Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

சிவாஜி படம், கலைஞர் டி.வி.யில் ஆகஸ்ட் 15-ம் தேதி ஒளிபரப்பாகாது

ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் ஜூன் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள சிவாஜி படம், கலைஞர் டி.வி.யில் ஆகஸ்ட் 15-ம் தேதி ஒளிபரப்பாகாது என ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

சிவாஜி படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டி.வி.க்கு கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் கலைஞர் டி.வி.யின் ஒளிபரப்பு தொடங்கும் நாளான ஆக.15-ம் தேதி சிவாஜி படம் -அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது சாத்தியமற்ற ஒன்று.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வகுத்துள்ள விதிகளின்படி, விநியோகஸ்தர்கள் மூலம் வெளியிடப்படும் புதிய படத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே சேனல்களில் ஒளிபரப்பு செய்ய முடியும். சிவாஜி படமும் விநியோகஸ்தர்கள் மூலமாகத்தான் ரிலீஸ் செய்யப்படுகிறது.

அதன்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிவாஜி படம் சேனல்களில் ஒளிபரப்பாகும் என்று ஏவி.எம். சரவணன் தெரிவித்தார்.

Posted in Labels: | 0 comments

ஹாலிவுட் நடிகருக்கு ரூ.1 1/2 கோடி கொடுத்து முத்தமிட்ட ரசிகை

ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபலங்கள் குறிப்பாக நடிகர்கள் பயன்படுத்தும் உடைகளிலிருந்து கைக்குட்டையிலிருந்து ஒவ்வொன்றையும் ஏலம் விடும் கலாச்சாரம் பரவி வருகிறது.

ஆனால் அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரை முத்தமிட ஏலம் விடப்பட்டது. ரசிகைகள் போட்டி போட்டு ஏலத் தொகையை ஏற்றினர். அமெரிக்காவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஜார்ஜ்குலூனி கலந்து கொண்டார். அப்போது எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டுவதற்காக ஏலம் ஓன்று நடத்தப்பட்டது. குலூனியை ரசிகைகள் முத்த மிடு வதற்காகத்தான் அந்த ஏலம்.

ஏலத்தில் வெல்பவருக்கு குலூனி முத்தம் தருவார் அந்த ரசிகையும் பதில் முத்தம் தரலாம்'' என்று அறிவிக்கப்பட்டது.

ஏலம் ஆரம்பித்தவுடன் ரசிகைகள் குலூனியை முத்தமிடும் ஆர்வத்தில் போட்டி போட்டு ஏலத்தை தொகையை கேட்டனர்.

இறுதியில் ஒரு பெண் ரூ.1 1/2 கோடி தருவதாக அறிவித்து ஏலத்தில் வென்றார். அந்த ரசிகைக்கு குலூனி முத்தம் கொடுக்கபதிலுக்கு தானும் முத்தம்கொடுத்து பரவசமடைந்தாராம் அந்த ரசிகை.

Posted in Labels: | 1 comments
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails