இதன் பொருள் என்ன? 800 டன் உணவுப் பொருள்கள் அனுப்புவது

இலங்கையிலே நடைபெறும் போர் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்குமே தவிர - அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்பது போன்ற ஒரு பொய்யான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இலங்கை இட்லர் மகிந்த ராஜபக்சேகூட இலங்கையில் வாழும் தமிழர்களை என் மக்கள் - எங்கள் மக்கள் என்று உரிமை கொண்டாடும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார் - அதனை உண்மை போல உலகத்திற்குப் பரப்பும் ஒரு பசப்பு வேலையில் இந்து ஏடு ஈடுபட்டுக் கொண்டுள்ளது.

தொடக்க முதலே பார்ப்பன ஏடுகள் அதிலும் குறிப்பாக இந்து ஏடு ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கை சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் தமிழகத்திலிருந்து கொண்டு கங்காணி வேலையைச் செய்துகொண்டுதான் வருகிறது.

இலங்கை அரசின் சிறீலங்கா ரத்னா விருதினைப் பெற்றுக்கொண்ட பிரகஸ்பதியாயிற்றே இந்து ராம்.

அந்த உப்புக்கு நன்றிக்கடன்பட்டவரல்லவா! அதனால் தான் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் வேலையைத் துல்லியமாகச் செய்துகொண்டு இருக்கிறார்.

இலங்கை இராணுவம் அங்குள்ள விடுதலைப்புலி களுக்கு எதிராகத்தான் குண்டுகளைப் பொழிந்துகொண்டு இருக்கிறதா? அப்படியானால், மருத்துவமனைகள்மீதும், பள்ளிகள்மீதும், குழந்தைகள்மீதும், குழந்தைகள் தங்கும் விடுதிகள்மீதும் குண்டுகளைப் போடுவது ஏன்?

மூன்று லட்சம் தமிழர்கள் அங்கு உள்நாட்டிலேயே அகதிகளாக அலைந்துகொண்டு இருக்கிறார்களே - அது எப்படி?

அங்கு வாழும் தமிழர்கள் வனாந்தரங்களுக்கு உல்லாசப் பயணம் சென்றிருக்கிறார்கள் என்றுகூட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதினாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

ஈழத் தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் அவர்கள் நிவாரண நிதி கேட்டு கொடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டு மக்கள் நிதியைக் குவித்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இந்திய அரசு 800 டன் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை அனுப்புவதாக அறிவித்துள்ளது. இதன் பொருள் என்ன? இலங்கையிலே தமிழ் மக்கள் பெரும் அளவு பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்கிற உண்மை பச்சிளம் குழந்தைக்குக்கூடத் தெரிந்துவிட்டதே - உலகம் பூராவும் டாம் டாம் அடித்துச் சொல்வதுபோல் இல்லையா இது?

இதற்குமேலும் இலங்கை சிங்களப் பேரினவாத அரசு - ஏதோ பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடுவது போலவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோலவும் பசப்புவதும், அதனை தேசியப் பத்திரிகை என்று மார்தட்டும் ஒரு ஏடு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புவதும் - எவ்வளவுப் பெரிய மோசடி!

பார்ப்பனர்கள் தமிழர்கள்மீது கொண்டுள்ள வெறுப்பும் - காழ்ப்புணர்வும் இன்று - நேற்று ஏற்பட்டதல்ல; ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக மனுவாத அடிப்படையில் இருந்துவரும் இரத்தத்தோடு பிறந்த வெறுப்பு நெருப்பு அது.

இன்றைக்குச் சூத்திரர்கள் என்று வெளிப்படையாக தமிழர்களைப் பார்த்துச் சொல்ல முடியாது; சொன்னால் பற்கள் இருக்காது - உடலைப் போர்த்திருக்கும் தோலும் மிஞ்சாது என்பது அவாளுக்கு மிக நன்றாகவே தெரியும். அதேநேரத்தில், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களைக் காட்டிக் கொடுப்பது - பழிவாங்குவது - குழி பறிப்பது என்கிற வஞ்சக வேலையை மட்டும் விடாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது - அதில் ஒன்றுதான்; ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பார்ப்பனர்கள் கொஞ்சம் கூடப் பிசிறு இல்லாமல் நடந்துகொண்டுவரும் வஞ்சகப் போக்கினை நாடு அறியும்.

தமிழர்களை பிறவிப் பகைவர்களாகக் கருதும் இந்தக் கூட்டத்தை அடையாளம் காண தமிழர்களுக்கு மேலும் இது ஒரு சரியான வாய்ப்பே!

Posted in |

3 comments:

  1. Anonymous Says:

    வணக்கம் அய்யா!
    உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் ஈழமக்களுக்கு படும் கரிசனத்தை விட திரு கருணாநிதிக்கு ஆதரவாக எழுதுவதே விஞ்சி நிற்கிறது. ஆரம்பத்தில் நான் அதிகம் உங்கள் வலைபக்கத்திற்கு வருவேன். இப்போதெல்லாம் வருவதில்லை. புரிந்து கொள்ளவும்.
    எனது கேள்விகளுக்கு பதில் சொல்லவும்,
    கலைஞர் 800 டன்னுக்கு ஒத்துக்கிட்டாரே, அதுதான் ஈழப்பிரச்ச்சனையா?
    தனி ஈழத்தை மத்திய அரசு ஆதரிக்கிறதா?
    ஊரெங்கும் வசூல் செய்து யாருக்கு அனுப்பப் போகிறார்?சிறீலங்க இராணுவத்துக்கா?
    இதைத் தான் அய்யா அந்த நெடுமாறன் செய்தார். அவரைப் பிடித்து உள்ளே போட்டாரே ஏன்?
    வைகோ சீமான் போன்றோர் வ்டுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்தாரே? அது எவ்வவளவு பெரிய தவறு? அப்படிப்பார்த்தால் அவரும் தானே விடுதலைப் புலிகளுக்கு கவிதை எழுதினர். தனக்கு ஒரு சட்டம் இன்னொருவனுக்கு ஒரு சட்டமா?
    இதைக் எனது வேண்டுகோளுக்கிணங்க பிரசுரிக்கவும். பிரசுரிக்காவிட்டால் நீங்கள் கலைஞருக்காக மட்டும் வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் என்று எம் மக்கள் உணருவர். நன்றி!

    தமிழன்

  2. Mike Says:

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தமிழன் அய்யா, அவர்களே. நானும் உங்களை பொன்று சராசரி தமிழநன்தான் ஈழ மக்களுக்கு விடிவு வராத என் ஏங்குபவன்களில் ஒருவன். கருணாநிதி இன்னும் அதிகம் பண்ணி இருக்கலாம் நானும் ஒத்து கொள்கிறேன். ஆனால் பண்ணவில்லை அதற்காக ஈழ தமிழனுக்கு பாடுபடுவதற்கு அவரை விட்டால் இன்றி வேறு நாதியில்லை அரசியல் தலைவர்களில். இது குறித்து ஒரு கட்டுரை எழுதுகிறேன் அய்யா.

  3. Anonymous Says:

    Read this anony

    http://arivili.blogspot.com/2008/10/blog-post_6607.html

    answers are there

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails