மகிந்த கும்பல் தப்பியோடும் காலம் மிக விரைவில்....

டாபுர் (Darfour) பிராந்தியத்தில் சுடான் அரசு தனது படைகள் ஒட்டுக்குழுக்கள் மூலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஐநா வலிந்த தலையீட்டை செய்து சுடான் என்ற இறையாண்மை கொண்ட நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

கொசோவோ மக்கள் மீது அட்டூழியங்களை படுகொலைகளை புரிந்ததற்காக கொசோவோவில் ஐநா வலிந்து தலையிட்டு சேபியா என்ற இறையாண்மை கொண்டநாட்டுக்கு எதிராக நெருக்கடி கொடுத்துள்ளது.

கொசோவோ தன் சார்பில் தனிநாட்டுப் பிரகடனமும் செய்துள்ளது. பொஸ்ணியா என்ற இறையாண்மை கொண்டநாடு தன்னாட்டு முஸ்லீம்களுக்கு எதிரான இனஅழிப்பு இனச்சுத்திகரிப்பை செய்ததற்காக ஐநா உள்ளிட்ட அமைப்புகள் வல்லரசுகளின் நெருக்குதல்களுக்கு உள்ளாகியது. அதன் தலைவர் கராட்சிக் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பன்னாட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவை இன்றுள்ள உலகில் நடப்பவை. ஸ்ரீலங்கா அரசு தமிழ்மக்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இது உலகத்துக்கு தெளிவாகத் தெரிந்த ஒன்று. இந்த இனஅழிப்பு 1948 தொடக்கமே நடத்தப்பட்டு வருகின்றது. இன்று வன்னியில் பெருங்கொடுமை ஸ்ரீலங்கா அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. கொசோவோபோல பொஸ்ணியா போல டாபுர்போலத்தான் ஸ்ரீலங்காவின் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தக்கொடுமைகளின் உச்சமாக பன்னாட்டு நிறுவனங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டு மக்களை பட்டினிபோடுதல்-மருந்துகளை தடுத்தல்- எறிகணைத்தாக்குதல் வான்குண்டுத்தாக்குதல் போன்றவை மூலம் அழித்தல் ஸ்ரீலங்காவில் நிகழ்த்தப்படுகின்றன.

ஐ நா நிறுவனங்கள் உணவளித்தல் மட்டும்தான் தன் பணி என்ற பாணியில் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றது. ஐ நா இங்குள்ள மனித அவலங்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டாலும் கூட அறிக்கைகள் செயற்பாட்டுக்கு வருவதில்லை. கொடுமைகளை நிறுத்தவோ ஸ்ரீலங்காவை தட்டிக்கேட்கவோ எவரும் ஆயத்தமாக இல்லை. நாடுகள் வெறுமனே அறிக்கைகள் கவலைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இறையாண்மை கொண்டநாடு என்ற பேரில் ஸ்ரீலங்காவுக்கு சாமரம் வீசுகின்றன. இறையாண்மை கொண்ட நாடு என்றால் அவை மனிதரை கொல்லலாம் அவலப்படுத்தலாம் பட்டினிபோடலாம் படுகொலை செய்யலாம் என்று உலகம் அங்கீகரிக்கின்றதா.

இன்று வன்னியில் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடம்பெயர்வு என்பது வன்னியில் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மன்னார் மடுவில் தொடங்கிய இடம்பெயர்வு இப்போது கிளிநொச்சி வரைக்கும் வந்திருக்கின்றது. மக்கள் எறிகணைத்தாக்குதல் வான்குண்டுத்தாக்குதல் மூலம் சிங்களம் விரட்டிக் கொண்டேயிருக்கின்றது. மக்களை அது மிகக்கொடுரமாக அவலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தமது நிலங்களில் வீடுகளில் கிணறுகளில் வாழ்ந்த மக்கள் தங்களின் வயல்களில் தங்களின் கடல்களில் தொழில் செய்த மக்கள் இப்போது வீதி ஓரங்களில் புழுதி எறியும் வெளிகளில் வெள்ளநீரோடும் பகுதிகளில் பழைய சீலைகளைச்சுற்றிவிட்டு வானம் பார்த்த நிலங்களில் வாழும் அவலத்தை சிங்கள அரச பயங்கரவாதம் திணித்துள்ளது.

இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மக்கள் வன்னியின் கிழக்குப்பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளனர். பெரும் பெரும் நகர்களின் பாடசாலைகள் அரச நிர்வாகங்கள் இல்லாம் தெருவுக்கு வெளிகளுக்கு விரட்டப்பட்டுள்ளன. கல்வியை மூலதனமாகக்கொண்ட மக்கள் வெட்டவெளிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது வரைக்கும் 60 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் இத்தகைய கொடுமைகளை புரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் விடுதலைப்புலிகள் தோற்றுப்போய்விட்டார்கள். அவர்களின் கிளிநொச்சி நகரும் கிடுக்கிப்பிடிக்குள் வந்து விட்டது என்று ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு எக்காளமிடுகின்றது. இதற்கான தகுந்த பதிலை விடுதலைப்புலிகள் கொடுப்பார்கள். மகிந்த கும்பல் தப்பியோடும் காலத்தை விடுதலைப்புலிகள் ஏற்படுத்துவார்கள்.

அதனை விடுதலைப்புலிகள் செய்துகாட்டுவார்கள். பார்பரோசாவுக்கு முடிவுக்காலம் என்று ஒன்று இருக்கின்றது. அதற்காகவே வன்னியில் மக்கள் மகிந்த படைகளின் அட்டூழியத்தால் ஏற்படும் அவலங்களை சகித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா அரசு தமிழ்மக்களுக்கு எதிரான கொடுமைகளைப் புரிந்து கொண்டு மறுபக்கம் ஐ நாவில் பன்னாடுகளின் ஆதரவைத்திரட்ட முனைகின்றது. ஐ நா கூட்டத்தொடருக்குச் சென்ற மகிந்த பரிவாரம் அங்குள்ள அரசுத்தலைவர்களைச் சந்தித்து தாம் தமிழர்களுக்கு நன்மை செய்வது போல காட்டிக்கொண்டுள்ளார்கள். மறுபக்கம் தமிழ்மக்கள் மீது கொடுமைகளைப்புரிந்து கொண்டுள்ளார்கள்.

இது ஐ நாவுக்கு தெரிந்த ஒன்று. வன்னியிலிருந்து ஐ நா உட்பட்ட தொண்டு நிறுவனங்களை ஸ்ரீலங்கா அரசு வெளியேற்றிவிட்டுள்ளது. இது தான் புரியும் மனித உரிமைகளை வெளியுலகம் அறியக்கூடாது என்பதற்காகவே. மனித உரிமை மீறல்க்கொடுமைகளை ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டபடி அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. உணவுத்தடை உட்பட்ட வகையில் இது நடக்கின்றது. தமிழ்மக்கள் மீது அவலங்கள் அதிகம் கொடுக்கப்படுகின்றன. ஸ்ரீலங்கா தரைப்படைத் தளபதி சரத்பொன்சேகா இலங்கைத்தீவு சிங்களவருக்கு உரியது என்றும் தமிழர் விரும்பினால் இணைந்து வாழலாம் எனவும் தமிழருக்கு தனித்து உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்றும் இனவாதம் கக்கியுள்ளார்.

அரசியல் வாதிகளுக்கு அப்பால் அதிகாரி ஒருவர் இனவாதம் கக்கியிருப்பது இங்கு குறிப்பாகப் பார்க்கப்படவேண்டியதாகும். புதிய படைத்துறை உத்திகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல களங்களை திறந்திருக்கிறது பொன்சேகாவின் உத்தியாகும். இத்தகைய உத்திகளில் ஸ்ரீலங்கா படைகள் வன்னியின் பல பகுதிகளிலும் விரிந்துள்ளன. இந்த விரிவுகள் எவ்வளவுக்கு அவர்களுக்கு வெற்றிதரும் என்பதை களங்கள் உறுதிப்படுத்தும். ஸ்ரீலங்கா அரசு வன்னிப்பகுதிக்கு உணவுப் பொருட்களை தாராளமாக அனுப்புவதாக தெரிவித்துக்கொண்டு மறுபக்கம்அவற்றை தடை செய்து பன்னாட்டுத்தரப்புக்கு நாடகம் ஆடுகின்றது.

குறிப்பாக கிளிநொச்சிக்கு பொருட்களின் வரவு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து ஸ்ரீலங்கா அரசால் தடுக்கப்படுகின்றது. ஆனால் கிளிநொச்சி உள்ளிட்ட வன்னியில் உணவுத்தட்டுப்பாடு இல்லை என்றும் தாம் பொருட்களை தொடர்ந்து தேவையான அளவு அனுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துவருகின்றனர். இது உலகத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை. பன்னாட்டு நிறுவனங்கள் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளைப் புரிகின்ற நிலையில் அதனை வெளியேற்றிய ஸ்ரீலங்கா அரசு அதனால் வன்னியில் நிவாரணப்பணிகளில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று காட்டுவதற்காக இந்த நாடகத்தை ஸ்ரீலங்கா அரசு நடத்துகின்றது.

இங்கு உலகத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அழுத்திச்சொல்லவேண்டும். அந்த உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. வன்னி உலகத்தமிழருக்கு பெரும் தலைநிமிர்வைக்கொடுக்கும் வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார்கள். இந்த வன்னித் தமிழர்களுக்குரியனவற்றை புலம்பெயர் தமிழர்கள் செய்தால் போதும். உலகத்துக்கு உரத்து உறைக்கச்சொல்லுங்கள். வன்னிமக்களை பாதுகாருங்கள்.

உலகத்தில் தலைநிமிர்வு கிட்டும். அதுவரைக்கும் உழைக்கவும். வரலாற்றில் தவிர்க்கமுடியாத சில கட்டங்களை வன்னியில் நாம் அனுபவிக்கின்றோம். ஆனால் நிச்சயம் வெற்றிபெறுவோம். தருவோம். யூதர்கள் இன்றும் இஸ்ரேலின் பலத்தை புலத்திலிருந்து தக்கவைத்திருப்பது போல தாய்மண்ணின் பலத்தினை புலத்தில் இருந்து சகல வழிகளிலும் தமிழர் வைத்திருக்கவேண்டும். இது விடுதலைக்கான வேண்டுகை.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    Capturing Kilinochchi will not solve anything. Kilinochchi was captured by SLA in 1997 as well and later on recaptured by LTTE. Capturing a place won't end this war. But giving a powerful solution to the ethnic issue will make tamil people to move away from armed struggle. But, so far what is happening in east with regards to Pillaiyan begging for power is not a good sign. That is why LTTE has been able to return to east, because the 'problem' was never solved. The same will happen in north even if SLA manages to capture Kilinochchi or even Mullaitivu. Wake up from your dreams and think about a solution and a future for the country.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails