ராசபக்சே அவன் ஆளையே கொல்றான்யா, "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் மரணம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் உள்ள அத்துட்டிய பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10:30 நிமிடமளவில் லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்தார்.

கல்கிசையில் உள்ள அலுவலகம் நோக்கி லசந்த விக்கிரமதுங்க சென்று கொண்டிருந்தபோது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் "மோர்ணிங் லீடர்" வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க இருந்து வந்தார்.

மகாராஜா நிறுவனத்தின் ஊடகங்கள் மீது மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 48 மணி நேரத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in |

3 comments:

  1. Anonymous Says:

    அடுத்து கோத்த மங்களவை போட ரெடியாயிட்டான், அண்ணனுக்கு போட்டியாக.

  2. Anonymous Says:

    சிங்கள ஆட்சியாளர் யாராயினும் அவர்களின் அஜாரகங்கள், ஊளல்கள், சிங்கள இராணுவம் யுத்தம் எனும் பெயரில் நடத்தும் அட்டூளியங்கள் என அனைத்தையும் துணிவுடன் அம்பலப்படுத்திய "லசந்த", இன்று சிங்கள கொலைவெறி ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டிருக்கிறார்.

    குறிப்பாக மகிந்த குடும்பத்தின் திஒருவிளையாடல்களை கடந்த காலங்களில் அம்பலப்படுத்தியதற்கு இன்று இந்த உயர் பரிசு சிங்களத்தினால். ஓர் சிங்கள ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருக்கிறது.

    இன்று எந்த சிங்களத்தினால் நடத்தப்படும் இணையத்தளங்களென்ன, பத்திரிகை தளங்களைப் பார்த்தால், "ஜனநாயகம் இறந்து விட்டது", "பத்திரிகை சுத்தந்திரம் அழிக்கப்பட்டு விட்டது", "கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது", ...." என்று ஊளையிடாதுகளே இல்லை எனலாம்.

  3. Anonymous Says:

    அன்று நிமலராஜன் தொடக்கம்.... அற்புதன் ஈறாக 'நெல்லை' நடேசன், தராக்கி என கொலைப்படலம் தொடருகையில் எங்கிருந்தார்கள், இவர்கள்?????????

    தமிழ் ஊடகவியாலர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், சமூக சேவையாளர்கள் என அகப்பட்டவர்கள் எல்லாம் படுகொலை செய்யப்படுகையில், இவர்களில் பலர், அவற்றை செய்யாக்காதது மட்டுமல்ல அவற்றை ஆதரித்தும் எழுதினார்கள். சிலர் மிரட்டல்களுக்கு அடிபணிந்து தமிழின படுகொலைகளை பகிரங்கப்படுத்தவே பயந்தார்கள்.

    அன்றே, இவர்கள் இதை தட்டிக் கேட்டிருப்பார்களேயாயின் .....

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails