உண்ணாநிலை போராட்டத்தை முடித்தார் திருமாவளவன்

ரொம்ப மகிழ்ச்சி அய்யா, நாங்கள் ஒரு உண்மை உணர்வாளரை இழக்கவில்லை. உமக்கு தலை வணங்குகிறேன். தமிழினம் காக்க வந்த உண்மை தலைவனே, உன் எண்ணம் நிறைவேற நாம் என்றும் உறுதியுடன் உன் பின்னால் நின்று உன் கரத்தை உறுதி படுத்துவோம். இது சத்தியம்,சத்தியம்,சத்தியம்.


இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார்.
இவரின் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

கடந்த வியாழக்கிழமை காலை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன், தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்ததால் அவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருமாவளவன் மயக்கநிலைக்குச் சென்றதால், அவரை அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊர்திக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.

திருமாவளவனுக்கு மயக்கம் ஏற்பட்டதை அறிந்த கட்சித் தொண்டர்கள் அவர் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இரண்டு தடவை நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் செயலாளர் இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் மேடைக்கு வந்து உண்ணாநிலை போராட்டத்தினை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.


எனினும் திருமாவளவன் தனது உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்தார்.

இன்று மாலை 5:00 மணிக்கு திருமாவளவனைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதால் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

"இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் (மருத்துவர் இராமதாஸ், திருமாவளவன்) இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தின் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது. எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.





அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் மருத்துவர் இராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை மருத்துவர் இராமதாஸ் ஏற்றுக்கொண்டதையடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

தொடர்ந்து, திருமாவளவனுக்குப் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை மருத்துவர் இராமதாஸ் முடித்து வைத்தார். திருமாவளவனுடன் சேர்ந்து உண்ணாநிலை இருந்த கட்சியின் மற்ற தொண்டர்களும் போராட்டத்தை இன்று மாலையுடன் முடித்துக்கொண்டனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன், இயக்குநர் பாக்கியராஜ் ஆகியோரும் திருமாவளவனைச் சந்தித்து உண்ணாநிலை போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

நன்றி : புதினம்

Posted in |

5 comments:

  1. Anonymous Says:

    situation in vanni is entering a deadly phase .
    srilankan is targetting civilians and spreading a false propaganda saying that LTTE is preventing people to mave.
    most of the people are from maveerar families and they want to stay in thair own land.even if they go to army controlled ares ,sinhala army is petting them in concentration camps and torturing them or killing them.
    I want world tamils to do something about it.read this article,thanks tamil net.
    "There are no words to describe the plight of the civilians who say that they prefer to face death on the spot rather than succumbing to serious injuries or ending up in the hands of the invading Sri Lankan forces, which many of them regard as genocidal military and fear that their young men and women would be 'filtered' away, tortured or killed by it," reports TamilNet correspondent from an outskirt of Puthukkudiyiruppu (PTK) Sunday evening amid artillery fire.

    The indiscriminate fire was targeting areas where there were no hostile military activities. The fighting was going on in a few corners, but the artillery barrage by the Sri Lankan forces was targeting all the areas, threatening to cause civilian carnage, completely ignored by the International Community.

    As nearly all of the civilians are displaced, they are unable to conduct proper funeral with rites. There are dead bodies un-attended due to artillery siege, only some of those killed are buried hurriedly before the remaining have to choose fleeing onwards from the onslaught of the indiscriminate shelling.

    Ambulance drivers said they spotted at least 10 dead bodies on Sunday. Six of the bodies were transported to hospital mortuary until 3:00 p.m. But, there were reports of more bodies lying in areas un-accessible by the ambulances. The casualties were reported in Va'l'luvarpuram (Redd Barna settlement), Mayilvaakanapuram (2 dead bodies recovered), Thearaavil and Maa'nikkapuram. 12th Mile Post in Visvuvamadu, Punnaineeraavi and areas close to Chu'ndikku'lam, which have come under continuous artillery barrage.

    At least 18 civilians were killed within the last 24 hours and 42, including many children, women and elderly, wounded in the indiscriminate artillery barrage by the SLA, according to available data from the medical sources, as reported earlier.

    But, many more are feared dead, wounded and trapped in areas not accessible for medical assistance.

    On Saturday, the premises of Punnaineeraavi school, one of the few remaining localities where Ki'linochchi hospital is functioning, came under artillery barrage. All treatment at the hospital stalled and there was no medical transport available to approach the injured. Civilians were screaming and running in all directions, confused and shocked by the indiscriminate bombardment.

    Medical authorities said they had repeatedly urged protection for medical installations and provided coordinates through the ICRC.

    Two civilians were killed and six wounded while they were fleeing from their house in Punnaineeraavi, while the hospital was under artillery barrage on Saturday. Three of the wounded, with serious injuries, had to wait for hours for medical assistance.

    Many of the wounded civilians were only managing with the first aid knowledge that they now possess.

    At Piramanthanaa'ru, at least two civilians were killed when their tractor, hit by artillery shelling got fire and burnt down on the spot on Saturday. Also on previous day, the shelling by the SLA killed 3 civilians who were fleeing with their belongings on Piramanthanaa'ru - Visuvamadu Road.

    "Deaths by artillery shells have become all too common."

  2. Anonymous Says:

    சாகும் வரை உண்ணாவிரதம்னு சொன்னான்? இப்போ முடிஞ்சிடுச்சு சொல்ற? என்னாபா அர்த்தம்?

  3. Anonymous Says:

    //சாகும் வரை உண்ணாவிரதம்னு சொன்னான்? இப்போ முடிஞ்சிடுச்சு சொல்ற? என்னாபா அர்த்தம்?//

    குடுமி சார் உங்க வருத்தம் றொம்ப நன்னா புரியிறது. இதன் சான்ஸ் திருமாவ மேல அனுப்ப என்று இருந்திருப்பீங்க, ச்ச கனவுல மண்ண போட்டாங்களேப்பா. றொம்ப வருத்தமா இருக்கோ?

  4. Mike Says:

    /*
    சாகும் வரை உண்ணாவிரதம்னு சொன்னான்? இப்போ முடிஞ்சிடுச்சு சொல்ற? என்னாபா அர்த்தம்?
    */

    மனிதர்கள் சாவதை வேடிக்கை பார்க்கும் மனிதர்களுக்கு மத்தியில், இவரை போன்ற ஒருவரும் அவர்களுக்காக உயிர் துறக்க இருக்கிறார் என்பதே, சிங்களத்துக்கும், தமிழின துரோகிகளுக்கும் அடிக்கப்பட்ட சவுக்கடியே. வயிறு எரிகிறதா பிழைத்து விட்டார் என்று. நல்ல எரியட்டும்.

  5. Mike Says:

    /** //சாகும் வரை உண்ணாவிரதம்னு சொன்னான்? இப்போ முடிஞ்சிடுச்சு சொல்ற? என்னாபா அர்த்தம்?//

    குடுமி சார் உங்க வருத்தம் றொம்ப நன்னா புரியிறது. இதன் சான்ஸ் திருமாவ மேல அனுப்ப என்று இருந்திருப்பீங்க, ச்ச கனவுல மண்ண போட்டாங்களேப்பா. றொம்ப வருத்தமா இருக்கோ?

    **/

    நன்றி நண்பரே, மனிதர்களை பாருங்களேன் இந்த உலகில் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று. இவனுங்களுக்கெல்லாம் இதுமாதிரி திருப்பி கொடுத்தாதான் சரி.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails