ரெசூல் பூக்குட்டியும், சிறந்த இயக்குனர் விருதை டேனி பாய்லும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை அப்படத்தில் பணியாற்றியவரும் பெற்றனர். இதன் மூலம் 2 ஆஸ்கர் விருதுகளை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர் ரகுமான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


உற்சாக வரவேற்பு : இதனையடுத்து விருதுகள் பெற்ற அனைவரும் தாயகம் திரும்பினர். சென்னை திரும்பிய ஏ. ஆர். ரகுமானுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் பரிதி இளம் வழுதி பொன்னாடை அணிவித்து ரகுமானை வரவேற்றார். டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர். கேரள மாநில பாரம்பரிய இசையான கொட்டு மேளம் முழங்க ரகுமானுக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்


டாக்டர் பட்டம் : ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியரான, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.
இதுகுறித்து அலிகார் முஸ்லிம் பல்கலை கழக வட்டாரங்கள் கூறுகையில்,"பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினர் சினிமாவிற்காக ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு எங்கள் பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளோம்.
இவரை தவிர தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் இந்திய பசுமை புரட்சியின் தந்தையான எம்.சுவாமிநாதன் ஆகியோரையும், மார்ச் மாதம் 25ம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கவுரவப்படுத்த உள்ளோம்' என்றனர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails