ஈழத் தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி புதுடில்லியில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

புரட்சி வெடிக்கட்டும், சிங்களம் தெறிக்கட்டும். ஈழ மக்கள் காப்பற்றபடட்டும்.

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் கொடூர தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

புதுடில்லியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 வரை ஜந்தர்மந்தர் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாம்பியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர், பிரதமர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனுவினை கையளித்தனர்.

இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, டில்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails