கடந்த முறை விடுதலை புலிகள் மேல் பலி போட்ட மகிந்த அன் கோ, இந்த முறை முயற்சியில் வெற்றி கிட்டவில்லையோ, பாவம் தமிழின விரோதிகள்- ஜெ,சோ,சாமி,தினமலர், மகிந்

இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 59 பேரில் 47 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 60 மீனவர்கள் கடந்தவாரம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் அனைவரும் தூத்துக்குடி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அனைவரையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தூத்தூர் மீன்பிடி சங்கத்தினர் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும்பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்த தகவலறிந்தவுடன கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிறகு தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.

இத்னையடுத்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில் கடத்தப்பட்ட 59 மீனவர்களில் 49 பேரை இலங்கை அரசு நேற்றிரவு விடுவித்தது.

இவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீதமுள்ள 12 மீனவர்களும் கல்பட்டி என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினரிடம் பிடிபட்ட நான்கு படகுகளை ஓட்டிச் செல்வதற்காக அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்கள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails