மஹிந்தவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நாரயணமூர்த்தி
Posted On Saturday, 14 February 2009 at at 02:26 by Mikeநடத்துங்கடா நடத்துங்க, உண்மை ஒரு நாள் வெல்லும், தமிழன் வெல்வான் உங்களின் இன அழிப்பிழிருந்து.
சர்வதேச ரீதியில் புகழ் பூத்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக என்.ஆர். நாராயணமூர்த்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில கல்வியாண்டாக பிரகடனப்படுத்தும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நாராயணமூர்த்தி இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசுக்கு எதிராக செயல்படும் இணையங்களை கண்காணிக்கவும் அவற்றை அழிப்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் இணையங்களை கண்காணிக்கவும் ,சிங்கள கிராமபுறத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய அடைந்துள்ள வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2343:2009-02-14-05-58-42&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53
இதைத்தான் ம.க.இ.க வினர் கடந்த 6 மாதமாக சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவுவதற்கான காரணம் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதற்கு மேலும் இந்திய ஒருமைப்பாடு வெங்காயம் என பேசிக்கொண்டிருந்தால் இன்று இலங்கைக்கு நடப்பது நாளை மணிப்பூருக்கோ, காஷ்மீருக்கோ நடக்கலாம். இந்திய இளைஞர்களே உடனை விழித்தெழுங்கள்!