வரலாறு காணாத இனவெறி தாக்குதல்,300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்

தமிழர்களே இனியும் பொறுமை வேண்டாம், கொதித்தெழுங்கள். சிங்களவனை ஒரு கை பார்க்கலாம். கலைஞரே இன்னுமா மவுனம். இந்த மகிந்த அரக்கன் தமிழனைவரையும் கொல்வதற்கு முன் அவர்க்ளை காப்பாற்ற இன்று உன்னை விட்டால் வேறு யாருமில்லை. ஏதாவது முயற்சி செய்து, முதலில் யுத்த நிறுத்தத்தை கொண்டு வாருங்கள் கலைஞரே.

பிப்-15 பொதுக்க்குழு முடிவுக்கு முன்னால் இந்த அரக்கன் எல்லோரையுன் காலி பண்ணிடுவான். தயவு செய்து விரைவு படுத்துங்கள் இந்த இன அழிப்பு நடவடிக்கையை நிறுத்துவதற்கு. பிரணாப் மாதிரி காலம் கடத்தாதீர்கள். அழிவு நம்மை நெருங்குகிறது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கித் தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியொரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என "புதினம்" செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.

இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகள் - தமது வன்னிச் செய்தியாளரை மேற்கோள் காட்டி "தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்ட செய்திகளிலிருந்தும், எமது வன்னிச் செய்தியாளர் அனுப்பிய செய்திகளிருந்தும் தொகுக்கப்பட்டவையாகும்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் - மிகக் கொடூரமாக பொதுமக்களை நோக்கி அதிகரித்து வருவதால் - இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம் என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Posted in |

8 comments:

  1. Anonymous Says:

    I hear people are bleeding to death on the street of Mullaitivu.actually I have seen the footages.
    the sinhala army is on a rampage.
    The tamil people in srilanka can't do much at this point,they are intimidated by army and paramilitaries and can't even open their mouths,but tamils in other countries have to do something immediately to stop this carnage.
    It is scandalous the so called international media and the international community are keeping queit without reporting these atrocities.
    we must send the pictures from vanni to BBC ,CNN and other media.
    they are failing their duties by not reporting it and indirectly assisting the sinhala govt in genocide,.
    we should think and plan quickly.
    I ask tamil people to go and assesmle in front of downing street in UK,white house in USA,european union in Brussels, the united nations office in Geneva and indian parliament in Delhi and ask the international community to act ASAP and to condemn sinhala govt.

  2. Anonymous Says:

    கலைஞரே இன்னுமா மவுனம். இந்த மகிந்த அரக்கன் தமிழனைவரையும் கொல்வதற்கு முன் அவர்க்ளை காப்பாற்ற இன்று உன்னை விட்டால் வேறு யாருமில்லை.//

    உங்கள் காமெடிக்கு ஒரு அளவேயில்லையா..

    விரக்தியில்
    ஒரு ஈழதமிழன்

  3. Anonymous Says:

    மிகப்பெரிய மனித அவலம் ஒன்று வன்னியில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.
    தமிழ் மக்களை இராணுவப் பகுதிக்குள் வரவழைத்து அவர்களைப் பயமுறுத்தி பொய் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்காத படியால் இப்படியான அரக்கத்தனமான வேலைகள் செய்து தமிழர்களை கொன்று குவிக்கும் வேளையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சர்வதேச சமூகமும் வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பேசும் அமைப்புகளும் மௌனமாக இருப்பது கண்டிக்கத் தக்கது.
    வானதி சொன்ன மாதிரி புலம்பெயர் தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் அந்தந்த நாட்டுப் பாராளுமன்றம் ,ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றங்கள் முன்பாக நீதி கேட்டுக் கூடுங்கள்.அவர்கள் வந்து பேசி ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுமட்டும் அந்த இடத்தை விட்டு நகராதீர்கள்
    மிக அவரசமான வேண்டுகோள் இது.

  4. Anonymous Says:

    இந்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானங் கொண்டு வர வேண்டும்.பொய்யே சொல்லித் தமிழரை ஏமாற்றி,அவமதித்து வந்துள்ளது.

    ராஜபக்சேவின் புழுகை வெளிக்கொணர வேண்டும்.தமிழகத் தலைவர் குழு உடனே ஈழ்த்திற்குச் சென்று வரவேண்டும்.

  5. கந்தப்பு Says:

    எப்பொழுது ஈழத்தமிழனுக்கு விடிவு கிடைக்கும்?

  6. Anonymous Says:

    நீங்க தண்ணிய தொறந்துவிட்டு அவனை போட்டா சிங்களன் என்ன பதிலுக்கு ஆப்பமா சுடுவான்? ஆப்புதான் வைப்பான்!!!

  7. Anonymous Says:

    துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள

  8. Anonymous Says:

    Voting For ADMK is தமிழின எதிரிக்கான வோட்டு

    Voting For DMK is தமிழின துரோகத்துக்கான வோட்டு

    Voting For தமிழர் Munnani is தமிழின எதிர்காலத்துகான வோட்டு

    What’s happening currently in Eelam and dumped reaction in Tamil Nadu will have very serious impact in the Self Determination and Self Respect Of Tamils.

    We can see that existing Dravidian parties are either supportive to Sri Lankan government or mute spectator of the happenings.

    ADMK is Thamizhinna Ethiri
    DMK is Thamizhina Throogi

    Suitable Alternate front need to be formed and this is the NEED of this Hour. This alone will safe guard and protect the Tamils in this venomous world. And Tamils will have some one to raise and openly speak up Tamils Issues, else there won’t be any one to raise the voice of Tamils in Political arena.

    • ADMK is Anti-Tamil, shell we don’t waste our time in discussing about it. But at least 60% of ADMK voters will (Note : Not Jaya’s Supporters or followers) support the cause of Tamils in Sri Lanka.

    • DMK has back stabbed Tamils and become as a Power Addict and Slave of Congress. Karunanithi’s focus is only to protect the Wealth and to ensure smooth Power transition to his entire FAMILY. We can’t trust DMK further as the Pole Ship of Tamils.

    • The Second Line DMK leaders and Leader-in-Lines never ever spoke about the recent carnage in Sri Lanka and voiced their support. M K Stalin speaks about only the Fund allotted to the Local Bodies and Women Self Help Groups. He can only become a good Manager / Administrator but NOT as a Leader, who takes brave decisions and take control of situations. He never ever demonstrated his voice / leadership skills on Tamils affairs. Same is the case of Azhagiri, he may bring victories on vote based politics, but still he need to prove his capabilities as a Tamil Leader.

    • If any suitable alternative is shown, at least 75% of DMK voters / supporters will switch side at this movement based on the sufferings of Tamils in Sri Lanka and DMK’s inactiveness and back stabbing. (Note : NOT Karunanithi’s supporters or followers).

    • Congress will face the worst decline of his voters and apparently 20 to 25 leaders alone will be there in each assembly constituencies, Congress is getting seats only because of alliance with Dravidian Parties.

    • Other National Parties are not having enough support bases and not represent the average Tamils.

    Now, the Only alternate is to bring the like minded parties in Tamil Nadu under one front for Supporting the Self Determination of Eelam Tamils and seek the Tamils support in the forth coming Parliament Election.

    Hope Sonia is in revenge mood and his Son Rohul who’s projected as next Congress Leader will follow the same. Hence to counter this, bringing all like minded political parties and Leaders under single front is Need of the Hour.

    This alone should be the Single Point Agenda and No ego should surface between them.

    MDMK , Thirumavalan’s DPI, PMK, CPI, and small parties & groups like TR and others can form a viable alternative and contest the elections, keeping Sri Lankan Tamil issue as Single Point Agenda under the banner Tamilar Munnani.

    By putting right candidates in very important constituencies, definitely this Tamilar Munnani can with at least 20 to 25 seats.

    Very Important: Need to deploy high profile and popular candidates in Congress Leader’s constituencies to ensure that they are defeated.

    Thirumavalavan – Chidambaram
    Vijaya TR – Mailaduthurai (Mani Shankar)
    Director Seeman – Sivagangai (P Chidamparam)
    Actor Sathiyaraj – Erode (EVKS Elangovan)
    Kaivijar Thamarai – Kovai (Prabu / SRB)
    Kolathur Mani – Salem (KV Thangabalu)

    If the above person’s are really interest in Tamils welfare, they should NOT keep away from contesting the elections.

    If they get Peoples mandate, who else will question the Support for Sri Lankan Tamils.

    Voting ADMK Alliance is Thamizar Ethirikanna Votu
    Voting DMK Alliance is Thamizar Throogathukanna Votu
    Voting for Tamilar Munnani is Thamizhar Ethirkalathukana votu

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails