ஏப்.28-ல் தொலைபேசி ஒட்டுகேட்பு சம்பவத்துக்குத் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
Posted On Sunday, 27 April 2008 at at 04:19 by Mikeமக்களுக்கு நல்லது செய்தே ஆட்சி பிடிப்பவர்களுக்கு மத்தியில் இவரை போன்ற
குறை கண்டுபிடித்தே ஆட்சி பிடிக்க நினைப்பவர்களை என்ன சொல்வது. இன்னுமா மக்கள் இவரை நம்பறாங்க. எதை எடுத்தாலும் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது நல்ல ஆரோக்கியமானா அரசியலுக்கு அழகல்ல அம்மையார் அவர்களே.
எங்க வீட்டு டாய்லெட்-ல தண்ணி போகமாட்டேங்குது கருணாநிதி ராஜினாமா செய்யனும் சொன்னா எப்படி இருக்கும் அது போல்தான் நீங்க பேசுவது. சும்மா சும்மா ஏதாவது குறை கண்டுபிடிச்சாதான் ஆட்சி பிடிக்க முடியும் என்று நினைக்காமல். மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணுங்கள், தொகுதிக்கு ஏதாவது பண்ணுங்கள்.
தொலைபேசி ஒட்டுகேட்பு சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று கருணாநிதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இம்மாதம் 28-ம் தேதி அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் அரசின் உயர் அதிகாரிகள் வரை அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி, சட்டசபையில் அதிமுக சார்பில் கேள்வி கேட்கப்பட்டதாகவும், இதற்கு பதிலளித்த முதல்வர், அதை சாதாரண விஷயம் என்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த ராம கிருஷ்ண ஹெக்டே மீது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தவுடன், இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனநாயகத்திற்கு விரோதமாக நிகழ்த்தப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று கருணாநிதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு, வருகின்ற 2-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.