அனைத்துலகத்திடம் பிச்சை பாத்திரத்துடன் நான் செல்லப்போவதில்லை: மகிந்த(பிச்சை தேடி வந்தால் மட்டுமே பிச்சை ஏற்று கொள்ளப்படும், அதை பிச்சை என்று சொல்ல)

..கூடாது. தமிழ் மக்களை அழிக்க தமிழ் நாட்டு வங்கிகளிடமே பிச்சை எடுக்க வேண்டும். வட்டியும், முதலுமாக சேர்த்து தமிழனின் உயிர் திருப்பி கொடுக்கப்படும். வட்டி விகிதம் குறித்து தளபதி சகோ இந்தியா சென்றுள்ளார். அவர் வந்த பின் அது முடிவு பண்ணப்படும். நாட்டின் அனைத்து பணமும் போருக்கே செலவழிக்கப்படும். அப்பதன் சிங்கள பேரினவாதம் அடுத்த முறை என்னை தெர்ந்தெடுக்கும். உலகம் என்னை நாறடிக்கும், அதை பற்றி கவலை கிடையாது. எந்த ஒரு நாடும் இதுவரை போருக்கு அப்படினன்னு கடன் வாங்கியதே கிடையாது

பேச்சுக்கு மட்டும் குறைச்சல் கிடையாது இவருக்கு


நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இரத்தினபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகிந்த பேசியதாவது:

அதிகளவானோர் அரசின் பக்கம் கட்சி தாவி வரத் தயாராக உள்ளனர். ஆனால் தற்போது அவர்களை ஏற்க நான் தயாரில்லை. அவர்களுக்கான கதவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நான் அதனை திறந்தால் அதிகளவானோர் அள்ளுப்பட்டு அரசின் பக்கம் வருவார்கள். சில ஊடகத்துறையினர் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்கின்றனர். நாட்டில் தற்போது அதிகளவான ஊடகச் சுதந்திரம் உள்ளது. ஞயிற்றுகிழமைகளில் வரும் பத்திரிகைகளில் இருந்து அதனை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சிலர் ஊடகச் சுதந்திரம் இல்லை என தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது டயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்ட பிணங்களை யாரும் பார்க்கிறார்களா? வடக்கு-கிழக்கில் கூட அப்படியான நிலைமைகள் இல்லை. நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை, சுதந்திரமாக வாழமுடியாது என்று சிலர் அனைத்துலகத்திற்கு காண்பிக்க முயல்கின்றனர் என்றார் அவர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails