தி.மு.க வின் மேல் சவாரி செய்யும் காங்கிரஸ்
Posted On Wednesday, 31 December 2008 at at 01:13 by Mikeமுதல்வர் அவர்களே உங்கள் கணக்கு தப்பாக போகிறது என்று நினைக்கிறேன், வரும் முன் காப்பது நல்லது.
இப்போது தமிழ் நாட்டில் நீங்கள் நினைப்பது போல் காங்கிரஸ் க்கு எந்த வாக்கு வங்கியும் இல்லை. மக்கள் அனைவரும் காங்கிரஸ் க்கு எதிராகவே உள்ளனர். இதில் வேறு இவர்களின் தமிழர்களுக்கு எதிரான நிலை மேலும் காங்கிரஸ்-யின் வாக்கு வங்கியை கடுமையாக குறைத்து விட்டது.
அவர்களின் இந்த நிலையால் தி.மு.க வின் ஓட்டுகளும் பாதிக்கப்படும், பெரும்பாலோர் இப்போது ஒரு குழப்ப நிலையிலே உள்ளனர், யாருக்கு ஒட்டு போடுவது, காங்கிரஸ் யுடன் கூட்டு வைத்த உமக்கு போடணுமா அல்லது தமிழின நிரந்தர தமிழின எதிரி ஜெ. ஒட்டு போட வேண்டுமா.
உம்முடைய காங்கிரஸ் பற்று தமிழின பற்றை விட அதிகமாக உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டால், காங்கிரஸ் அடுத்து சவாரி செய்ய, விஜய காந்தோ அல்லது ஜெ வோ கிடைப்பார். உமக்கு தோல்வி ஏற்பட்டால் அதற்கு முழுக்காரணம் காங்கிரஸே.
அப்போது உம் ஆட்சியை கலைப்பார்கள். யாரும் உமக்கு பரிதாப படபோவதில்லை. நல்ல வேண்டியதுதான் என்றே கூறுவார்கள். நீங்கள் சொல்வதும் காங்கிரஸில் எடுபடுவதில்லை. பிரணாப் முகர்ஜி யை அனுப்புவதற்கே இத்தனை காலம். உம் கூட்டணி மேல் விருப்பமும் இல்லை அவர்களுக்கு. காங்கிரஸை திருப்தி படுத்த இன்னும் எத்தனை கைதுகளோ.
உங்களின் தனிதன்மை, வாக்கு வங்கியை இழக்காதிர்கள்.
சிந்தித்து செயல் படுங்கள்.
சிறந்த கூட்டணி : திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தா.பாண்டியன், வி.காந்த்(முடிந்தால்), கண்டிப்பாக அடுத்த முதல்வர் நீங்கள்தான் இந்த கூட்டணி அமைந்தால்.
அதனால் காங்கிரஸை கழட்டி விட்டு இந்த கூட்டணிக்கு முயற்சி செய்யுங்கள்.
உண்மையை உரத்து சொன்னிர்கள் ஆனால் ஐயா அவர்களின் எண்ணம் கண்டிப்பாக இது இல்லை... கடைசி காலத்தில் வீண் பேர் ஏற்பட்டு மூத்தமகனால் இந்த இயக்கமும் அதில் இருப்பவர்களும் நாசமாக போவது உறுதி. இதே நிலைமை அதிமுக கட்சிக்கு இன்னும் பத்தாண்டு காலம் கழித்து நடக்கும்.
நன்றி
தமிழ் உதயன்
100% true .........
//
வி.காந்த்(முடிந்தால்),
//
ithukku congress-e mel.
வி.காந்த் oru thamizina thurooki