சசிகலா, பாஸ்கரனுக்கு ரூ.18 கோடி அபராதம்,
Posted On Monday, 24 March 2008 at at 03:24 by Mikeஇன்னுமா, இவனுங்களை தமிழகம் நம்புது, ஜோதி புட்டு, புட்டு வைச்சார், இப்ப கோர்ட் வேற, ஜெ அரசியல் முடிந்தது.
சென்னை:சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் பாஸ்கரனுக்கு, அன்னிய செலாவணி மோசடி வழக்கில், ரூ.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சென்னையில் துவக்கப்பட்ட ஜெ.ஜெ., `டிவி' சேனலுக்கு, வெளிநாட்டில் இருந்து சாட்டிலைட் கருவிகள் வாங்கப்பட்டன. ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளை மீறி, எலக்ட்ரானிக் கருவிகள் வாங்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து சேனலின் பங்குதாரராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள், 1996-97ம் ஆண்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.*இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய தடை பெற்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் `டிவி' சேனல் நிர்வாகத்திற்கு ரூ.12.50 கோடி, சசிகலாவுக்கு ரூ.6.30 கோடி, பாஸ்கரனுக்கு ரூ.9.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய அமலாக்க பிரிவுக்கு செலுத்த வேண்டிய மொத்த அபராதத் தொகை ரூ.18 கோடியே 20 லட்சம் ஆகும்.
:))))சாட்டையடி
:))) சாட்டையடி