இரு வருடங்களில் ஈழத் தமிழினம் மெல்ல மெல்ல அழிந்து போகும்:சென்னையில் த.தே.கூ. அறிவிப்பு

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் நோக்குடன் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், அங்குள்ள ஒட்டுமொத்தத் தமிழினமும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

தமிழினத்தை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்குடன், சிங்கள அரசு போர் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், போரில் முல்லைத்தீவில் மட்டும் 53 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

பாடசாலைகள், கோவில்கள், மருத்துவ நடுவங்கள், அகதிகள் முகாம்கள் ஆகியவையும் வானூர்தி மூலம் குண்டு வீசி தகர்க்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் உடமைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும், முழு அளவில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

இனவெறியுடன் சிங்கள அரசு நடத்தி வரும் தாக்குதல் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படா விட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவேளை ஒரு சிலர் உயிர் பிழைந்திருந்தாலும், அவர்கள் வாய்மூடி அடிமைகளாக இருக்க வேண்டும். இது தமிழகத்திற்கும், இந்திய அரசுக்கும் பெரும் மானக்கேடாகும்.

எனவே, இலங்கையில் போரை நிறுத்தி இந்திய அரசின் மேற்பார்வையில் தமிழக அரசு மூலமாக பேச்சு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற வழிவகை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்காகத்தான் இந்தப் போர் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது தொடர்பாக கேட்டபோது, இலங்கை வடக்கு, கிழக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களின் கட்டடங்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களைச் சிங்கள அரசு அழித்து வருகிறது. தமிழர்களையும் படுகொலை செய்கிறது. இத்தனையையும் செய்துவிட்டு, தமிழர்களை எப்படி காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கேட்டனர்.

விடுதலைப் புலிகளை அடியோடு ஒழித்து விட்டால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக பேச வேண்டி இருக்காது என சிறிலங்கா அரசு கருதுகிறது. சிறிலங்கா அரசின் உறுதிமொழிகளை நம்ப முடியாது.

வடக்கு, கிழக்கு மாநிலங்களைப் பிரிக்க மாட்டோம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ச உறுதியளித்தார். ஆனால், ராஜீவ் காந்தி செய்த உடன்பாட்டை மீறி இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ராஜபக்சவின் சகோதரர் இந்தியாவில் உறுதியளித்தார். ஆனால், தமிழர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி : புதினம்

Posted in |

5 comments:

  1. அற்புதன் Says:

    அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்

    தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
    ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.

    நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
    நன்றி.

  2. Anonymous Says:

    Tamils for Obama.
    Re.petition to Obama concerning eelam tamils.
    This group is collecting electronic signatures from tamils all over the world to hand over petition to president Obama after Jan 20th.they are aiming for 100,000 signatures
    I think they have so far collected about 45,000 signatures from about 160 countries.
    I request our indian tamil brothers and sisters to sign this petition.
    web site-www.tamilsforobama.com
    thanks.

  3. Anonymous Says:

    திர்வரும் சொற்ப காலங்களில் மாபெரும் மனிதப்பேரவலம் நிகழவிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படவிருக்கின்றார்கள். இது சுனாமியை விட பன்மடங்கு மோசமானதாக இருகும். இன்று வரை இலங்கைப் படைகள் தாம் பிடித்துவிட்டதாக கூறப்பட்ட பிரதேசங்கள் குறித்து இராணுவக் கண்ணோட்டத்துடன் அணுகிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை படைகள் ஒவ்வொரு பிரதேசங்களும் பிடித்தவுடன் வெளிவிடும் வரைபடங்கள் ஊடாக இராணுவத்தின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றத��
    �. தமிழ் மக்களும் அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருக்கின்றர��
    �. ஆனால் மக்கள் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் வழித்து ஒரு சிறுவட்டத்துள் நகர்த்தப்பட்டுள்ளனர். இந்த சிறு வட்டத்துள் தான் இனி யுத்தம் நடக்கவிருக்கின்றது. இந்த வட்டத்துள் இனி விழும் ஒவ்வொரு குண்டும் பல நூறு உயிர்களை காவுகொள்ளப்போகின்றது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எவரும் விதிவிலக்கின்றி சிதறி சின்னபின்னமாகப் போகின்றார்கள். இதுவரை காணாத கோர தாண்டவம் இனி அரங்கேற இருக்கின்றது.

    யுத்தம் முடிவுக்கு வருவதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இதனால் இனிமேல் நடக்கவிருக்கும் மனிதப்பேரவலம் குறித்து முதலில் சர்வதேசம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. எல்லாம் முடிந்தபின்னர் கண்டன அறிக்கைகள் விடலாம் அல்லது இரணுவம் பெற்ற வெற்றிகளில் அது மறைந்து போகலாம். யுத்தம் முடிவுக்கு வந்த கதையே இனி பேசப்படலாம்.

    சுமார் ஒருலட்சம் மக்கள் யுத்தம் நடக்கவிருக்கும் பிரதேசத்தில் அகப்பட்டு இருப்பதாக இலங்கை அரசு பிரச்சராம் செய்கின்றது. அகப்பட்டு இருப்பது மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள். இனி நடக்கவிருக்கும் யுத்தத்தில் குறைந்தது முன்று லட்சம் மக்கள் பலியாவார்கள் என்பதே இலங்கை அரசின் கணக்கு. அவ்வாறு நடப்பதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகம்.

    இப்போது தமிழர்வசம் இருக்கும் மக்களால் நிரம்பி வழியும் மிகச் சிறு பிரதேசத்தில் இருந்து மாபெரும் எதிர்ப்பு தாக்குதல் நடக்கும். அலையாய் படைகள் கிழம்பும். ஸ்டாலின் கிராட் போல் ஒரு பெரும் யுத்தம் நடக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டபடி தமிழ் மக்கள் வழிநடத்தப்படுகின்றனர். இந்தக் கணக்குகளை தமிழ் மக்கள் போடுவதை விட பல மடங்கு அதிகமாக இலங்கை படைகள் மற்றும் அதை வழிநடத்தும் சர்வதேச இராணுவ ஆலோசகர்கள் போட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மை. எந்த யுத்தம் எப்படி நடந்தாலும் எந்தவித எதிர்பார்ப்புக்கும் அப்பால் மக்கள் இங்கே அழிக்கப்படப்போகின்றார்கள் என்பதே உண்மை. ஈழத்தமிழர் வரலாற்றல் என்றுமில்லாதவாறு மனிதப்பேரவலம் ஏற்படப்போகின்றது.

    எமது உறவுகளுக்காக இறுதியாக தெருவில் இறங்கி போராட வேண்டிய காலகட்டம் இது. இன்றய காலகட்டத்தில் யுத்தம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிடில் என்னுமொருநாள் வீதியில் இறங்கி மகிந்தாவுக்கும் பென்சேகாவுக்கும் தண்டனை வாங்கி கொடுப்பது குறித்து போராடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை.

    இராணுவம் புலிகள் அவர்களது இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றில் தமிழ் மக்கள் சிக்குப்படாமல் கொல்லப்படப்போகும் மக்களை கவனத்தில் எடுப்பது அவசியமானது. இந்த அவலம் நடக்கப்போகின்றது என்று தெரிந்தும் தமிழர்கள் பாரமுகமாக இருந்தால் அது கொலைக்கான அனுமதியாகவே அமையும். இந்த மக்களை நோக்கி சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனுப்பப் படுதல் அவசியமானது. அதற்கான கோரிக்கைகள் போராட்டங்கள் அவசியமானது. தமிழன் சக தமிழன் சாகும் தருணத்தில் காப்பாற்ற இது தான் கடைசி சந்தர்ப்பம்.

    இலங்கையின் கிழக்கில் பல தமிழ் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். கடந்த வாரம் மட்டும் யாழ்பாணத்தில் எழு சடலங்கள் கரை ஒதுங்கிஉள்ளன. இலங்கை ராணுவம் பிடித்து செல்லும் மக்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுவதாக வந்த செய்தி கரை ஒதுங்கும் சடலங்களினூடாக உண்மை ஆகின்றது. இப்போது வன்னியில் சிக்குப்பட்டுள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றாலும் நிச்சயம் கொல்லப்படுவார்கள். புலிகள் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்த இந்த மக்களை கொல்வது அரசின் பிரதான தெரிவாகவே இருக்கும். கடந்த காலத்தில் சிங்கள கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய போது கிளர்ச்சியாளர்களின் குடும்பங்கள் உறவினர்கள் அனைவரையும் கொன்றொழித்தது அவர்கள் தேர்வாக இருந்தது. இப்போது யுத்த பூமியில் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு மரணம் ஒன்றே எவ்வகையிலும் முடிவாக உள்ளது. உலகத் தமிழர்கள் இந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு யுத்தத்தை நிறுத்த உடனடியாக குரல் கொடுக்க வேண்டிய இறுதிக் கட்டம் இது.

  4. Anonymous Says:

  5. Anonymous Says:

    http://www.youtube.com/watch?v=bETL3Q9XliY&feature=channel_page

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails