ஈழத்தமிழ் மக்களுக்காக செங்கல்பட்டில் உண்ணாவிரதம் இருந்த இரண்டு மாணவர்கள் மயக்கநிலை
Posted On Sunday, 25 January 2009 at at 12:48 by Mikeஈழத்தில் போர் நிறுத்தக்கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளாகிய இன்று மாணவர் கெம்புக்குமார் என்பவர் மயக்கமடைந்துள்ளார். அவருக்கு முதலுதவி செய்யவோ மருத்துவமனை கொண்டு செல்லவோ எவ்வித உதவியும் செய்யாமல் தமிழக அரசு மாணவர்களின் போராட்டத்தினை அலட்சியப்படுத்தியுள்ளது.
கெம்புக்குமாரை பா.ம.க.வினர் தங்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து ஆறுமுகநயினார் என்ற மாணவரும் மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த அம்மாணவரை பொதுமக்களும் இதர மாணவர்களும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மற்ற மாணவர்கள் போராட்டத்தினை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தினை கைவிடுமாறு மாணவர்களை இப்பொழுது மிரட்டிக்கொண்டிருகின்றனர் என்பது கடைசியாக கிடைத்த தகவல்.இந்த மாணவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை நேற்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சந்தனக்காடு தொடர் இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். மாணவர்களின் உண்ணாநிலையை முடித்துக்கொண்டு வேறு வகையில் போராடும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை மாணவர்கள் நிராரித்தனர். இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தி இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்வரை போராட்டம் நடக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து சென்னை மருத்துவக்கல்லூரி, கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இயக்குநர் வ.கௌதமன் ஈழப்பிரச்சனை பற்றியும் இந்திய அரசு செய்துவரும் வஞ்சனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில், செஞ்சோலை என்ற அமைப்பு ஈழத்தில் உள்ளது. இதில் போரில் பாதிப்புற்ற குடும்பத்தைச் சேர்ந்த, பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள் இருந்தனர். இவர்கள்மேல் குண்டு வீச, அந்த பிஞ்சு மழலைகள் இருந்த இடத்தை அடையாளம் காட்டியது இந்திய அரசாங்கத்தின் ரேடார் கருவிகள் ஆகும்.பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்ல இந்தியா உதவினாலும் தமிழர்கள் இன்றுவரை இந்தியா என் தாய்நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் என்கின்றனர்.
அடுக்கடுக்காக உதவிகளை இந்திய அரசு இலங்கைக்குச் செய்தாலும் இந்தியப் பிரதமர் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும் பூரணகுணமடைய தமிழர்கள்தான் பிரார்த்தனை செய்கின்றனர்.இரக்கம் கொண்ட இந்த இனத்தை அழிக்க இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்யக்கூடாது. இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் தமிழ் உயிர்களை சிறிலங்கா இராணுவம் இதுவரை கொன்றுள்ளது. அந்த இராணுவத்துக்கு இந்திய அரசு துணைபோவது தமிழர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
பாகிஸ்தானில் ஒரு சிங் தூக்குத் தண்டனைக்கு நின்ற பொழுது இந்திய நாடே துடித்தது.ஈழத்தில் தமிழர்கள் மழையிலும் கொத்துக்குண்டுக்கு இடையிலும் காடுகளில் வாழ வேண்டியுள்ளது. காடுகளில் பாம்புக்குப் பலியாவதும் மருந்தின்றி சாவதும் அதனை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது. உலகமே எதிர்த்தாலும் புலிகள் தமிழீழம் அமைப்பது உறுதி. ஏனென்றால் கொரில்லாப் போரில் ஈடுபட்ட எந்த போராளிகளும் இதுவரை தோற்றதில்லை. மக்களுக்கான இராணுவம் கூலிகள். மக்களே இராணுவம் புலிகள் என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சத்தியராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மாணவர்களின் உடல்நிலை கண்டு வருத்தம் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்.
நன்றி http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1620&cntnt01origid=52&cntnt01returnid=51
மாணவர்களுக்கு முக்கியமாகத் தெரிய வேண்டியது.
சோனியா அம்மையாரின் பழி வாங்குதல் தான் இந்த இன அழிப்புக்குக் காரணம்.
இந்திய முப்படைகளும் 24 மணி நேரத் தொடர் சேவை சிங்களப் படைக்குச் செய்து வருகிறது.உளவு வானூர்தி 24 மணி நேரத் தகவல் தருகிறது.குங்குமப் பொட்டுடன் இந்த்ய போர்த்தளபதி களத்திலேயே ஆலோசனை தருகிறார்.
கப்பல் படை உதவி அளித்து வருகிறது.
இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்திய அரசும்,தமிழகக் காங்கிரசும் சோனியாவின் கைக்கூலிகள்.
இதற்குத் தமிழினத்தின் பதில் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டந்தான்.
பொறுமை வெடிக்கப் போகிறது.
entha oru patthirikkaiyum seithi veliyittathaai thereiyavillai!!???
நல்ல பதிவு... இன்னொரு விஷயம் தெரியுமா...எனது நண்பன் ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக உள்ளான். அவன் சொன்னது....
" குமுதம் ரிப்போர்ட்டர், ஜு.வி இரண்டிலும் ஈழம் பற்றி தொடர் எழுதும் எழுத்தாளர்களிடம் சிங்கள அரசு சார்பில் பேசுகிறோம் என்று ஒரு தொலைபேசி. எவ்வளவு வேண்டும்? புது வீடு வேண்டுமா? தொடரை நிறுத்துங்கள் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். பிறகு தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.
கல்மடு குளம் உடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எவளவு என்று தெரியவில்லை. அதை மறைபதற்கே சிங்கள அரசு பத்திரிகைகளையும் வளைத்துள்ளது. இலங்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பணத்தை காட்டி கெஞ்சியும் புலி ஆதரவு அல்லது ஈழ தமிழர் ஆதரவு செய்திகளை போடக் கூடாது என்று கெஞ்சி உள்ளார்கள். தினமும் இலங்கை தூதரகத்தில் பத்திரிக்கை, அரசியல் வாதிகளுக்கு பார்ட்டி நடக்கிறது.
மேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாகவோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //
அதனால் தான் இன்று எல்லா பத்திரிகையும் தமிழோசை தவிர அந்த செய்திகளை தவிர்த்துள்ளன.
உண்ணா விரதம் மனிதத்தன்மை உள்ளவர்கள் உணர்வதற்கு.
இந்தியா மனிதத் தன்மை இழந்து விட்டது.
இனி மறியல் போராட்டங்கள் தான்
வெற்றி பெரும்.
போதும் மாணவச் செல்வங்களே.
கையில் எடுக்க வேண்டியதை எடுங்கள்.