17 பேரை கொன்றான் அரக்கன் மகிந்த, ஜெ இதை ஆதரிக்கிறாரா

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து அகோர பீரங்கித் தாக்குதல்: வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம் சந்தியில் பிள்ளையார் கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு காணிக்குள் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அழகன் பிரசாந்தன் (வயது 12) மற்றும் மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இருவரும் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் சிறுமி ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதளவுக்கு படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் அப்பகுதியை நோக்கி கடுமையாக நடத்தப்படுகின்றன.

இந்த இரு தாக்குதல்களிலும் சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.
மரியதாஸ் (வயது 52)

அகமதி (வயது 11)

மனோன்மணி (வயது 68)

கவிதா (வயது 30)

ஜெயரூபன் (வயது 14)

அன்பரசன் (வயது 07)

கிருபாகரன் (வயது 18)

பத்மநாதன் (வயது 44)

ரவீந்திரன் (வயது 36)

கல்யாணி (வயது 34)

ரவிச்செல்வன் (வயது 33)

அருளானந்தம் (வயது 53)

கனகம்மா (வயது 63)

ரவிச்சந்திரன் (வயது 39)

பரமலிங்கம் (வயது 40)

வக்சலா (வயது 17)

சந்திரராஜ் (வயது 14)

சசிதரன் (வயது 30)

தினேஸ்குமார் (வயது 30)

இரத்தினகுமார் (வயது 28)

யோ.சுரேஸ் (வயது 32)

சி.றெஐிதா (வயது 15)

நிறோசினி (வயது 37)

யோசேப் லியோன் (வயது 47)

சிவகுமார் ராதா (வயது 36)

சீரழகன் (வயது 23)

செ.பிரபு (வயது 32)

ஐ.நாகராசா (வயது 50)

இ.சுதர்சினி (வயது 52)

சி.கல்யாணி (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்ட சிறுவன் அழகன் பிராசந்தனின் தாயார் அவரின் உடன்பிறப்பும் படுகாயமடைந்துள்ளனர்.

Posted in |

4 comments:

 1. sen Says:

  ஜெயலலிதாவைக் கேள்வி கேட்பது வீண் வேலை..
  ஜெயலலிதா மட்டுமில்லை இங்கே வந்து கொஞ்ச நாட்களாக புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பாவிக்கிறார்கள் என்று சொல்லிப் பின்னோட்டம் எழுதுபவர்கள் எல்லோருமே சும்மா இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அவர்களுடைய பிரச்சார இயந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு கதை அளப்பவர்கள்தான்,
  இவர்கள் எல்லாம் தமிழைப் பேசிக்கொண்டே தமிழை வெறுப்பவர்கள்..
  தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழ் மண்ணை வெறுப்பவர்கள்..
  தமிழர்களிடம் பணம் வங்கிச் சம்பாதித்துக் கொண்டே தமிழர்களை வெறுப்பவர்கள் ...தங்களை கடவுளின் பிரதிநிதிகள் மாதிரிக் காட்டிக்கொண்டே மனிதாபிமானம் கொஞ்சம் கூட ஈழத் தமிழர்கள்பால் காட்டாதவர்கள் .
  சிங்கள அரசுக்கு ஆதரவான இவர்கள் நிலைப்பாடு கொஞ்சம் கூட மாறாது..
  என்ன ஆச்சரியம் என்றால் இப்படியானவர்களை தமிழ் சமூகம் இன்னும் ஆதரிப்பதன் மூலம் தங்கள் ஏமாளித் தனத்தைக் காட்டிக்க்கொண்டு இருக்கிறார்கள்.
  முதலில் இவர்களை ஊடக ரீதியாகவும் அரசியல் றீதியகவும் தமிழர்கள் புறக்கணித்தால் இவர்கள் தங்கள் நிலைப் பாட்டை மாற்றக் கூடும்..

  .

 2. Anonymous Says:

  இதென்ன சின்னப்புள்ளத்தனமான கேள்வியா இருக்கு!!!!!
  அந்த அம்மா 35 இலட்சம் தமிழனையும் கொல்லனும் என சொல்லும்.

  புள்ளிராஜா

 3. பிரபா Says:

  செயலலிதாவை விடுங்கள் எதிரி.
  தமிழீனத் தலைவர் கர்ணாநிதி என்ன புடுங்கியுள்ளார்?

 4. Anonymous Says:

  நீதி மன்றத்தில் இந்த அம்மையார் செய்த குற்றத்திற்குத் தண்டணை கொடுத்த்தால் இவரது அடிமைகள்
  கெஞ்சிய கல்லூரிப் பெண்களை உயிருடன் பேருந்தில் கொளுத்தினார்களே
  அது கூட நியாயம் தானா?

  இந்த அரக்கியின் காலடியில் கிடக்கும் தமிழ் அடிமைகளுக்கு மண்டையிலே என்ன ஆனது என்று பரிதாபப் பட வேண்டியது தான்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails