வச்சான்யா சிங்குக்கு பெரிய ஆப்பு, தமிழீழமே இந்தியாவிற்கு பாதுகாப்பானது

திருகோணமலை கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்துக்கு சிறிலங்கா அனுமதி?

தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலை கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்துக்கு சிறிலங்கா அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க தூதுகுழு ஒன்று கடந்த 13 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டது.

இத்தூதுக்குழு சிறிலங்கா படைத்தரப்பினருடன் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இக்குழு திருகோணமலையில் துணைப்படைக் குழுவின் தலைவர் சந்திரகாந்தனை சந்தித்து உரையாடியது.

மாலைதீவுக்கும் அக்குழு பயணம் மேற்கொண்டது.

இப்பயணத்தின் போது திருகோணமலை கடற் பிரதேசத்தில் ஏவுகணை கவசத் திட்டம் ஒன்றை அமெரிக்காவுக்கு சிறிலங்கா அனுமதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கை மட்டுமே அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளைப் புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவே அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் கொணண்ட் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

நன்றி : புதினம்

Posted in |

6 comments:

 1. Anonymous Says:

  இந்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கையைக் காற்றிலே பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றது இந்த மட அரசு.

  இந்திரா காந்தி ஆட்சியில் சிங்கமாக இருந்த இந்தியா,இப்போது நாயாக இருக்கிறது.

  புலிகள் நினைத்திருந்தால்,திரிகோனமலையை
  அமெரிக்க,ருசியா,சீனா யாருக்கு வேண்டுமானலும் விற்று ஈழத்தை அடைந்திருப்பார்கள்.
  இப்போது சோனியாவிற்கு இந்தியா முக்கியமா,பிரபாகரனின் இரத்தம் முக்கியமா என்பதை வெளிப்படுத்த வேண்டும் மவுண மோகனார்.

 2. ~மா.சே~ Says:

  தனிஈழம் புலிகளின் தலைமையில் அமைந்தால் அது அமெரிக்காவுக்கு எதிராக் இருக்குமா அல்லது அமெரிக்க நிர்பந்த்த்திற்கு படியுமா?

  இந்தியா
  பாகிஸ்தான்
  இலங்கை
  இந்த மூன்று நாடுகளுக்குள் யார் அமெரிக்காவுக்கு சிறந்த அடிமை என்பதில் நடக்கும் போட்டியில் நான்காவதாக புலிகள் சேரலாம்.
  அவ்வளவே சாத்தியம்

  ஏனென்றால் இதுவரை புலிகள் அமெரிக்காவை தனது எதிரியாக கருதியதில்லை.

  என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவை எதிர்காமல் எந்த ஒரு நாடும் தேசிய விடுதலையை அடைய முடியாது.

  அந்த நிலை ஈழத்துக்கும் வரும்

 3. selvan Says:

  இந்தியா மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்து வருகிறது.
  ஈழத் தமிழ் மக்கள் கலாசார மொழி ரீதியாக தமிழ் நாட்டு மக்களிடம் உள்ள உறவு கரணமாக எப்போதுமே இந்திய நலனுக்கு எதிராக நடக்க மாட்டார்கள். அதைப் புரிந்தும் இந்தியா சிங்கள அரசுக்கு உதவி செய்கிறது.
  இந்திய அரசு விடுதலைப் புலிகள் இருவருமே ஒரு சமயத்தில் தவறு செய்தார்கள் தான். ஆனால் அரசியலில் நண்பனும் பகைவனும் மாறுவார்கள்.
  ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா இன்று ஜப்பானின் நேச நாடு.
  தூர நோக்குப் பார்வை இருந்தால் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்க வேண்டும்.அதுதான் இந்திய பிற்கால நலனுக்கு நல்லது. இல்லாவிட்டால் புலிகளை அழித்து விட்டு சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கை அரசு எல்லாவிதமான உதவியும் செய்து இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் காலுன்ற வைத்து இந்தியாவைக் கண்காணித்து ஊடுரவ நினைப்பார்கள்.
  அது மட்டுமில்ல உண்மையில் தமிழ் நாட்டு மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்து அவமதிப்பதன் மூலம் இந்திய அரசு அடுத்த தலைமுறைத் தமிழர்களை இந்திய ஒற்றுமைக்கு எதிராகச சிந்திக்க வைக்கதூண்ட வைக்கபோகிரர்கள். ஈழம் வந்தால் அது தமிழ் நாட்டிலும் எதிரொலித்து இந்திய ஒற்றுமையைக் குழப்பும் என்று இவர்கள் நினைக்கிறார்கள் ,ஆனால் ஈழம் வராமல் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தால் அதன் பின் விளைவுகள்தான் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதிக்கும்.

 4. Anonymous Says:

  Well said Selvan

 5. Anonymous Says:

  செல்வன் அவர்களின் கருத்தை ஆங்கிலத்திலும்,இந்தியிலும் மொழி பெயர்த்து அத்துனைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

 6. A.S.Logan, Oslo Says:

  I also feel that the comment by mr. Selvan shal be translated in hindhi and english and published as public opinion.

  Regards
  A.S.Logan

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails