இன்றைய விமானத்தாக்குதலில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவிப்பு

முந்தைய பதிவு பிரியாணி நன்றாக இருந்ததா நண்பர்களே, சரி ஒரு நேர உணவுக்கு கஷ்டப்படும் ஈழத்தமிழ் மக்களை நினைத்து பாருங்கள் ஒவ்வொரு முறை பிரியாணி சமைக்கும் போதும். ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்க்கு உதவுங்கள். இலங்கை அரசின் கோர முகத்தினை வெளிகாட்டுங்கள். தமிழ் இனதுரோகிகளின் முகத்திரையை கிழியுங்கள். தமிழீழத்தின் மேல் புதிய வகை குண்டு இப்போது போடப்படுகிறது இலங்கை அரசினால்.

தமிழ் ஈழமே அனைத்து புதிய குண்டுகளை, தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பயன்படுத்த சரியான இடமாம். பாவம் என் தொப்புள் கொடி உறவுகள், கேட்க நாதியின்றி இப்படி அழிந்து போகிறதே. யாராவது கேட்கமாட்டீர்களோ.

இன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/view.php?22OpDcc3nW34dC2h302HQU4d30jl0b99E2e2ILL3b37GYe

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    அந்த குண்கள் வெடிக்கும் விதத்தை இந்தலிங்கில் பார்கலாம்,
    http://video.google.com/videosearch?hl=ta&q=cluster+bomb&um=1&ie=UTF-8&sa=X&oi=video_result_group&resnum=4&ct=title#

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails