சிறிலங்கா படையினரால் மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளார் படுகொலை

உலகின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை, ஒரு அரசாங்கமே இப்படி மக்களை, பத்திரிக்கையாளர்களை, பொதுமக்களை கொலை செய்வது. ஒரு ஆயுத துணைகுழுவை வைத்து மக்களை கடத்துவது, கொல்வது. இவர்களிடம் என்ன சமாதனத்தை எதிர்பார்ப்பது.


சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகப்பணிப்பாளர் அருட்திரு எம்எக்ஸ் கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அருட்திரு எம்.எக்ஸ் கருணாரட்ணம் அடிகளார் தனது ஊர்தியில் பயணித்துக்கொண்டிருந்த போது சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் அணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு கிளைமோர் தாக்குதலை நடத்தினர்.

கிளிநொச்சியிலிருந்து மல்லாவி நோக்கி அவரது ஊர்தி சென்று கொண்டிருந்தபோது மல்லாவி மாங்குளம் வீதியில் அம்பாள்குளம் குழந்தையேசு கோவிலடிப்பகுதியில் இக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் அருட்திரு கருணாரட்ணம் அடிகளார் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails