தெலுங்கர்களுக்கு இவ்வளவு சொரணை வருவது எப்படி? உப்பா? காரமா?

தெலுங்கர்களிடம் எனக்கு பிடித்த விடயம் எந்த சமரசத்திற்க்கும் போகாமல் கடைசிவரை போராடுவது.. இன்று தனிதனி மொழிபேசும் தேசியங்கள் உரிமையோடு வாழ்வதற்கு வழி சமைத்தவர் ஒரு தெலுங்கரே.. இன்று தமிழன் தமிழ்நாடு என்று மார்தட்டி கொள்வதற்கு காரணம் அவர்களே.. மொழிவாரி இனங்களை பிரிக்க கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து அவர்கள் லட்சியத்தை அடைந்தார்கள்..நமக்கும் வழி செய்து கொடுத்தார்கள்..யோசித்து பாருங்கள் இவ்வாறு இல்லாவிட்டால் நாம் இன்று கன்னடமோ தெலுங்கோ மலையாளமோ பேசி கொண்டு திரிந்து இருப்போம்..

நிற்க நாம் கூறவருவது.. தற்போது நடைபெற்றுவரும் தெலுங்கான போராட்டம்..அது கெட்டதா ? நல்லதா? என்ற ஆய்வுக்குள் செல்ல விரும்பவிலலை ..ஆனாலும் அந்த மக்களின் ..தலைவர்களின் போராட்ட குணத்தை பாருங்கள்.. இன்று மொத்த ஆந்திராவே கொந்தளிக்கிறது..10 நாட்களுக்கு மேலாக அரசு பணிகள் முடக்கம்.. மாநில ,மத்திய அரசினால் கூட கட்டுபடுத்த முடியாத தன்னார்வ எழுச்சி..

சற்றே நமது மாக்களை நினைத்து பாருங்கள்.. மானாட மார்பாட காணவில்லை என்றால் மறுநாள் எவனுக்கு வெளியில் வருவதில்லை..இரவு 11 12 மணிவரை தொல்லை காட்சிகளில் வரும் தொடர் நாடங்களை காணாமல் எந்த பெண்ணும் தன் கணவனை தொடக்கூட விடுவதில்லை..சொந்த வீட்டில் நிலைமை இவ்வாறு இருக்க.. இந்த சினிமா காரர்களின் அட்டகாசம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.. நடிகன -ரசிகன் என்ற மன நிலை மாறி தலைவன் - தொண்டன் என்று 10 படங்களில் தொடர்ந்து நடித்தால் வந்து விடுகிறது.. பெரும்பால ரசிக அடிப்பொடிகளின் நிலையை பாருங்கள்.. தலைவா! பல கோடி(?) தொண்டர்கள் இருக்கிறோம்.. எங்களை நீதான் வழி நடத்தவேண்டும்.. அவர் வழி நடத்த வில்லை என்றால் இவன் போய் சுடுகாட்டில் குடும்பத்தோடு படுத்து கொள்வான் போலிருக்கிறது.. இவ்வாறான தொடர்ந்து எந்த விடயத்திலும் சுயமாக முடிவெடுக்க தெரியாமல் ..தொடர்ந்து யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டும்.. அடிமைக்கு அடிமை புத்திதானே வரும்..யார் தலையிலாவது பொறுப்பை கட்டி விட்டு வீட்டுக்கு போய் இழுத்து படுத்து தூங்கினால் எவன் நம்மை மதிப்பான்?


இது போகட்டும் நமது அரசியல் வியாதிகளை தனியே எடுத்துகூற நமக்கு அவசியமில்லை உப்புதாள் போட்டு தேய்த்தாலும் சொரணை வருவது கடினம்.. என்றாலும் பின்வரும் படங்களிலும் செய்திகளிலும் உள்ள ஒப்பீட்டை உணருங்கள்

ஆந்திரா:

-நாளை சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்
- தெலுங்கானாவில் பெரும் பதட்டம்- தமிழக லாரிகள் அனைத்தும் நிறுத்தம்..
- ஆந்திராவில் தொடர்ந்து கலவரம்: தமிழக பஸ்கள் நிறுத்தம்-திருப்பதியில் கூட்டம் குறைந்தது!

- ராவ்-விஜயசாந்தி ராஜினாமா 82 எம்எல்ஏக்கள் விலகல்!
- தொடரும் வன்முறை: ரோசய்யா டென்ஷன்-எச்சரிக்கை!
- மாணவர்களின் மாபெரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி - ராவ்
-அமைகிறது தெலுங்கானா - முற்றுகைப் போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றம்
- பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா...
-மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை - ராவ்

[img]http://beta.thehindu.com/multimedia/dynamic/00015/IN03_TRS_15598f.jpg[/img]

தமிழ்நாடு:
இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது-கருணாநிதி
ஈழ உறவுகளை காக்க வேண்டி மனித சங்கிலி அனைவரும் கலந்து கொள்க!
ஈழத்திற்காக நாளை கடை அடைப்பு..
40 எம்பிக்களும் ராஜினாமா(?) செய்வார்கள்..
மெரினா கடற்கரையில் திடீரென உண்ணா விரதம்..
நான் கைகாட்டும் அரசு அமைந்தால் ஈழத்திற்கு படை அனுப்பி வைத்துவிட்டுதான் மறுவேலை-ஜெயலலிதா..
முல்லை பெரியாறு பிரச்சனை- உச்சநீதிமன்றம் கண்டிப்பு..உண்ணாவிரதத்தை கைவிட்டார் கருணாநிதி
உண்ணாவிரதத்தை கைவிட்டார் திருமா..
ஈழம் :ரத்த ஆறு ஓடும்-வைகோ..
நான்கே நாட்களில் ஈழதமிழருக்கு விடுதலை(முள்கம்பி சிறையிலிருந்தா? ஈழமா?)வாங்கி தந்த தலைவர் வாழக!

[img]http://transcurrents.com/tc/MKTC0427.jpg[/img]
[img]http://i4.ytimg.com/vi/SyHvvkBU1JM/default.jpg[/img]
[img]http://www.uktamilnews.com/wp-content/uploads/2009/10/cpi3.jpg[/img]

[img]http://www.tamilnet.com/img/publish/2008/10/02_10_08_cpi_04.jpg[/img]
[img]http://www.tamilnet.com/img/publish/2009/01/17_01_09_01_thiruma_front3.jpg[/img]

[img]http://i48.tinypic.com/20kpvl0.jpg[/img]


பின்குறிப்பு: நான் தெலுங்கனோ,மலையாளியோ கன்னடனோ கிடையாது.. எந்த ஓட்டு பொறிக்கிகளின் தொண்டனும் இல்லை.. 5000 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மூத்த இனம் அடிமையாக வெறும் 60 ஆண்டுகால வரலாற்றை உடைய நாட்டிடம் வீழ்ந்து கிடப்பதை பார்த்து வேதனைபடும் ஒருவ

Posted in |

7 comments:

 1. thamizhthesiyan Says:

  [b]தமிழர் சொரணை மீட்பு பொங்கல்..[/b]

  [img]http://www.dgreetings.com/newimages/pongal/animated/pongal2.gif[/img]

  வெற்று சவடால் அரசியல் மேடை பேச்சில் எச்சில் தெறிக்க..
  ஆட்டு மைந்தைகள் கர்சீப் கொண்டு அதை துடைக்க..
  மைக்கும் அதிர்ந்து தன்னை நிறுத்தி கொண்டது
  நம் வேலைக்கு இவர்கள் வேட்டுவைப்பார்கள் என்று..

  ஈழத்தில் உன்உறவுகள் செத்து கிடக்க..
  இவனோ தேரதல் பிரியாணியை தின்று நடக்க..
  சொறிநாய் ஒன்று காலை தூக்கியது இது கல்லோ என்று..

  தலைவனின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு அசையாமல் நின்றான் வேறுயாரும் கிழித்துவிடக்கூடாது என்று..
  தின்ன அசைந்து வந்த எருமை மாடு அவனை கண்டு ஒதுங்கிபோனது இவனை விட நாம் மேல் என்று..

  ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள்-என்னால் என்ன செய்யமுடியும்?
  காவிரி பறிபோகிறது என்னால் என்ன செய்யமுடியும்?
  முல்லை பெரியாற்றை உடைக்கபோகிறார்கள்- என்னால் என்ன செய்ய முடியும்?
  சினிமா தியேட்டர் கவுண்டரில் நின்றான் இன்று தன் தன்னால் முடியும் என்று..

  தம்பி தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறியரால் சுடபடுகிறார்கள் பதிலளித்தான் அது டீசல் கடத்துவதால் வரும் பிரச்சனை என்று..
  மீன்கடையில் மீன் விலையை கேட்டு திரும்பிநடந்தான் இன்று நம் வீட்டில் பிரச்சனை என்று..

  மராத்தியன் நைய புடைக்க..
  மலையாளி போட்டு தாக்க..
  கன்னடன் செருப்பால் அடிக்க..
  இந்திக்காரன் காறி உமிழ..
  நம்மவன் அனைவரிடமும் அடிவாங்கி சொன்னான்..
  வலிக்கலயே.. அவர்களும் நம் இந்திய சகோதர்களே! என்று..

  சீக்கியன் சொன்னான் தேசியத்திற்காக தலைபாகையை கழற்ற முடியாது நாங்கள் முதலில் சீக்கியர்கள் என்று..
  தமிழன் கட்டியிருந்த கோமணத்தை அவிழ்தான் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று..

  சீக்கியன் தன் மூதாதையர் வாளை வீரத்தோடு தன் இடுப்பின் சொருகினான் இது எங்கள் சின்னம் என்று..
  தமிழன் தன் மூதாதையர் வாளை பொருட்காட்சிக்கு கொடுத்தான் இது இந்தியத்தின் சின்னம் என்று..


  அந்நியர் தம் ஆக்ரமிப்பை எதிர்த்து வாளேந்திய தமிழனின் கை இன்று ..
  வெள்ளைத்தோல் மோகத்தால் வேறு எதையோ ஏந்தி நிற்கிறான்..

  தைத்திருமகளே நீ வருக.. தமிழர் தம் வாழ்வில் ஒளி தருக..
  தமிழன் வரலாறு தொடக்கம் என்றும் உனக்கு சிறப்பான இடமுண்டு..

  எதைச் செய்ய வேண்டும் என்று கூறு..
  மறந்துபோன வீரத்தை எம்மக்களுக்கு ஊட்டு..
  எதையும் ஏற்கும் துணிவைக் கொடு..
  தமிழக விடுதலை வேள்விக்குத் தயாராக்கு..
  எம்மை எதற்கும் துணிந்த இனமாக்கு..

 2. thamizhthesiyan Says:

  நன்றி தோழர் மைக் நாளை தைத்திருநாள் அதை ஒட்டி நான் இன்று எழுதிய கவிதையை தமிழ்மணத்தில் உலவ விட்டால் நன்றியறிதல் உடையேன் எனது வோட்பிரஸ் தளத்தை இணைத்தால் ஏனோ அது தமிழ்மணத்தில் வருவதில்லை..நன்றி

 3. Anonymous Says:

  super

 4. sathishsangkavi.blogspot.com Says:

  உண்மை...

 5. Mike Says:

  மன்னிக்கவும் தமிழ்தேசியன் தற்போதுதான் எந்து பின்னூட்டங்களினை படிக்க முடிந்தது.

 6. Anonymous Says:

  எப்படி அய்யா இந்த இனம் இப்படி ஈனமாக
  போனது . si.naa.manian

 7. Unknown Says:

  நீகள் சொல்வது உண்மை,.,இன்று தமிழகத்தில் கிட்ட தட்ட 40% மக்கள் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு மொழியை பேசுகின்ற மக்களாக இருக்கிறார்கள், இதான் காரணமகாக எவரும் தமிழுக்காக போராட வருவதில்லை ! மீதம் உள்ள மக்கள் 60 % ஜாதியால் பிரிக்கப்பட்டு ஓட்டுகள் சிதறுண்டு உண்மையான தமிழ் தலைவரை தேர்ந்தெடுக்க இயலாமல் போகிறது ப.மு.ஈஸ்வரமூர்த்தி

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails