ராமர் பாலமும் அரசியலும்

இந்த நாடு முன்னேற வேண்டுமானால், தயவு செய்து இதிகாசங்களையும் புராணங்களையும் இணைத்து சில நல்ல திட்டங்களை கெடுத்து விடாதீர்கள் அவையாவும் வெறும் கதைகளே. இப்ப நமக்கு உள்ள பொழுதுபோக்கு, நம் முன்னவர்களுக்கு இல்லை, அதனால் நல்ல, சிறந்த கற்பனை வளத்தோடு எழுதப்பட்டவை இராமாயணம், மாகாபாரதம் இவைகள். நாமும் அதிலுல்ல நல்லவற்றை எடுத்துக்கலாம்.

நம்ம அரசியல்வாதிகல் எப்போதாவதுதான் மக்களுக்கு ந்ன்மை செய்வார்கள். இது ஒரு நல்ல திட்டம். அதிக பயனடைய போவது தென் மாவட்ட/மாநில மக்களே. இதுவரை அரசாங்கம் பெரிதாக எதுவும் தென் மாவட்ட மக்களுக்கு செய்துவிடவில்லை. இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த கட்சி பண்றது பிடிக்கறது இல்லை.

மதவாதிகள் மக்களை இன்னும் மூடனாதான் ஆக்க நினைக்கிறார்கள். கடவுள் இருக்கார்/இல்லை அது வேறு. அதை வைத்து பாமர மக்களை ஏமாற்றுவது பெரிய தவறு.

மத்த நாடுகள் நம்மை பத்தி தெரியும், என்ன சொன்னால் இவனுங்களை வளரவிட முடியாதுன்னு. இவனுங்களை ஒருத்தரை ஒருத்த்ர் அடிச்சிகிடுவானுங்க.

ராமரே வந்து ஒகே சொன்னாலும், ஒரு பெரிய கூட்டமே இருக்குது நல்லது நடக்க விடாமல் தடுப்பதற்கு.

சில நல்லது நடக்கனும்னா, கொஞ்சம் அசொளகரியங்கள் இருக்கதான் செய்யும்.

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails