பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை
Posted On Saturday, 29 March 2008 at at 02:58 by Mikeபொய்யன் தினமலருக்கு சரியான ஆப்பு. ஒரு நாள் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரத்தான் போகிறது, தமிழின விரோதிகள் சோ, சாமி தினமலர் எல்லாம் துண்டை காணும் துணியை காணும்னு ஓடத்தான் போறானுங்க. தமிழாலே பிழைக்கும் இவர்கள் தமிழுக்கே துரோகம் பண்ணுவது என்ன நியாயம்.
பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது
இதெல்லாம் வெறும் கண்துடைப்பே. அப்பீல் செய்து லட்சமிபதியும், கிருஷ்ணமூர்த்தியும் தப்பிவிடுவார்கள்.
சில மனிதர்கள் புனிதர்களாக வேடம் போடுவதை அறியாத பாமரத்தனம் உள்ள மக்கள் ஒரு காரணம் அவர்களால் எவரையும் விலைக்கு வாங்க முடியும் என்ற கலையில் கைதேர்ந்த நிலை.
பொய்மல்ர்,துக்ளக்,இந்து
இழுத்து மூடப்படும் நாளே தமிழர்கட்கு
அடிமைத் தளத்திலிருந்து விடுதலை
கிடைத்த நாளாகும்.மூளை அப்போது
தான் சிந்திக்கத் தொடங்கும்.