கோவை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Posted On Sunday, 12 October 2008 at at 14:24 by Mikeமாண்வர்களும் சளைத்தவர்ல்ல, ஈழதமிழர்களை காப்பதில், மாணவர் புரட்சியே இந்த சரித்திரத்தை மாற்றலாம்,
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கோவையில் மாணவர்கள் நேற்று சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை சட்டக்கல்லூரி முன்பு அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் பொறுப்பாளருமான ந.பன்னீர்செல்வம் தலைமையில் சிங்கள அரசைக் கண்டித்து இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்று சிங்கள அரசையும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்