மகிந்த முடிவு: பாதுகாப்பு வலயமே தமிழ் மக்களை கொல்ல சிறந்த இடம்

இலங்கை: மக்கள் பாதுகாப்பு வலயம் மீது குண்டு வீச்சு: 132 தமிழர்கள் படுகொலை

வன்னியில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் மக்கள் பாதுகாப்பு வலயம் பகுதிகளில் சிங்கள படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 358 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று புலிகளின் ஆதரவு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் மக்கள் பாதுகாப்பு வலயம் பகுதிகள் மீது ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிங்கள ராணுவத்தினர் நடத்தியுள்ளனர்.இதில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 358 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவ்ரகளில் 91 பேர் மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 10 பேர் இறந்தனர் என்றும், படுகாயம் அடைந்தவர்களின் நிலைமையும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails