சிவாஜிலிங்கத்திடம் அத்வானி உறுதி:போரை நிறுத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்

இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் அத்வானியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் சந்தித்து இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அப்பாவித் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து விளக்கினார்.

தமிழ் மக்களின் இன்னல்களைப் போக்க இந்தியா உதவ வேண்டும். இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தும்படி அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்த வண்டும் என்று அத்வானியிடம் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டார்.


அதனை ஏற்றுக்கொண்ட அத்வானி, இலங்கை இனச்சிக்கல் குறித்தும், அங்கு போரை நிறுத்த வேண்டியதன் தேவை குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக உறுதியளித்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து அத்வானியிடம் நான் எடுத்துக் கூறினேன்.

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க இருக்கும் கட்சி என்ற வகையிலும், இலங்கைத் தமிழரை பாதுகாக்கும் பொறுப்பு பாரதிய ஜனதாவுக்கு உண்டு என்று அத்வானியிடம் வலியுறுத்தினேன்.




அதனை ஏற்றுக்கொண்ட அத்வானி, இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தமது கட்சி குரல் கொடுக்கும் என்று என்னிடம் உறுதியளித்தார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்து கோவில்கள் இடிக்கப்படுவது பற்றி அத்வானியிடம் தாம் எடுத்துக் கூறியதாகவும், அதற்கு அத்வானி கடும் கண்டனம் தெரிவித்ததாகவும், சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் ரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து இலங்கை இனச்சிக்கல் தொடர்பாக ஆதரவு திரட்ட சிவாஜிலிங்கம் முடிவு செய்திருக்கிறார்.



நன்றி : புதினம்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails