இலங்கையின் மெத்தனப் போக்கு ஏமாற்றமளிப்பதாக முகர்ஜீ கோபம்
Posted On Tuesday, 30 December 2008 at at 10:41 by Mikeதேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப்படுத்தாத இலங்கையின் மெத்தனப் போக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உக்கிர மோதல்களினால் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு அதிகாரப் பகிர்வினை துரித கதியில் அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வகட்சிப் பேரவையினால் முன்மொழியப்படும் தீர்வுத் திட்டமே இறுதித் தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தும் நோக்கில் சில மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், காத்திரமான வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தசாப்தங்களாக தொடரும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் ஒருபோதும் தீர்வினை எட்ட முடியாது எனவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எல்லைகள் மற்றும் இறைமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் சகல சிறுபான்மையினரது நியாயமான அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமையப்பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான தமது விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு தமிழகத்தின் ஆளும் கட்சி திமுக உள்ளிட்ட பல கட்சிகள் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
thanks http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1814:2008-12-30-14-56-37&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53
திருமங்களத்தில் தேர்தல். ஏதாவது சொல்ல வேண்டும். இல்லையேல் காங்கிரஸ் முகம் தொங்கிவிடும்.
யாரை ஏமாற்றப் பார்க்கிறார் இவர்?
காசாவில் குண்டு போடுவதை உடனே
எதிர்த்துப் பேச்த் தெரிகிற்து.ஈழத்தில் 6000க்கும் மேல் இரவு பகலாகப் பூமாலையா போடுகிறார்கள்.பிரனாப்,சோனியா,
மன்மோகன் உருவங்கள் தமிழகமெங்கும் கொழுத்தப்பட வேண்டும்.
மத்திய அரசைத் தமிழகத்தில் நடக்கவிடாமல் அனைத்து மத்திய அலுவலகங்களும் மூட வைக்க வேண்டும்.