தமிழர் கொந்தளிப்பு இந்தியா முழுவதும் பரவும்!

"தி சண்டே லீடர்" ஆங்கில வார இதழின் செய்தியாளர் லசந்தாவிக்கிரம துங்கேவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இலங்கைப் பிரச்சனை குறித்து விரிவான நேர்காணல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:


கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கவும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் கோரி - குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரத் தைப் பகிர்ந்து அளிக்கக்கோரி போராடி வருகிறீர்கள். இதற்குத் தங்கள் தரப்பிலான நியாயம் என்ன?

பதில்: மொத்த உலகமே இதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை என்பதை நன்றாக அறியும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கைப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்தப் பிரச்சனைக்கு அரசு உண்மையிலேயே தீர்வு காண விரும்பியிருந்தால், எப்போதோ தீர்வு கண்டிருக்கும். இதற்கு மாறாக அரசியல் உரிமை கோரும் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும், அவர்களைத் தமது ஆதிக்கத்தின் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்றுதான் இலங்கை அரசு நினைத்தது.

வல்லான் வகுத்ததுதான் வழி யென்றாலும், தற்போதைய நவீன காலகட்டத்தில் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய அணுகுமுறை செல்லுபடி யாகாது. எதிர்த்தரப்பு என்னதான் குறைந்த எண்ணிக்கையில் இருந்த போதிலும், அவர்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லையென்றாலும் கூட அவர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு போரிடவே செய்வார்கள். இது உலகம் அறிந்த நடைமுறைதான். குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் கூட முழு சமுதாயத்தையும் பீதிக்குள் ளாக்க முடியும். இதை நாம் ஊக்கப் படுத்தப் போகிறோமா? - இதை நாம் முழு மனதுடன் ஆதரிக்கிறோமா? - என்பதுதான் கேள்வி. இலங்கை அரசு இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலை விரும்பி அழைக்கின்றதா என்பதைக் கூறவேண்டும்.

அங்குள்ள இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே பிரச்சனையின் வேர் ஆகும். தங்கள் நிலைப்பாட்டின்படியே தீர்வு காணப்பட வேண்டும் என விரும்பினால் அதைக் கூற வேண்டும். இதன் மூலம் மறுதரப்பும் மற்ற நாடுகளும் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியும். இலங்கை முன் வைக்கும் தீர்வில் சில மாற்றங்களையும் திருத்தங்களையும் அவர்கள் கோரக் கூடும். இந்த இருதரப்பு கருத்துக்கள் மீது உலக நாடுகள் விவாதிக்கட்டும்.

அதன் பிறகு இலங்கை அரசு ஓரளவுக்கு இறங்கி வரும்படியும் - அதே போல் எதிர் தரப்பு சில விஷயங்களில் இறங்கி வருவதன் மூலம் அமைதி திரும்பும் என்பதையும் அவர்கள் கூறமுடியும். இதுதான் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழி.


கேள்வி: இது எங்கள் உள்நாட்டு விவகாரம். இது எங்கள் இறை யாண்மை தொடர்புடையது. இதில் சர்வதேச சமூகம் தலை யிட முடியாது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பயங்கரவாதப் பிரச்சினைகள் உள்ளன என்று இலங்கை அரசு வாதிடுகிறது. இதற்கு தங்களின் பதில் என்ன?

பதில்: இலங்கை ஒரு சுதந்திர மான நாடு என்பதை நாங்கள் ஏற்கிறோம். அந்த நாட்டின் இறை யாண்மையில் தலையிடுவதை நாங் களும் விரும்பவில்லை. அதை மதிக்கி றோம். ஆனால் இது முழுவதும் உள்நாட்டு விவகாரம் அல்ல.


கேள்வி: இது தொடர்பாக, இலங்கை அதிபர் முன்வைக் கும் நிலைப்பாடு என்ன வென்றால், கிழக்கு மாநிலத் தை விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்துள்ளோம். அங்கு தேர்தல் நடத்தப்பட்டு மாநிலக் கவுன்சில் உருவாக்கப்பட்டு ஆட்சி நடை பெறுகிறது. உண்மையில் விடு தலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரே, குழந்தைப் போராளியாக அந்த அமைப்பில் சேர்ந்த ஒருவரே இப்போது இங்கு முதலமைச்சராக ஆகியுள்ளார் என்பதே அவர் சுட்டிக் காட்டுவ தாகும். இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை இது நிவர்த்தி செய்யவில்லையா.

பதில்: அவர் ஒரு தேர்ந் தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர். அவர் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளதால் அவரை நாங்கள் மதிக்கிறோம். நான் ஒரு பகுதியை விடுவித்துவிட்டேன் என்று அவர் கூறும்போது, அதை எந்தநாடு பிடித்து வைத்திருந்தது; அதில் எவ்வளவு பகுதி விடுவிக்கப்பட்டது என்பதைக் கூற வேண்டாமா? அந்தப் பகுதியை யாரிட மிருந்து எங்கிருந்து விடுவித்தார் என்பதை உலகுக்கு அறிவிக்க வேண் டாமா? அவர்தான் இலங்கையின் குடியரசுத்தலைவர், இலங்கையின் இறை யாண்மை பற்றி அவர்தான் பேசுகிறார் என்றால் இலங்கைக்குள் விடு விக்கப் பட்ட பகுதி எப்ே பாது வந்தது என்பதை அறிய நான் விரும்பு கிறேன். அவருடைய அதிகாரத்திற்கு என்ன நேர்ந்தது?


கேள்வி: இலங்கையிலுள்ள சூழலுடன் உங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும் அனுபவங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை ஜனநாயக சட்டகத்துக்குள் கொண்டுவந்து பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: அவர்களிடமும் முறை யிடவே செய்கிறோம். ஏனெனில் உலகில் ஏற்பட்ட அனைத்து மோதல்களும், முதலாம் உலகப் போர் உள்ளிட்ட அனைத்துப் போர்களும் சமாதான உடன்பாட்டின்படியே முடிவுக்கு வந் துள்ளன. மிகக் கொடுமையான இரண் டாம் உலகப் போர்கூட ஓர் உடன் பாட்டுக்குப் பின்னரே முடிவுக்கு வந்தது. ரத்தம் ஆறுபோல் ஓடும் எந்த யுத்தத் துக்குப் பின்னரும் ஒரு அமைதி உடன் பாடு உருவாக வேண்டும். அத்தகைய உடன்பாடு இலங்கையில் உருவாக 50 ஆண்டுகாலம் ஏன் ஆனது?


கேள்வி: 1987ல் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எற்காமல் இந்திய அமைதிப் படைக்கு எதிராகப் போராடியது...?

பதில்: நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். இப்போது மீண்டும் தொடங்கக் கூறுங்கள். அதை ஏற்கும்படி நாங்கள் விடுதலைப்புலிகளிடம் கோருகிறோம். அவர்கள் கோரும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என்று எதிர்த் தரப்பினரிடம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் வலியுறுத்தி அழுத்திக் கூறி ஏற்கச் செய்வார்கள். ஆயுதம் ஏந்தக்கூடாது, ராணுவத் தீர்வு எந்த வகையிலும் நல்லதல்ல என்று நாங்கள் கூறுவது இருதரப்பிற்கும் பொருந்தும்.


கேள்வி: இது உங்கள் நிலைப்பாடு என்று கூறுவீர்களா? ஒன்றுபட்ட இலங்கைக்குத் தீர்வு காணவேண்டு மென்று உங்கள் கட்சி கூறுகிறதே?

பதில்: இப்பிரச்சினையில் இலங்கை யில் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே எங்கள் முதல் விருப்பம். அதன் பின்னர் அடிப்படை பிரச்சனை இலங்கை அரசைச் சார்ந்துள்ளது. இப்பிரச்சனைக் குத் தீர்வு காணும் ஒரு வழிமுறையை இலங்கை முன்வைக்கவேண்டும். அதன் பிறகு அதன் சரத்துக்களை ஆய்வு செய்து அதில் திருப்தியான அம்சங்கள் என்ன உள்ளது என்பதைப் பார்ப்போம். அவ்வாறு இருந்தால் உள் நாட்டுச் சண்டையைக் கைவிட்டுவிட்டு இதனை ஏற்கும்படி தமிழ்க் குழுக்களை வலியுறுத்துவோம். இதுதான் எங்கள் கட்சியின் நிலை.


கேள்வி: போர் நிறுத்தம் அறிவிக்க விடுதலைப்புலிகளுக்கு வேண்டு கோள் விடுத்தீர்கள். விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தத்தை ஏற்பதாக அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து தாங்கள் இந்திய பிரதமருக்குக் கடிதம் எழுதினீர்கள். இதற்கு இந்தியப் பிரதமர் அளித்த பதில் என்ன?

பதில்: இதுதான் பிரச்சனையின் தீவிரம். உண்மையில் இது நல்ல கேள்வி. கடுமையான சூழ்நிலையில் செயல்பட்டு வரும் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு எங்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்துப் பொதுவான பத்திரிகைகள் மூலம் அறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால் ஒரு குடிமகன் தனது நாட்டில் பிரதமருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக கடிதம் வந்தது என்ற தகவல் கூட அனுப்பப்படவில்லை.


கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் இல்லை என்பதுதான் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது இதன்மூலம் புரியவில்லையா?

பதில்: அவர்கள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டுமா வேண் டாமா என்பது பற்றியாவது அவர்கள் பேசியிருக்க வேண்டும். ஒரு நிமிடத் திற்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டையை மறந்துவிடுவோம். அங்கு அமைதி திரும்ப வேண்டுமா? வேண் டாமா? அங்கு அமைதி திரும்பாமலே முன்னேற்றம் காணமுடியும் என்று இலங்கை குடியரசுத் தலைவர் எண்ணு கிறாரா? இலங்கை சிங்களவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் வாழ்க்கை மேம்பட அந்தத் தீவில் அவர்கள் அமைதியாக வாழ வேண்டாமா? அதற்கு அமைதி உருவாக வேண்டும். அமைதி திரும்பிவிட்டால் தமிழர்களுக்கு மட்டு மல்ல. சிங்களவர்களுக்கும் அது நல்லதையே செய்யும்.


கேள்வி: இப்பிரச்சினையில் இலங்கை குடியரசுத் தலைவரின் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன? அங்கு அமைதி நிலவவும் மேம்பாடு காணவும் விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாகத் தோற் கடிக்க அவர் விரும்புகிறார். ஏனெ னில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதை விடுதலைப்புலிகள் ஏற் கப்போவதில்லை, அங்கு அமைதி திரும்பியதும் வடக்கு மாநிலத் திற்கான அரசியல் சலுகைகளை அறிவிப்பேன் என்று இலங்கை அதிபர் கூறுகிறார்.

பதில்: அனைத்து நாளிதழ்களை யும் அவர் தவறாமல் வாசிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யா விலுள்ள சிறிய பகுதி செசன்யா. ரஷ்ய ராணுவத்தின் பலமும் ஆற்றலும் உலகம் அறிந்தது. அத்தகைய செம்படைகளா லேயே செசன்யாவைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அமைதி திரும்ப அங்கு சமாதான உடன் பாட்டுக்குத்தான் வரவேண்டியிருந்தது.

இன்றைய உலகில் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அளவை வைத்து முழு விவகாரங்களை யும் முடிவு செய்திட முடியாது. அவரால் முடியும் என்று அவர் நினைக்கிறார். ஒரு பகுதியை விடுவித்துவிட்டேன் என்று அவர் கூறுகிறார். முழுப் பகுதியையும் விடுவித்துவிடுவேன். எதிரிகள் வசம் உள்ள அப்பகுதியில் எங்கள் கொடியைப் பறக்கவிடுவேன் என்றும் அவர் கூறக் கூடும். ஆனால் மறுநாளே வேறு ஓர் இடத்தில் சண்டை தொடங்கக்கூடும் என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. ஆனால் ஓர் அரசியல்வாதி என்ற முறையில் பல்வேறு வடிவங்களில் அது தொடரவே செய்யும் என்பதை என்னால் கூறமுடியும்.


கேள்வி: தமிழ்நாடு சட்டப்பேரவை யில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும்கூட இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்ஷே இதை நிராகரித்து இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்தபோது விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங் களைக் கீழே போட்ட பிறகுதான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள முடியும். விடுதலைப்புலிகளின் அறிக்கைகளை மட்டும் நம்ப முடியாது என்று அப்போது கூறி யுள்ளார். தற்போது இப்பிரச்சனை யில் ஒரு தடையை நாம் சந்தித்து வருகிறோம். இதை எப்படித் தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: மத்திய அரசு மற்றும் அதன் குடிமக்கள் இடையே தற்போது பிரதான விவாதம் நடைபெற்றுவருகிறது. ஏனெனில் நாங்கள் நேரடியாக ராஜ பக்ஷேவிடம் பேச முடியாது. ஆனால் ஒரு நட்பு நாடு என்ற முறையில் இந்திய அரசு பேச முடியும். இலங்கை அரசின் மீது தனது செல்வாக்கைச் செலுத்த முடியும். மனிதாபிமானம், மானுட உதவி என்ற அடிப்படையில் போர் நிறுத்தத் துக்கு அழைப்பு விடுக்க முடியும். இது இந்திய அரசின் கடமையும் ஆகும். எனவே இந்திய அரசு பேசும்படி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தப் போகிறோம்.


கேள்வி: இலங்கை ராணுவத்தில் சேரும் தமிழர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பது, இலங்கை ராணுவத்திற்குத் தொழில் நுட்ப உதவி அளிப்பது ஆகியவற்றைத் தொடர்வதன் மூலம் உங்கள் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்து விட்டதே? விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதைத்தானே இந்திய அரசும் விரும்புகிறது?

பதில்: நோக்கங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால் இப்பிரச் சினைக்கு விரைவாகத் தீர்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யானால் தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் எதிர்விளைவுகள் தமிழ்நாட்டில் மட்டு மல்லாமல் இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸுக்கு மட்டுமல்ல. அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.


கேள்வி: தேர்தல் அடிப்படையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறீர்களா?

பதில்: தேர்தலில் மட்டுமல்ல இந்தி யாவின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிலும் கூட. ஏனெனில் சட்டமன்றத்தில் ஏகமன தாகத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டு மல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகள், முதல்வர் மூலமாகவும் குரல் கொடுத்த பின்னரும்கூட இந்தக் கோரிக்கைகளை யெல்லாம் மத்திய அரசு பார்க்க மறுக் கிறது என்றால் இந்தியாவில் நாங்கள் இந்தியர்கள்தானா, அல்லது வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறோமா என்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்படுகிறது.


கேள்வி: இந்தியாவுக்குள் தனி நாடு என்ற கோரிக்கை எழும் என்று கூறுகிறீர்களா?

பதில்: நான் ஒரு கம்யூனிஸ்ட். இந் திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறேன். அப்பிரச்சினையை நான் எழுப்பவில்லை. நான் மெளனமாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சி மெளனமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களையும் குரலையும் நாம் அடக்க முடியாது.


கேள்வி: இந்திய நாடாளுமன்றத் திற்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால்தான் இலங்கைப் பிரச்சனை எழுப்பப் பட்டுள்ளது என்று கூறப்படுகிறதே?

பதில்: ஒன்றை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். இப்பிரச்சனை யில் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து உடனடியாக ஒரு தீர்வு காணப்படவில்லையென்றால் தற்போது இந்தியாவை ஆளும் கட்சிகளும் அதி காரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கட்சி களும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும்.


கேள்வி: இக்கேள்வி எங்கிருந்து எழுப்பப்படுகிறது என்றால் தற்போது வடக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்சனையால் இரண்டு லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளதற்கு காரணமான தற்போதைய யுத்தம் போன்றே கடந்த ஆண்டு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை. அரசு தொடுத்தது. ஆனால் அப்போதெல் லாம் தமிழ்நாட்டிலோ அல்லது வேறு எங்கோ இது போன்ற கோரிக்கை எழவில்லை. ஆனால் வடக்கிலும் விடுதலைப்புலிகளைத் தோற்கடிக் கும் நடவடிக்கையில் தற்போது இலங்கை அரசு ஈடுபட்டுள்ள போது மட்டும் ஏன் பிரச்சனை எழுப்பப் படுகிறது?

பதில்: உண்மைதான். கடந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் இப்பிரச் சனைகளை மற்ற கட்சிகளைப் போன்றே நாங்களும் எழுப்பினோம். இதற்குத் தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எண்ணினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதை நாங்கள் பார்க்கும் போதும், பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் எங்கள் செவிகளில் விழும்போதும் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.


கேள்வி: இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது சுடப்பட மாட்டார்கள் என்று இருநாடுகளும் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டது. இது தங்களுக்குத் திருப்தி யளிக்கிறதா?

பதில்: இல்லை.கடந்த வாரம் கூட நான்கு ஐந்து மீனவர்களைச் சுட்டிருக்கிறார்கள். காயமடைந்த மீன வர்கள் மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் சுட்டுவிட்டுப் பின்னர் மறுக்கிறார்கள். அப்படியானால் மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் மர்மப்படை எங்கிருந்து வந்தது. இதையாவது அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.


கேள்வி: அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொண்டதால்தான் மத்திய அரசு உங்களுக்குப் பதிலளிக்க மறுக்கிறதா?

பதில்: இல்லை. அதற்கு இது காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல் லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாடே, மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுக உட்பட இக்கோரிக்கைகளை எழுப்பியுள்ளது.


கேள்வி: ஆனால் கருணாநிதி கோரிக்கைக்காவது பிரதமர் மதிப்பளித்திருக்க வேண்டுமல்லவா?

பதில்: தமிழ் மக்களுக்கு எதிரான தாகவே டில்லியில் மனநிலை உள்ளது. ராஜபக்ஷே மட்டுமல்ல. மன்மோகன் சிங் கூட மூடிய மனதுடன்தான் இருக்கிறார்.


கேள்வி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைதான் இதற்குக் காரணமா?

பதில்: அக்கொலைக்குப் பின்னர் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் அவர் கள் என்ன செய்தார்கள். ஒரு தகவலுக் காக உங்கள் நினைவலைகளைக் கிளறு கிறேன். அந்தப் படுகொலையின் போது அவருக்கு அருகில் இருந்த நானும் குண்டுகளால் துளைக்கப்பட்டுப் படுகாய மடைந்தேன். அதற்காக இலங்கை தொடர்பான எந்தப் பிரச்சனை யிலும் நான் பேசக்கூடாது என்பதா? அது முறையல்ல. அங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது உண்மை யில்லையா? அப்பகுதிக்குள் ஊடகங்கள் செல்ல ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.

நாங்கள் விரும்புவதெல்லாம் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என்பதுதான். அரசியல்வாதி களையோ எங்கள் தொண்டர்களையோ அனுப்பப் போவதில்லையென்று தெளி வாகக் கூறிவிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதை மேற்பார்வையிட்டு அவர் களுக்கு ஆறுதல் கூற மதத்தலைவர்கள் மட்டும் அனுப்பப்படுவார்கள் என்றோம். இந்திய அரசும் இலங்கை அரசும் இதற்கு மறுப்பது ஏன்?


கேள்வி: ஆனால் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்குத் தான் அனுமதி வழங்கப்பட்டு விட்டதே?

பதில்: இல்லை. அது அவர் களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் மூலமாக வழங்கப்பட வேண்டும்.


கேள்வி: அரசுக்குச் செல்லவில்லை. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை யின்படி நிவாரணப் பொருட்கள் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டு ஐ.நா. அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் மறுக்கிறீர்களா?

பதில்: இந்த நிலைப்பாட்டில் எனக்கு ஐயப்பாடு உள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஏனெனில் தமிழ்மக்கள் மீது இந்திய அரசுக்கு அனுதாபம் கிடையாது. இவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அவர்கள்தான் ஆயுதங்களை அனுப்புகிறார்கள். அவர்களால் எப்படி உணவு அளிக்க முடியும்? அப்படியே அவர்கள் விருந்தே அளித்தாலும், தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்?


கேள்வி: இந்திய அரசு தமிழ் மக்களை எதிர்க்கிறதா? விடு தலைப் புலிகளை எதிர்க்கிறதா?...

பதில்: ... அந்த உணர்வு தமிழ் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் அனைத்து முயற்சிகளையும் மீறி அது வெற்றிபெறுகிறது. இந்திய அரசு விழித்துக்கொள்ளும்படி நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். இந்திய ஒற்றுமைக்கு அபாயம் ஏற்பட உள்ளது.


கேள்வி: உங்கள் கருத்துப்படி, இதனால்தான், காங்கிரஸ் அரசு செயல்பாடு மந்தப்பட்டுள்ளது என்கிறீர்களா?

பதில்: ஆம். ஏனெனில் இந்தியா சமாதானத்தையே கோரியிருக்கிறது. இப்போது மட்டுமல்ல, உலகில் எங்கும் சமாதானம் வேண்டும் என்று கோரி வந்திருக்கிறது.சூயஸ் கால்வாயில் குண்டு போடப்பட்ட போது, உடனே குண்டு வீச்சை நிறுத்தும்படி நமது பிரதமர் அறிக்கை விட்டார். உலகில் எப்போதெல்லாம் இது நிகழ்ந்ததோ அப்போதெல்லாம்.


கேள்வி: ஆனால், அதிக அதிகாரப்பரவல் வேண்டும் என்று கோருவது இந்திய அரசு தானே? 13வது சட்டத் திருத்தத்தை மேம்படுத்தவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் திரும்பத் திரும்பக் கூறுகிறார். அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கு 13வது சட்டத் திருத்தத்தை மேம்படுத்த வேண்டும் என்கிறார். தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கக் கோரிக்கை நிறைவு செய்யப்படவேண்டும் என்பதையே இந்திய அரசும் விரும்புகிறது என்பதை இது உணர்த்தவில்லையா?

பதில்: எனது பதிலை எளிமையாக்குவதற்கு உதவியிருக்கிறீர்கள். இது உள்நாட்டு விவகாரம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்திய அரசின் நிலைப்பாடும் இதுதான். அவர்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறார்கள். பிறகு, ராஜீவ் எவ்வாறு அங்கு போனார்? ஏன் அங்கு போனார்? இலங்கை பிரதமரோடு ஏன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்? அப்போது அவர் இந்தியப் பிரதமராக இருந்தார்.

இதேபோல், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி என்று பலரும் இலங்கை சென்று தனது இலங்கை இணையர்களுடன் விவாதித்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஏனெனில் பிரச்சனை பின்னிப் பிணைந்துள்ளது. இது இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல. இந்தியப் பிரச்சனையுமாகும். பிரிக்க முடியாத இந்தியப் பிரச்சனை.


கேள்வி: இது எவ்வாறு இந்தியப் பிரச்சனையாக முடியும்?

பதில்: இங்கேயுள்ள முகாம்களில் உங்கள் அகதிகள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக அவர்களைப் பராமரித்து வருகிறோம். அவர்கள் நாடற்ற மக்கள். அவர்களது அடுத்த தலைமுறையினர் எவ்வாறு வாழ்வார்கள்? எங்கு படிப்பார்கள்? அவர்கள் எவ்வாறு தாய்நாடு திரும்பமுடியும்?

மொழிபெயர்ப்பு: அப்பணசாமி


நன்றி தென்செய்தி

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails