170 படையினர் பலி, 300 பேர் படுகாயம்;, 36 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் புலிகள் வசம்
Posted On Wednesday, 17 December 2008 at at 05:05 by Mikeஇலங்கையில் ஒரு பத்திரிக்கையிலும் இந்த செய்தி கிடையாது, இதெல்லாம் சகஜமப்பா, நாங்கள்லாம் 500 மேல செத்தாதான் செய்தி போடுவோம் என்கிறார்கள். சரி நம்ம த.து தினமலர் என்ன செய்தி போடறான் பார்க்கலாம் இது குறித்து. அப்படியே அந்தர் பல்டி அடிச்சு விடுதலை புலிகள் 170 சாவு அப்படின்னு கதை விடப்போறான்.
கிளிநொச்சியில் சிறீலங்கா படைகள் மேற்கொண்ட மூன்றாவது பாரிய முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதில், படைகள் தரப்பில் 170 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதுடன்,
300பேர் காயமடைந்துள்ளதாக, விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமாக புதன்கிழமை தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளார்.
புலிக்குளம், குஞ்சுப்பரந்தன், மலையாளபுரம், முறிகண்டி ஆகிய நான்கு முனைகளில் இருந்து படையினர் முன்னேறி வல்வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் முன்னரங்க போராளிகள் மேற்கொண்ட உக்கிரமான முறியடிப்புத் தாக்குதலில் பெருமளவிலான ஆயுதங்களும், படையிரது 36 உடலங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறினார்.
இன்று காலை 5:00 மணியளவில் ஆரம்பித்த மோதல் மாலைவரை நீடித்திருப்பதாகவும், கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களுக்குள் மேற்கொண்ட மூன்றாவது முன்னகர்வு முயற்சி இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
ஏ.கே-எல்.எம்.ஜி - 2
பி.கே-எல்.எம்.ஜி - 1
ரி-56 துப்பாக்கிகள் - 6
உட்பட பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட 28 உடலங்களையும், கிளாலியில் இன்று காலை கைப்பற்றப்பட்ட 8 உடலங்களையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகக் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
மன்னாரில் பெருமளவு இராணுவத்தினர்
இதேவேளை, மன்னார் பகுதியிலிருந்து பெருமளவான இராணுவத்தினர் படகுகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
30ற்கும் மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட பெருமளவான இராணுவத்தினர் மன்னார் - தலைமன்னார் வீதியில் வங்காலைப்பாடு கடற்படை முகாமில் இறக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கடற்படைக்கு சொந்தமான படகுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரியவருகிறது.
இராணுவத்தினரின் வாகனத் தொடரணிகள் காரணமாக வீதிகளில் பெருமளவான இராணுவத்தினர் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், பொதுப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பில் எந்தவிதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவம்
சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. நேற்றை தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் 32 உடலங்கள் விடுதலைப் புலிகளால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒருவர் சிறுவராக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிள் சிறுவர்களை படையில் இணைத்து வருவதாக சிறிலங்கா சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுவர் படையணி சிறிலங்கா இராணுவத்தில் இருப்பது அம்பலமாகியுள்ளது.
கருடன் கிளம்பிட்டுது.....
இனி சர்ப்பத்தின் கதை அதோ கதிதான்...
போர் வியூகங்களைச் சொன்னேன்.