புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.(திராவிட குஞ்சுகள் கவனிப்பார்களாக)
Posted On Monday, 3 March 2008 at at 22:45 by Mikeபெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநில தலைவர் லோகு ஐயப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:
இலங்கை ராணுவத்தினரால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இந்திய அரசு அவர்களுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதை நிறுத்தக் கோரியும் கடந்த 28.11.2007 அன்று அரியாங்குப்பத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த காவல் நிலையத்தில் மனு கோரியிருந்தோம்.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அரியாங்குப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன பொதுக்கூட்டம் நடத்த நீதிபதி அனுமதி அளித்தார்.
ஆனால் மீண்டும் புதிதாக காவல் நிலையத்தில் அனுமதி கோர வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் நிபந்தனை விதித்தார்.