இந்திய அணியின் கோச்சாக நமது அரசியல்வாதிகள் இருந்திருந்தால்







இந்திய அணி தோற்றாலும் தோற்றது.கேப்டனையும், கோச்சையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள்.இதே நிலைமையில் இந்திய அணியின் கோச்சாக நமது அரசியல்வாதிகள் இருந்திருந்தால் இதை எளிதில் சமாளித்திருப்பார்கள்.

இதோ மூப்பனார் கோச்சாக இருந்திருந்தால்

நிருபர்: இந்திய அணி ஏன் தோற்றது?

மூப்பனார்: அதை இந்திய அணியிடம் தான் கேட்கவேண்டும்.

நிருபர்:(குழப்பத்துடன்)நீங்கள் தானே இந்திய அணியின் கோச்?உங்களை கேட்காமல் வேறு யாரை கேட்பது?

மூப்பனார்:யாரை கேட்பது என்று என்னைக்கேட்டால் என்ன செய்வது?உங்களுக்கு யாரிடம் கேட்கவேண்டும் என தோன்றுகிறதோ அவரிடமே கேளுங்கள்.

நிருபர்:அதனால் தான் உங்களை கேட்கிறேன். இந்திய அணி ஏன் தோற்றது?

மூப்பனார்: இலங்கை ஜெயித்ததால் நமது அணி தோற்றது.

நிருபர்:இலங்கை ஏன் ஜெயித்தது?

மூப்பனார்:அதை இலங்கை அணியிடம் தான் கேட்கவேண்டும்.

நிருபர்:(தலையை பிய்த்தபடி)இலங்கை ஜெயிக்க நீங்கள் ஏன் விட்டீர்கள்?

மூப்பனார்: நான் எங்கே இலங்கையை ஜெயிக்க விட்டேன்?

நிருபர்:அய்யா..எனக்கு ஒண்ணுமே புரியலை.ரசிகர்களுக்கு கடைசியா நீங்க என்னதான் சொல்ல வர்ரீங்க?

மூப்பனார்:தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மலரும்போது கண்டிப்பா உலககோப்பையும் நமக்குத்தான்

(நிருபர் எழுந்து தலை தெறிக்க ஓடுகிறார்)

அடுத்து கலைஞர்

நிருபர்:இந்திய அணி ஏன் தோற்றது?

கலைஞர்: கன்னடனை கேப்டனாக போட்டு, கழக உடன்பிறப்பான தினேஷ் கார்த்திக்கை ஒதுக்கிவைத்ததால் தான் இந்தியா தோற்றது.மேலும் இந்த ஒளிபரப்பின் உரிமம் சூரியத்தொலைக்காட்சிக்கு வழங்கப்படாமல் சோனியான தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதும் தோல்விக்கு முக்கிய காரணம். மேலும் அணியின் "கேப்டன்" குடித்துவிட்டு ஆடியதும் தோல்விக்கு முக்கிய காரணம்.

நிருபர்: இந்த தோல்வியால் மனம் கலங்கியிருக்கும் தமிழ்ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

கலைஞர்:நமது அணி யாரிடம் தோற்றது? பச்சைதமிழனான முத்தையா முரளிதரனிடம் தானே?அதனால் தமிழன் ஜெயித்தான் என்று அனைவரும் சந்தோஷப்படுங்கள்.

(நிருபர் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார்)

அடுத்து அம்மா

நிருபர்: இந்திய அணி ஏன் தோற்றது?

அம்மா:இலங்கை அணி கேப்டன் கள்ள ரன் குவித்ததாலும், இலங்கை அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையே ஏற்பட்ட கள்ள ஒப்பந்தத்தாலும் தான் நமது அணி தோற்க நேரிட்டது.மேலும் அணியில் ஆதிராஜாராம், பாலகங்கா போன்ற துடிப்பான இளைஞர்கள் இல்லாததாதும் தோல்விக்கு ஒரு காரணம்.

நிருபர்:அப்ப இதுக்கு என்ன தீர்வு?

அம்மா: நமது கழக வழக்கறிஞர்கள் கொடுத்த தகவல்படி சட்டத்தில் இன்னும் ஒரு சின்ன ஓட்டை இருக்கிரது.அதாவது ஞாயிறன்று பெர்முடாவிடம் வங்கதேசம் தோற்றால் நாம் இன்னும் அரைஇறுதிக்கு செல்ல முடியும்.அதனால் நமது இந்திய அணிவீரர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுகிழமைக்குள் பெர்முடா குடியுரிமை வாங்கித்தர நமது வக்கீல்ஜோதி தலைமையில் ஒரு குழு விடாதுமுயன்றுவருகிறது.ஞாயிரன்று பெர்முடா அணியில் நமது அணிவீரர்களும் சேர்ந்து வங்கதேசத்தை தோற்கடித்து அதன்பின் மீன்டும் இந்தியகுடியுரிமை வாங்கி சூப்பர் எட்டுக்குள் நுழைந்து..



நிருபர் மயக்கம் போட்டு விழுகிறார்


















0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails