மனித உரிமை மீறலில் ஈடுபடும் இலங்கையை உலக நாடுகளும் ஒதுக்க, இந்தியா கை கொடுக்குமாயின் அது இந்தியாவுக்கு கெட்ட பெயரையே கொடுக்கும்.
Posted On Sunday, 16 March 2008 at at 10:41 by Mikeஅனைத்து உலக நாடுகளும் இலங்கையை ஒதுக்க, இந்தியா மட்டும் கொஞ்சுகிறது, ஏன், ஏதற்காக இந்த வெறுப்பு தமிழர்களிடத்தில்
இந்திய அரசே நீ என்னுடைய வரிபணத்தில் என் சகோதரர்களை கொல்ல என்னால் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. எங்களின் உணர்ச்சிகளை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா அல்லது தமிழந்தானே என்ற நக்கலா.
நீ ஆதரவுதான் கொடுக்க வேண்டாம் ஈழத்துக்கு, கொஞ்சம் உன் உதவிகளை எதிரிக்கு நிறுத்து. அதை எம்மால் பொறுத்து கொள்ள முடியாது.
சிங்கள் படை திக்கு முக்காடுகிறது, ஒரு மாதத்தில் பிடிப்போம் என்றவன் ஒரு வருடமாகியும் ஒரு இஞ்ச் நகர முடியவில்லை. இவனுக்கு உதவ ஏன் துடியாக துடிக்கிறாய். தமிழர்கள் பிழைத்து விடுவார்கள் என்றா. உன்னுடைய வெளியுறவு கொள்கை ஒரு இனத்தை அழிக்குமானால் அதை மாற்று. நாரயணன் சொல்வதை நம்பாதே.