மன்மோகன் அழுத்தம்: விடுதலைப்புலிகளு டன் பேச்சு நடத்துங்கள்

முதன் முறையாக மன்மோகன் கருத்து, இலங்கைச் சிக்கலுக்குத் தீர்வு காண்பது குறித்து விடுதலைப்புலிகளு டன் பேச்சு நடத்துங்கள். ஒரு வேளை பிரபாகரனுடன் பேச்சு நடத்த நீங்கள் விரும்பவில்லை என்றால், தமிழ்த் தேசிய கூட் டணியுடன் பேச்சு நடத்துங் கள் என்று கடந்த 13 ஆம் தேதி தம்மைச் சந்தித்த ராஜபக்சே யிடம் திட்ட வட்டமாகக் கூறிவிட்டார் என்று இந்திய அரசு வட்டாரங்களை மேற் கோள் காட்டி கொழும்பிலி ருந்து வெளியாகும் தி சண்டே லீடர் வார இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டணி யுடன் கலந்து பேசாமல் இலங்கை இனச்சிக்கலைத் தீர்ப்பதற்காக எடுக்கப்படும் எந்த முடிவும் பயனுள்ளதாக இருக்காது என்றும், ராஜபக் சேயிடம் மன்மோகன் சிங் கூறியதாக அச்செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.

அதை ஏற்றுக் கொண்ட ராஜபக்சே, தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சு நடத்த ஏற்கெனவே ஒருமுறை நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் பேச்சு நடத்த வர வில்லை. எனினும் மீண்டும் ஒரு முறை தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பேன் என்று உறுதிய ளித்ததாக சண்டே லீடர் தெரி வித்திருக்கிறது. இந்தியப் பிர தமரிடம் அளித்த உறுதி மொழிப்படி இலங்கை இனச் சிக்கல் குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழ் தேசியக் கூட் டணிக்கு ராஜபக்சே கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணியில் 22 நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ள னர். அவர்களுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தினால், அதன் விவரங்களைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளிடம் தெரி வித்து இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் நம்புவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டணி யில் 22 நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். விடுதலைப்புலி களுடன் பேச்சு நடத்த முடி யாத நிலையில் அவர்களுடன் பேசுவதுதான் சரியாக இருக் கும் எனப் பிரதமர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதி காரம் பெற்றுத் தர வேண்டு என்பதும், இனச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பதும் தான் இந்தியாவின் நிலை யாகும். இதற்காக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயுடன், பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி யும் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்று சண்டே லீடர் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://files.periyar.org.in/viduthalai/20081124/news05.html

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    நடக்கட்டும் விரைவில்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails